என் மலர்
சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து தயாரிக்க உள்ள புதிய படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில், அவர்கள் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து ஏற்கனவே நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து வருகின்றனர். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காதலர் தினத்தையொட்டி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம், 3 நாளில் 50 கோடி வசூல் செய்துள்ளதாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந் தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா. அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், உப்பென்னா படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. அதன்படி இப்படம் மூன்று நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.
இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் பணியாற்றி உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ் எம் இயக்குகிறார். இவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர்.
மேலும் இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியிடுவதற்காக தயாராகிறதாம். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘டா டா பாய் பாய்’ எனும் பாடலை தனுஷ் பாடியுள்ளதாக தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், விரைவில் இப்பாடலை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். இப்பாடல் வரிகளை கானா வினோத் எழுதியுள்ளாராம்.
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் அரவிந்த் சாமி, 25 ஆண்டுகளுக்குப் பின் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.
அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’, ‘தலைவி’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி, புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஒட்டு’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஞ்சக்கோ போபன் உடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அரவிந்த் சாமி நடிப்பதால் இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அரவிந்த் சாமி கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு வெளியான தேவராகம் எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். தற்போது ஒட்டு படம் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்த் சாமி, நேரடி மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை. திருமணம் அவரவர் சொந்த வாழ்க்கை. சினிமாவில் நடிப்பது எனது தொழில். கடந்த வருடம் எனக்கு திருமணம் ஆனதில் இருந்து தொடர்ந்து கைவசம் படங்கள் இருக்கிறது.
திருமணம் ஆன பிறகு எல்லா பெண்களும் அவரவர் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டது. வேலைக்கு ஏன் வந்தீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை. ஆனால் திருமணமான நடிகைகள் மீண்டும் நடித்தால் மட்டும் திருமணம் முடிந்துவிட்டதே இன்னும் நடித்துக்கொண்டே இருக்கிறீர்களே? என்று கேள்வி கேட்கிறார்கள்.

திருமணமானால் நடிப்பது தவறா? இந்த ஆண்டு நான் நடித்த 4 படங்கள் திரைக்கு வர உள்ளன. அதை சொல்லியாவது அவர்கள் வாயை மூட வேண்டும் என்று எனக்கு ஆத்திரம் வருகிறது.'' இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
கடந்த 16 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த அருண் பாண்டியன், ரீமேக் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்
மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து தயாராகி இருந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெரிய போட்டிக்கு நடுவில் நடிகர் அருண் பாண்டியன் வாங்கினார். அதோடு இப்படத்தில் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹெலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அன்பிற்கினியாள்’ என பெயரிட்டுள்ளனர். கடந்த 16 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த அருண் பாண்டியன், இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தை கோகுல் இயக்கி உள்ளார். இவர் விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.
"என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.
அவர் ஒரு கட்டுரையில் மனைவி ராஜம் பற்றி கூறியிருப்பதாவது:-
"ஆரம்பத்தில் இருந்தே என் மனைவியின் மனப்பூர்வமான ஒத்துழைப்பு எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், நான் இவ்வளவு தூரம் சிறப்பு அடைந்திருக்க முடியாது. அப்போது இவள் செய்ததை `தியாகம்' என்றே சொல்லவேண்டும்.
எங்களுக்குத் திருமணம் நடந்த நாள் 31-5-1956. தஞ்சை மாவட்டத்தின் நன்னிலத்தில் இருந்த என்னையும், பல மைல்களுக்கு அப்பால் திருவனந்தபுரத்தில் இருந்த ராஜத்தையும் திருமணம் ஒன்று சேர்த்தது.
பெண் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன், "பார்ப்பதற்கு குமாரி கமலா மாதிரி இருக்கிறாள்'' என்றார். 18 வயது பாவையான ராஜம் என்னை கைப்பிடித்தபோது, நான் ஏ.ஜி.எஸ். ஆபீஸ் குமாஸ்தா. என்னுடைய இப்போதைய வளர்ச்சியை இவள் அப்போது கனவில் கூட கற்பனை செய்திருக்க முடியாது.
எனக்கு முதல் காதல் நாடகத்தின் மீதுதான். மனைவி, குடும்பம் எல்லாம் அப்புறம்தான். என் பெரும்பாலான இரவுகளை ஏ.ஜி.எஸ். ஆபீஸ் விழுங்கி விடும். புதிதாகத் திருமணம் ஆன இளம் தம்பதியாகிய நாங்கள் உல்லாசமாகப் பயணம் போவதோ, சினிமா பார்ப்பதோ, வெளியில் எங்காவது சென்று வருவது அவசியம் என்பது கூட என் மனதில் தோன்றாத அளவுக்கு அசுர உழைப்பு உழைத்து விட்டு வந்து படுக்கையில் விழுவேன்.
இப்படியிருக்க, நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே செல்ல நேரம் ஏது? ஆனால் இவள் கொஞ்சமாவது முகம் சுளித்தது இல்லை. குடும்பப் பொறுப்புகளையும் என் கண்ணில் காட்டியதில்லை. அதனால்தான் என் முழு கவனத்தையும், கலைத்துறைக்குத் திருப்ப முடிந்தது.
அன்று முதல் இன்று வரை, குடும்பப் பிரச்சினைகள் எதுவும் என் காதுக்கோ, கவனத்துக்கோ வராதபடி பார்த்துக் கொள்வதில் இவள் மிகவும் சாமர்த்தியசாலி. அந்த மாதிரி தொல்லைகளை எல்லாம் தன் தோளிலேயே தூக்கிப்போட்டுக்கொள்வாள்.
குடும்பம், கணவன், குழந்தைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சுழன்றால் போதும் என்ற மனோபாவம் கொண்டவள். அநாவசியமான நண்பர் குழாம், வம்பு பேச்சுக்கள், ஆடம்பரம், போலி கவுரவம், நகை ஆசைகள் இவை அனைத்துமே அவள் அகராதியில் இடம் பெறுவதில்லை.
கணவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக, `ஓகோ' என்றெல்லாம் புகழ்வதில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றால், "பிடிக்கவில்லை''தான். வழவழ கொழகொழ வெல்லாம் கிடையாது.
அலங்காரம், அலங்கார வார்த்தைகள், அகங்காரமான எண்ணங்கள் - இவை என்னவென்றே தெரியாதவள், அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலக குமாஸ்தாவின் மனைவியாக இருந்தபோதும் சரி, பிரபலமான திரைப்பட இயக்குனரின் மனைவியாக இருக்கும்போதும் சரி, அவள் "அவளாகவே இருக்கிறாள்.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
பாலசந்தரின் மனைவி ராஜம், தன் கணவர் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-
"எங்கள் கல்யாணம் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெரியவர்கள் செய்து வைத்ததுதான். எனக்குப் பாலக்காடு சொந்த ஊர். அப்பா ஹெல்த் இன்ஸ்பெக்டராகப் பல ஊர்களில் வேலை பார்த்தவர்.
என் திருமணம் நாகர்கோவிலில் நடந்தது. திருமணமானவுடனேயே சென்னையில் கோபாலபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அங்கு பல ஆண்டுகள் வசித்தோம்.
அந்த நாளிலும் சரி, இப்போதும் சரி அவர் வீட்டில் பகல் நேரத்தில் அதிக நேரம் இருப்பதில்லை. பட விஷயமான வேலைகளைக் கவனிக்க வெளியே சென்று விடுவார். இரவில் படுக்க எவ்வளவு நேரமானாலும் சரி, காலையில் ஆறு மணிக்கு மேல் தூங்க மாட்டார். எழுந்ததும் உடனே பல் தேய்த்துவிட்டு, ஒரு கப் காபி குடித்தவுடன் தான் மற்ற வேலைகளைக் கவனிப்பார்.
முன்பெல்லாம் தினமும் விடியற்காலையில் கடற்கரைக்குச் சென்று குறைந்தது இரண்டு மைல்களாவது வாக்கிங் போவார். இப்போது போவதில்லை. ஏனென்றால் இப்போது அவருக்கு ஏது ஓய்வு நேரம்?
முன்பு இவருக்கு அதிகமாக கோபம் வரும். அப்படி கோபம் வரும்போது இவர் எதிரில் யாரும் போகமாட்டோம். ஆனால் வந்த வேகத்திலேயே அது மறைந்து போய் விடும். இப்போதெல்லாம் இவருக்கு வீட்டில் கோபம் வந்து பார்ப்பது ரொம்ப அபூர்வம்.
வீட்டில் அவருடைய புத்தகங்களோ மற்றும் பேனா பேப்பர் போன்ற பொருள்களோ அவர் வைத்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். அவை அவர் தேடும்போது இடம் மாறிவிட்டால் அவருக்குப் பிடிக்காது.
பலருடைய பாடல்களை டேப்புகளில் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறார். எப்பொழுதாவது அபூர்வமாகப் பொழுது போகாமல் வீட்டில் இருக்கும்போது தமக்குப் பிடித்த பாடல்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். பாட்டுக் கச்சேரிக்கோ, கதா காலட்சேபங்களுக்கோ போக அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. போக வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. `டேப்பின்' மூலம் அந்த ஆசையை நேரம் கிடைக்கும்போது நிறைவேற்றிக் கொள்கிறார்.
அவர் சினிமாவுக்காக, தான் எழுதிய கதையைப் பற்றி என்னிடம் அபிப்ராயம் எதுவும் கேட்க மாட்டார். பொதுவாக யாரிடமுமே அவர் கேட்பதில்லை. முன்பெல்லாம் படம் மூவாயிரம் அல்லது நாலாயிரம் அடி வளர்ந்த பிறகு என்னை அழைத்துக்கொண்டு போய் படத்தைப் போட்டுக் காண்பிப்பார். அப்போதும்கூட என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்கமாட்டார். இப்போது படம் முடிந்து வெளியிடப்பட இருக்கும் சமயத்தில்தான் வீட்டில் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போய் படத்தைக் காண்பிக்கிறார்.
புதுப்படம் ஆரம்பிக்கும் நாளில் கூட இவர் எவ்வித டென்ஷனும் இல்லாமல் என்றும் போலவே இருப்பார். அதேபோல இவர் டைரக்ட் செய்த புதுப்படம் ரிலீஸ் ஆகும் அன்றும் இவர் சாதாரணமாகவே இருப்பார். அதற்காக ஸ்பெஷலாகக் கோவிலுக்குப் போவதோ, பூஜை செய்வதோ அதெல்லாம் இவரிடம் கிடையாது. மனதிற்குள்ளே கடவுளை வேண்டிக்கொள்வார் என்று நினைக்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்று சுறுசுறுப்பாய்ப் பணியாற்றும் இவர், வெளிப்படையாக கடவுளிடம் எதையும் வேண்டிக்கொண்டதை நான் பார்த்ததில்லை.
ரசிகர்களிடமிருந்து இவருக்கு நிறையக் கடிதங்கள் வருகின்றன. அவற்றிற்கு உடனுக்குடன் பதில் எழுத நேரம் கிடையாது. ஆனால் இனிமேலும் சேர்ந்தால் சமாளிக்க முடியாது என்கிற அளவிற்கு கடிதங்கள் குவிந்து விடும் பொழுது ஒரே நாளில் எல்லாவற்றையும் பார்த்து முக்கியமான கடிதங்களுக்குப் பதில் எழுதி விடுவார்.
எதையும் செய்யாமல் ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார இவரால் முடியாது. இதனால் இவர் காரில் ஏறிக்கொண்டால் கார் வேகமாகப் போகவேண்டும். டிரைவரிடம் சீக்கிரமாகப் போகும்படி சொல்வார். முன்பு இவரே டிரைவிங் செய்து கொண்டிருந்தார். இவர் ஓட்டும்பொழுது வேகமாக ஓட்டுவார். இவர் இப்போது காரை ஓட்டுவதில்லை.
இவ்வாறு ராஜம் பாலசந்தர் கூறியுள்ளார்

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான சுஜாவின் லிப் லாக் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் நடிகையாகவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் வந்தவர் சுஜா. படங்களில் நடித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடம் பெரிதளவில் கொண்டு சேர்த்தது.

சமூக வலைத்தளத்தில் நடிகை சுஜா வருணி வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குழந்தை வளர்ப்பு டிப்ஸ், காஸ்ட்டியூம், அழகு குறிப்பு என பயனுள்ள பதிவுகளை பதிவிடும் சுஜாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தனது கணவருடன் காதலர் தின நாளில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். லிப்லாக் கொண்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்.எஸ். டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகரான சந்தீப் நஹார், அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ், டோனியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் எம்.எஸ். டோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சுஷாந்த் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் பாலிவுட்டில் மிகப்பெரிய புயலை கிளப்பியது. அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது காதலிதான் தற்கொலைக்கு துண்டினார் என குற்றச்சாட்டு எழுந்தது. அவரது மரணம் தற்கொலையா? தூண்டப்பட்டதா? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதே படத்தில் நடித்திருந்த மற்றொரு நடிகரான சந்தீப் நஹார், இன்று மும்பை கொரேகானில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். டோனி படத்தில் இவர் சுஷாந்திற்கு நண்பனாக நடித்துள்ளார்.
தற்கொலை செய்வதற்கு முன் சந்தீப் நஹார், வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனை அடைந்ததாகவும், சிறு விசயத்திற்குக்கூட மனைவி அடிக்கடி சண்டையிடுவார் என்றும், இதனால் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவிற்கு மோசமான முடிவை எடுக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஊர்வசி, பல வருடங்களாக நினைத்தது நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஊர்வசி. 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் குழலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.

அதில் ஊர்வசி பேசும்போது, பல வருடங்களாக எனது அண்ணன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், ஆனால் நடக்கவில்லை. தற்போது அண்ணன் ஒரு படம் எடுத்திருக்கிறார். அதை நினைத்து நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனந்த கண்ணீருடன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்படத்தை செரா.கலையரசன் இயக்கி இருக்கிறார். காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஆரா இணைந்து நடிக்கிறார். டி.எம்.உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும் தியாகு படத்தொகுப்பினை மேற்கொள்கிறார்கள். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தன்னுடைய பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார்.
இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது.

இந்நிலையில், அயலான் படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் நெற்றியில் குங்குமம் வைத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனம் ஷெட்டி பதிவேற்றினார். இதனால் அவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்த சனம் ஷெட்டி தனது வீட்டில் திருமணமான பெண்களுக்குத் தான் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்றும் விளக்கமளித்தார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருவரது கையைப் பிடித்தபடி நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருக்கிறீர்கள் மோன். காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி.” என்று புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அந்த அதிர்ஷ்டசாலி யார், மோன் என்பது யார் என்று கூறுங்கள் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் ஒரு சிலர் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.