என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளதோடு, திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார்.
    நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்த டிரெய்லரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா, “நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இந்த டிரெய்லரை பார்த்துவிட்டேன். அப்போதே எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் நீங்கள் ஒரு ஜீனியஸ்” என பதிவிட்டுள்ளார்.

    சமந்தாவின் டுவிட்டர் பதிவு

    ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் தனுஷுக்கு தேசிய விருதும், நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருதும் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளதாம்.
    இந்திய திரைத்துறையில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது, இந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.

    தனுஷ், ரஜினி

    இந்நிலையில், 67-வது தேசிய விருது வழங்கும் விழா, வருகிற மே மாதம் 3-ந் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினமே நடிகர் ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினி, தனுஷ் இருவரும் ஒரே நாளில் விருது பெற உள்ளனர். இது அவர்களது குடும்பத்தினர் மற்றுமின்றி, ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனு இம்மானுவேல், வாரிசு நடிகரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
    நடிகை அனு இம்மானுவேல், தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். 

    இந்நிலையில், நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் ரகசியமாக காதலித்து வருவது அம்பலமாகி உள்ளது. 
    சமீபத்தில் அனு இம்மானுவேல் பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவரை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாக உள்ளனர். 

    அனு இம்மானுவேல், அல்லு சிரிஷ்

    அதில் அனுவை சைக்கோ என்றும் செல்லமாக அழைத்து உள்ளார் அல்லு சிரிஷ். இந்த வீடியோ அவர்கள் காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள்.

    நடிகர் அல்லு சிரிஷ் தெலுங்கில் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கில் வெளியான கவுரவம் படத்திலும் நடித்து இருக்கிறர். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் என்பதும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
    நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
    நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.

    படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-

    "1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.

    நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே'' 

    என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,

    "நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.

    அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.

    அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.

    "சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

    "அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.

    உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.

    மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக  இருந்தது.

    நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.

    சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.

    மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.

    அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.

    சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.

    சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.

    பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.

    மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.

    படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.

    அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.

    என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.

    அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

    எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.

    நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்யூலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.

    நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.

    "ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.

    அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

    வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.

    எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!

    இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.

    சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.

    நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.

    "சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று 

    சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.

    நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.

    சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.

    பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    அனிஸ் இயக்கத்தில் சசிகுமார், பிந்துமாதவி, வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் முன்னோட்டம்.
    கூர்கா படத்தை தயாரித்த 4 மங்கீஸ் ஸ்டுடியோ எனும் தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.

    கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சசிகுமார்

    இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – கார்த்திக் கே தில்லை, படத்தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை – விஜய் தென்னரசு, நடனம் – தீனா, சண்டைப்பயற்சி – ஆக்‌ஷன் நூர் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
    பிரபல பாலிவுட் நடிகரான வித்யூத் ஜமால், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.

    வித்யூத் ஜமால்

    இப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் வில்லனாக நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதனை நடிகர் வித்யூத் ஜமால் மறுத்துள்ளார். மேலும் விஜய்யுடன் நடிக்க ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என துப்பாக்கி பட பாணியில் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் வித்யூத் ஜமால், துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


    நடிகர் மாதவனுக்கு கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதியான நிலையில், தற்போது அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அந்த வகையில் நடிகர் மாதவனுக்கும் கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

    மாதவன்

    இந்நிலையில், தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    நடிகர் மாதவன் நடிப்பில் தற்போது ராக்கெட்ரி எனும் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அவரே இயக்கியும் உள்ளார். நேற்று வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
    மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். 

    இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 

    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

    புகழ், சிம்பு

    இந்நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அவர், இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை
    பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வது சீசனில் நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர். 

    தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. 

    இந்நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனிடையே இந்தமுறை கலந்து கொள்ள இருப்பதாக ஒரு சில திரைபிரபலங்களின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது. 

