என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக ‘மரகத நாணயம்’ இயக்குனருடன் இணைந்துள்ளார்.
தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். ‘மரகத நாணயம்’ படத்தைப் போன்று இதுவும் திரில்லர் காமெடி படமாக உருவாகி வருகிறதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் குறுகிய காலகட்டத்தில் மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி, விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர் ஒன் நடிகையாகி விட்டார்.
அந்த வகையில் தற்போது அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்தபடியாக ஜூனியர் என்டிஆரின் 30ஆவது படத்தையும் கைப்பற்றியுள்ளாராம். அவர் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை.

திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்திற்காக ராஷ்மிகா, பாலிவுட் நடிகைகளான ஆலியாபட், கியாரா அத்வானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். வருகிற மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. 2022 ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. கடந்த 2016-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது.
இதனிடையே இப்படம் வருகிற மார்ச் 5-ந் தேதி ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று இந்த படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அது வெளியான பின்பே ரிலீஸ் தள்ளிப்போவதற்கான காரணம் தெரியவரும்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் மார்ச் 5-ந் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘அமலா’ திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள் தேர்வாகி இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட "அமலா" திரைப்படமும் தேர்வாகி இருந்தது.
இப்படம் திரையிடப்பட்ட போது, சில நொடிகளிலேயே ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளதாகவும், படம் முடியும் வரையிலும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது நாற்காலி முனையில் அமர்ந்தபடியே படத்தை பார்த்து ரசித்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஸ்ரீகாந்த், அப்பாணி சரத், அனார்கலி மரிக்கர் ஆகியோரின் நடிப்பு தங்களை வெகுவாக கவர்ந்ததாக ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குனரிடம் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குனர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான ஸ்ரீகாந்த், அப்பாணி சரத், அனார்கலி மரிக்கர், இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை முஷினா நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இதற்கு, லிஜின் பொம்மினோ இசையமைத்துள்ளார்.
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தும் கூட இன்னும் தமிழ் சினிமாவில் இயல்பு நிலை திரும்பவில்லை என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. பரவல் குறைந்த பிறகு பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவை பொறுத்தவரை மார்ச் மாதம் முதல் வாரத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் தான் திறக்கப்பட்டன. இதன் காரணமாக திரையுலகில் பெரிய நடிகர்கள், நடிகைகள் முதல் திரையரங்கு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு மட்டும் தமிழ் சினிமா தனது வழக்கமான வசூலில் 85 சதவீதம் வரை இழந்துள்ளது. 2019-ம் ஆண்டு 5613 கோடி ரூபாயாக இருந்த தமிழ் சினிமா வசூல் 2020-ம் ஆண்டில் வெறும் 861 கோடியாக 85 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது 2018-ல் 4422 கோடியாக இருந்து 2019-ல் 30 சதவீதம் வரை உயர்ந்தது.
வழக்கமாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் 250-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும். 2019-ம் ஆண்டு மட்டும் 246 படங்கள் வெளியாகின. ஆனால் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெறும் 75 படங்களே வெளியாகின. பொது முடக்கத்துக்கு முன்பு 68 படங்களும் பொது முடக்கத்திற்கு பின்னர் 50 சதவீத இருக்கை அனுமதியின்போது 7 படங்களும் தான் வெளியாகின. பொது முடக்கத்துக்கு முன்பு 825 கோடியும் முடக்கத்துக்கு பின்னர் 36 கோடியும் வசூலாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு படங்களின் தயாரிப்பு, வெளியீடு இல்லாமல் போனதால் நிறுவனங்களும் செலவுகளை குறைத்தன. இதனால் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 403 கோடியாக இருந்த இழப்பு இரண்டாம் காலாண்டில் 288 கோடியாக குறைந்தது. திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்ட 3 வது காலாண்டில் 71 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின், தண்ணீர் உபயோகம் குறைந்தது, பணியாளர்களுக்கான சம்பளம் குறைப்பு போன்ற வற்றால் இழப்பு குறைந்தது.
திரையரங்குகள் திறக்கப்பட்டு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தும் கூட இன்னும் தமிழ் சினிமாவில் இயல்பு நிலை திரும்பவில்லை. மாஸ்டர் படத்துக்கு முன்னும் பின்னும் வெளியான எந்த படமும் வெற்றியடையவில்லை. இதனால் படங்களை திரையரங்குகளில் வெளியிட தயங்கும் நிலையே நீடிக்கிறது.
எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருந்த பிரியா ஆனந்த், தற்போது மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளாராம்.
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன.
இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். மேலும் இப்படத்தை இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து அவரும் இயக்க உள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே எல்.கே.ஜி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் நடிகர் சத்யராஜும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமனிதன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் சீனு ராம்சாமி வெளியிட்டுள்ளார்.
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மாமனிதன் தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில் வெளியாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர்.
படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது. சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் ராவணனாக நடிக்கிறார்.

ராமாயண கதைப்படி சீதாவின் கதாபாத்திரமும் முக்கியமானது தான். ஆதலால் இப்படத்தில் சீதையாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சமீபத்திய தகவலின்படி நடிகை கீர்த்தி சுரேஷ் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனுக்கு டிராமா திரைப்பட பிரிவில் ‘மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.
ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் திரைத்துரையினருக்கு வழங்கப்படும் கவுரவமிக்க விருதுகளாக கோல்டன் குளோப் விருதுகள் கருதப்படுகின்றன. 78-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடந்தது. இணையதளம் மூலமாகவே நேரலையில் வெற்றி பெற்றவர்கள் பெயர்களை அறிவித்து கவுரவித்தனர்.
மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனுக்கு டிராமா திரைப்பட பிரிவில் ‘மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது மனைவி பெற்றுக்கொண்டார். இதே பிரிவில் சிறந்த நடிகை விருது ‘தி யுனைடட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லீ ஹாலிடே’ படத்தில் நடித்த ஆண்ட்ரா டேவுக்கு கிடைத்தது.

இதுபோல் சிறந்த டிராமா திரைப்படத்துக்கான விருது ‘நோ மேட்லேண்ட்’ திரைப்படத்துக்கு கிடைத்தது. சிறந்த இயக்குனர் விருதை ‘நோமேட்லேண்ட்’ படத்துக்காக க்ளோ ஜாவோ பெற்றார். சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ‘மினாரி’ படத்துக்கு கிடைத்துள்ளது.
அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்'' படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.
அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்'' படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.
ப.நீலகண்டன் கூறியது போலவே மறுநாள் அவரைப் போய்ப் பார்த்தார், வாலி. சுமார் ஐம்பது பல்லவிகளைக் கொடுத்தார். அவற்றில், "சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்'' என்ற பல்லவியை தேர்வு செய்தார், நீலகண்டன்.
அதற்கு இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா பலவிதமான மெட்டுகளைப் போட்டுக்காட்டினார். அதில் ஒரு மெட்டை தேர்வு செய்தார், நீலகண்டன்.
அதன் பிறகு, முழுப் பாட்டுக்கும் இசை அமைப்பதில் பாப்பா மும்முரமாக ஈடுபட்டார்.
இசை அமைக்கும்போது வந்திருந்த ஒருவரை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார், பாப்பா. அவர்தான் எழுத்தாளரும், வசன கர்த்தாவுமான மா.லட்சுமணன். "இவர்தான் உங்களைப்பற்றி ப.நீலகண்டன் சாருக்கு தெரிவித்து, அதன் மூலம் உங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்று பாப்பா கூறினார்.
அதைக்கேட்டு வாலி பிரமித்து நின்றார். கண்கள் பனிக்க மா.லட்சுமணனுக்கு நன்றி தெரிவித்தார்.
"நல்லவன் வாழ்வான்'' படத்துக்கு கதை -வசனம் எழுதுபவர் பேரறிஞர் அண்ணா என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார், வாலி.
வாலியின் பாடல், அண்ணாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பாடல் நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, சில வரிகளை அடிக்கோடிட்டு, பாராட்டினார்.
எம்.ஜி.ஆருக்கும் பாடல் பிடித்து விட்டது.
சோதனை மேல் சோதனை என்றாலும், அந்தப் பாடல் பதிவு செய்யப்படுவதிலும், படத்தில் இடம் பெறுவதிலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டன.
அதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-
"சாரதா ஸ்டூடியோவில் `ரிக்கார்டிங்'கிற்கான தேதி முடிவாயிற்று. நான் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு சாரதா ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.
பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார். சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.
10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
பிறகு, ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் சாரீரம் உதவும்படியாக இல்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.
`இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு... எனவே, மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்' என்று நீலகண்டன் முடிவெடுத்தார்.
மருதகாசியும் பாட்டு எழுதவந்தார். ஏற்கனவே நான் எழுதியிருந்த பாட்டை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தார்.
"இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை... இந்தப் பாட்டையே வைத்துக்கொள்ளுங்கள்... பாப்புலராகும்...'' என்று சொல்லிவிட்டு, மருதகாசி அண்ணன் தன் பிளைமவுத் காரில் ஏறிப் போய்விட்டார். அண்ணன் மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்.
நிïடோன் ஸ்டூடியோவில் ஒரு பெரிய செட் போட்டு இந்தப் பாடலைப் படம் பிடிக்க ஏற்பாடாயிற்று.
ஒரு மலை; அதனின்றும் வழியும் அருவி. அருவி வந்து விழும் தடாகம் எனப் பெரிதாக அழகுற அமைக்கப்பட்ட அந்த செட்டில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனாவும் ஆடிப்பாடுவதாக நடன இயக்குனர் அமைத்த வண்ணம் ஒத்திகை பார்க்கப்பட்டது.
முதல் ஷாட் எம்.ஜி.ஆர், `சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு வாயசைத்தவாறே, கரையிலிருந்த தடாகத்தில் இறங்குகையில் கரை உடைந்து ஸ்டூடியோ "செட்'' முழுவதும் வெள்ளக்காடாயிற்று.
படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நான் அதிர்ந்து போனேன். இந்த ஒரு பாடலுக்கே இத்துணை தடங்கல்களென்றால் என் எதிர்காலம் என்னாவது என்று அஞ்சலானேன்.
நல்லவேளை, செட் சீர் செய்யப்பட்டு பாட்டு நல்ல விதமாகப் படமாக்கப்பட்டு, படத்திலும் இடம் பெற்றது.
இறுதியில் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாகக் கருதப்பட்டு, சரணத்தில் சில வாக்கியங்கள் சென்சாரால் வெட்டப்பட்டன.
இவ்வளவு அமர்க்களங்களுக்கு இடையே, எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய முதல் பாடலுடன் "நல்லவன் வாழ்வான்'' 1961 ஆகஸ்டு 31-ந்தேதி திரைக்கு வந்தது.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

ராபர்ட் லோரென்ஸ் இயக்கத்தில் லியாம் நீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி மார்க்ஸ் மேன் படத்தின் விமர்சனம்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான லியாம் நீசன் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் எல்லை பாதுகாப்பு பிரிவில் வேலை பார்க்கிறார். பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு தாய் தன்னுடைய மகனுடன் லியாம் நீசன் இருக்கும் ஊருக்கு தஞ்சம் அடைகிறார். இவர்களை ஒரு கும்பல் துரத்துகிறது.
ஒரு கட்டத்தில் அந்த கும்பல் தாயை கொல்ல, சிறுவனை லியாம் நீசன் காப்பாற்றுகிறார். மேலும் இந்த சிறுவனை வேறொரு ஊரில் இருக்கும் மாமாவிடம் சேர்க்கும்படி அவரது தாய் சொல்லிவிட்டு இறக்கிறார்.

இறுதியில் அந்த மர்ம கும்பலிடம் இருந்து சிறுவனை காப்பாற்றி அவரது மாமாவிடம் லியாம் நீசன் சேர்த்தாரா? மர்ம கும்பல் சிறுவனை துரத்த காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சிறுவனை காப்பாற்ற போராடும் லியாம் நீசன் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதே போல் சிறுவனும் அவருக்கு இணையாக நடித்து அசத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அவர்களது பங்களிப்பை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார்கள்.
மெதுவாக தொடங்கி வேகமெடுக்கும் திரைக்கதை பின்னர் மீண்டும் மெதுவாக செல்வதால் படத்தின் விறுவிறுப்பு குறைகிறது. ஆங்கிலப் படத்திற்கு உண்டான அதே திரைக்கதை டெம்ளேட் இந்த படத்திலும் அமைந்திருக்கிறார் இயக்குனர் ராபர்ட் லோரென்ஸ். தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் இப்படம் ஆக்சன், செண்டிமெண்ட் என தமிழ் ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.

சீன் காலரியின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு உதவி இருக்கிறது. மார்க் பாட்டனின் ஒளிப்பதிவை ஆங்காங்கே ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘தி மார்க்ஸ்மேன்’ விறுவிறுப்பு குறைவு.
பிரபல கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங்கின் ஆக்ஷன் காட்சிகளை ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். இவர் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். இதில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன், காமெடி நடிகர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் இன்று வெளியானது. இதில் ஆக்ஷன் காட்சிகளில் ஹர்பஜன் சிங் அசத்தி இருக்கிறார். மேலும் இறுதியில் நடிகர் சதீஷ், ஹன்பஜன் சிங்கிடம் உனக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமா என்று வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.