என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புடவையை கிழித்து போட்டோஷூட் நடத்திய சின்னத்திரை பிரபலத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் பவித்ரா லட்சுமி என்பவர் கலந்துக் கொண்டு கவனம் பெற்று வருகிறார்.

    இந்நிலையில் தற்போது பவித்ரா லட்சுமி போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அதில் பட்டு புடவை கட்டியிருக்கும் அவர் தொடை தெரியும் அளவிற்கு கத்தரிகோலால் வெட்டி கிழிந்திருக்கும் படி போஸ் கொடுத்துள்ளார்.

    பவித்ரா லட்சுமி

    ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
    அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் வேற லெவல் ஆக்‌ஷன் என்று பிரபல நடிகர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார்.
    அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

    ஆர்.கே.சுரேஷ் - நீரவ்ஷா

    இந்நிலையில், ஒளிப்பதிவாளரை நேரில் சந்தித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ், அவருடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும், வலிமை படத்தில் தல அஜித் வேற லெவலில் ஆக்‌ஷன் செய்திருக்கிறார் என்று பதிவு செய்திருக்கிறார்.
    பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை கொடுத்த மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    பரியேறும் பெருமாள் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜாக்சன் ராஜ், தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். யுஎஸ் ஃபுரூட்ஸ் சார்பில் தங்கதுரை தயாரிக்கும் புதிய படத்தை யுவன் சங்கர் ராஜாவின் படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றிய அல்ரூபியான் இசையமைக்கிறார்.

    இப்படம் பற்றி இயக்குனர் ஜாக்சன் ராஜ் கூறும்போது, “நாயகன் ஏ.கே.ஆனந்த், நாயகி ஜெஸ்சி என இந்தப்படத்தில் நடிக்கும் அனைவருமே திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த புதுமுகங்கள் தான். பரியேறும் பெருமாள் படத்தில் பணியாற்றியபோதே ஆடிஷனில் கவனம் செலுத்த பயிற்சி கொடுத்திருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதனால் என்னுடைய படத்தில் கதாபாத்திர தேர்வுக்கு அது ரொம்பவே உதவியாக இருந்தது.

    ஏ.கே.ஆனந்த் - ஜெஸ்சி

    ஒரு அனாதை இளைஞனின் பாசபோராட்டம் கலந்த வாழ்க்கை தான் இந்தப்படத்தின் கதை. எந்த ஊராக இருந்தால் என்ன, எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படம் போல இந்தப்படமும் பார்வையாளர்களிடம் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

    இந்தப்படத்திற்காக கலவரம் நடப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்க திட்டமிட்டோம். ஆனால் அதுவரை அன்பாக பழகி ஆதரவு அளித்த மூன்று ஊர் மக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், மறுநாள் படப்பிடிப்பு நடக்குமோ நடக்காதோ என சந்தேகத்துடன் நாங்கள் சென்றபோது, எதிர்பாராமல் திரண்டு வந்த மூன்று ஊர் மக்களும், எங்களின் நோக்கத்தை புரிந்துகொண்டு, படப்பிடிப்பு நடத்த முழு ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க முடியாத அனுபவம்” என்கிறார் இயக்குனர் ஜாக்சன் ராஜ்.
    'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான புகழின் வளர்ச்சியை ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.
    'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சந்தானத்துடன் ஒரு படம், அருண் விஜய்யுடன் ஒரு படம் என கவனம் செலுத்தி வருகிறார். அஜித் நடித்து வரும் வலிமை படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

    இவர் ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாகவும், பின்பு தனியார் தொலைக்காட்சியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கடின உழைப்பினால் முன்னேறியதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

    புகழ்

    இந்நிலையில் புகழ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் புதியதாக விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போ கார் தொடச்சு 10 ரூபா வாங்கிட்டு இருந்தேன்... இப்போ சொந்தமா காரே வாங்கிட்டேன் என்று கூறுகிறார். மேலும் தனது ரசிகர்களுக்கு அந்த காரை அறிமுகப்படுத்தி வைத்து அவர்களையும் தன் வழியில் உழைத்து வாழ்க்கையில் உயர உற்சாகப்படுத்தி உள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
    சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜெண்ட் சரவணன் ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
    நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான விளம்பரங்களில் லெஜெண்ட் சரவணன் தானே நடித்து பிரபலமானார். இவர் தன்னுடைய தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் முதல் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜெண்ட் சரவணன் அறிமுகமாகிறார். இரட்டை இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இந்த படத்தை இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபு, விவேக், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


    அமீரை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கும் பிரபல இயக்குனர், நீக்கிய காட்சிகளை சேர்த்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.
    இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் நாற்காலி படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த படத்தை 7 வருடங்களுக்கு முன்பு பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற பெயரில் இயக்கிய சந்திரன் 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விலகினார். பின்னர் தலைப்பை எம்.ஜி.ஆர் பாண்டி என்று மாற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா சில காட்சிகளையும், அமீர் சில காட்சிகளையும் இயக்கினர்.

    பின்னர் இயக்குனர் வி.இசட் துரையிடம் படத்தை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். அவர் கதையில் யாரும் தலையிடக்கூடாது என்று உறுதிமொழி பெற்று படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைத்தார். ஏற்கனவே எடுத்த காட்சிகள் சிலவற்றை பிளாஷ்பேக்காக வைத்து கதையில் மாற்றங்கள் செய்து படப்பிடிப்பை முடித்தார்.

    அமீர் - வி.இசட் துரை

    ஆனால் துரை நீக்கிய காட்சிகளை மீண்டும் அவருக்கு தெரியாமல் படத்தில் சேர்த்து விட்டதாக சர்ச்சைக்கிளம்பியுள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கிறார் துரை. இருட்டு வெற்றி படத்தை கொடுத்த துரைக்கு இந்த மனஉளைச்சல் தேவையா என்று திரை உலகினர் முணுமுணுக்கின்றனர்.
    ஜே பார்த்திபன் இயக்கத்தில் ராய் லட்சுமி, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் மிருகா படத்தின் முன்னோட்டம்.
    'ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்  ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் ‘மிருகா’. இப்படத்தில் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.வீ.பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.

    மிருகா படக்குழு

    இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான்.  அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா'.
    விக்கி ரனாவத் இயக்கத்தில் அர்பித் சோனி, இனாயத் சர்மா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘திருட்டு அழகி’ படத்தின் விமர்சனம்.
    கல்லூரியில் பயின்று வரும் 3 நண்பர்கள் பார்ட்டி கொண்டாடுவதற்காக கோவா செல்கிறார்கள். அங்கு ஜாலியாக சுற்றிவிட்டு ஊர் திரும்புகிறார்கள். அப்போது அர்பித் சோனி தனது வீட்டில் இரண்டு நண்பர்களுடன் இருக்கும் போது, ஒரு பெண் வீட்டுக்கு வருகிறாள். அவளை பார்த்ததும் அழகில் மயங்கும் இவர்கள் மூவரும் அப்பெண்ணை தங்களது வீட்டில் தங்க வைக்கின்றனர்.

    அவர்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ளும் அந்தப் பெண், சென்ற இடத்தில், தனது கைவரிசையை காட்டுகிறாள். அங்கிருக்கும் நகை பணத்தை கொள்ளையடித்துவிட்டு செல்கிறாள். இதையடுத்து அந்த நண்பர்கள் மூவரும் அந்த பெண்ணை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.
    திருட்டு அழகி விமர்சனம்

    நண்பர்களாக நடித்திருக்கும் அர்பித் சோனி, அன்கூர் வர்மா, மோகித் அரோரா ஆகிய மூவரும் ஓவர் ஆக்டிங் செய்து புதுமுகங்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள். நாயகி இனாயத் சர்மா கவர்ச்சியில் தாராளம் காட்டி உள்ளார். மற்றபடி நடிப்பில் பெரிதாக சோபிக்கவில்லை.

    முழுக்க முழுக்க அடல்ட் காமெடி படமாக இப்படத்தை எடுத்துள்ளனர். பிகினி காட்சிகள் தான் படத்தில் ஏராளமாக உள்ளன. டப்பிங் சரிவர எடுபடவில்லை. டப்பிங்கில் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகாதது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ். 

    திருட்டு அழகி விமர்சனம்

    கிளாமரையும் அடல்ட் காமெடியை மட்டும் நம்பியே இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் விக்கி ரனாவத். கதை, திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்.

    நேர்த்தியான ஒளிப்பதிவால் கோவாவின் அழகை திரையில் கொண்டுவந்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ககரின் மிஷ்ரா. ஹர்மோனியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். 

    மொத்தத்தில் ‘திருட்டு அழகி’ கவர்ச்சி. 
    நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்திறமை கொண்ட ஆர்.ஜே.பாலாஜி, அடுத்ததாக பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளாராம்.
    பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

    இந்நிலையில், இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை அவரே இயக்கவும் உள்ளாராம். ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பதாய் ஹோ பட போஸ்டர்

    மேலும் இந்த திரைப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என்று தலைப்பு வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே தலைப்பில் பாக்யராஜ் ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ள நிலையில், இந்த தலைப்புக்காக ஆர்.ஜே.பாலாஜி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    டாக்டர் படத்திற்காக அனிருத் இசையில் உருவாகி உள்ள செல்லம்மா பாடல் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

    கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

    இப்படத்தில் இடம்பெறும் ‘செல்லம்மா’ என்கிற பாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டது. அனிருத், ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்த இந்தப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. யூடியூபிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. 

    அந்த வகையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் அதாவது 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதனைக் கொண்டாடும் விதமாக ‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’ என குறிப்பிட்டு ஒரு சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். டாக்டர் திரைப்படம் வருகிற மார்ச் 26ந் தேதி ரிலீசாக உள்ளது.
    கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா, தற்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.
    தெலுங்கில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், மீண்டும் ‘டியர் காம்ரேட்’ எனும் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெளியான சமயத்தில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. இதனால் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர்.

    விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

    இந்நிலையில், அவர்கள் இருவரும், மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சுகுமார் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திலும் ராஷ்மிகா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கீர்த்தி சுரேஷ் - மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
    16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

    இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

    மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் பட போஸ்டர்

    இப்படத்தை கடந்தாண்டு மார்ச் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து வருகிற மார்ச் 26-ந் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் மாற்றி உள்ளனர். அதன்படி வருகிற மே 13-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    ×