    மிலா

    ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர், குக் வித் கோமாளி கனி, சுனிதா, பவித்ரா ஆகியோர் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இவர்களுடன் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா கலந்துகொள்ள உள்ளதாகவும், இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாஸ்டர் பட நடிகை, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 96. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கவுரி கிஷன். இப்படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் திறம்பட நடித்திருந்த இவர், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தற்போது தனுஷின் கர்ணன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர சில தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

    கவுரி கிஷனின் சமூக வலைதள பதிவு

    இந்நிலையில், நடிகை கவுரி கிஷன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சமூக வலைதள பதிவு மூலம் இதனை உறுதிப்படுத்தி உள்ள கவுரி, தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். தான் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று படிப்படியாக குணமாகி வருவதாக தெரிவித்துள்ள அவர், கடந்த வாரம் தன்னை சந்தித்தவர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். 
    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சுல்தான்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியன், ஒரு மாபெரும் தாதாவாக இருக்கிறார். அவருக்கு கீழ் வேலை பார்க்கும் ரவுடிகளும் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். சிறு வயதிலேயே அம்மா இறந்துவிட, தந்தையின் ரவுடி கூட்டத்திற்கு இடையில் தான் வளர்க்கிறார் நாயகன் கார்த்தி. 


    பின்னர் படித்து வெளியூரில் வேலை பார்த்து வரும் கார்த்தி, விடுமுறைக்காக ஊருக்கு வரும் சமயத்தில் நெப்போலியன் இறந்துவிடுகிறார். இதன்பின் அந்த ரவுடி கூட்டத்திற்கு தலைவனாகும் கார்த்தி, அவர்களை நல் வழிப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நினைக்கிறார். 

    சுல்தான் விமர்சனம்

    இதனிடைய, ஊர் விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் ஒரு நிறுவனம் பிரச்சனை கொடுக்கிறது. அவர்களை எதிர்க்க தன்னுடைய ரவுடி கும்பலை பயன்டுத்துகிறார் கார்த்தி. இதையடுத்து என்ன ஆனது? ரவுடிகளை வைத்து விவசாயத்தை காப்பற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் கார்த்தி, படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் இவர், இப்படத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், நடனம் என பக்கா கமர்ஷியல் ஹீரோவாக வந்து ஸ்கோர் செய்துள்ளார். சண்டைக் காட்சிகளில் எதிரிகளை பந்தாடி இருக்கிறார். 

    சுல்தான் விமர்சனம்

    நாயகி ராஷ்மிகா, இவருக்கு இதுதான் முதல் நேரடி தமிழ் படம், இதில் கிராமத்து பெண்ணாக வருகிறார். இவருக்கு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரமாக இருந்தாலும், தனது கியூட்டான நடிப்பால் ரசிக்க வைத்துள்ளார். 

    கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியனும், இவருக்கு நண்பராக வரும் லாலும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். யோகி பாபுவும், சென்ராயனும் அவ்வப்போது வந்து சிரிக்க வைத்துள்ளனர். 

    சுல்தான் விமர்சனம்

    இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவற்றை திறம்பட கையாண்டுள்ளார். கதைக்களம் வித்தியாசமானதாக இருந்தாலும், திரைக்கதையின் நீளத்தை குறைத்திருந்தால், சுல்தானை இன்னும் ரசித்திருக்கலாம். கமர்ஷியல் படமாக இருந்தாலும் விவசாயத்தை பற்றிய கருத்துகளை கூறி பலம் சேர்த்திருக்கிறார். 

    படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது யுவனின் பின்னணி இசை தான். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரது இசை வேற லெவல். விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் அருமை. சத்யன் சூரியனின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘சுல்தான்’ ஆக்‌ஷன் விருந்து.


    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். 

    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    மோகன்லால்

    இந்நிலையில், கர்ணன் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளாராம். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையையும் மோகன்லால் தான் பெற்று இருந்தார் என்பதும் அந்த படத்தில் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ×