என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங், முன்னணி நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
    மனோஜ் பாய்பாய், சமந்தா, பிரியாமணி நடிப்பில் அமேசானில் வெளியாகியுள்ள வெப் தொடர் தி பேமிலி மேன்-2. இந்த தொடரை ஒளிபரப்பக்கூடாது என்று வைகோ, பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மறு பக்கம் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

    சமந்தா
    சமந்தா - ரகுல் பிரீத் சிங்

    இந்நிலையில் நடிகை ரகுல் சிங் டுவிட்டரில், ‛‛தி பேமிலி மேன்-2 தொடரில் நடித்துள்ள மனோஜ்பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதேபோல் சமந்தா ராஜி கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார். இந்த தொடரை பார்த்த பிறகு எங்கள் குடும்பமே சமந்தாவின் ரசிகைகளாக மாறி விட்டோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
    சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்த படக்குழு, அந்த சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்ததால், அப்பாடல் வெளியீடை தள்ளிவைத்தனர். 

    மாநாடு படத்தின் அறிவிப்பு


    இந்நிலையில் முதல் பாடலை ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    கே.ஜி.எப் என்ற மாஸான படத்தை கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீலை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.
    சமீபத்தில் தேசிய அளவில் பேசப்பட்ட படம் கேஜிஎப். யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கன்னடப் படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி லாபத்தை அள்ளியது. கேஜிஎப் இரண்டாம் பாகத்துக்கு இந்தியாவே காத்திருக்கிறது. 

    சமீபத்தில் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. இதில் யாஷ் சிகரெட் பிடிக்கும் காட்சி மாஸாக இருக்கும். 

    இயக்குனர் பிரசாந்த் நீல்
    இயக்குனர் பிரசாந்த் நீல்

    சினிமாவில் இப்படி ஹீரோயிசத்தை உச்சத்தில் காட்டியவர், நிஜத்தில், ஊசி போடுவதைக் கூட பார்க்க பயந்து முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பிரசாந்த் நீல் இணையத்தில் பகிர, 100 பேரை அடிக்கிற மாதிரி மாஸ் சீன் வச்ச இயக்குனரா இது என்று கலாய்த்து வருகிறார்கள்.
    நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார். இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அக்கடனை கடந்த பிப்ரவரி மாதமே முறைப்படி அளித்துவிட்டார். 

    கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.செளத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை. அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள். 

    ஆர்.பி.செளத்ரி
    ஆர்.பி.செளத்ரி

    இதனால் விஷால் சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை போட வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன்பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டின் மூலமாக ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவர் பக்தவச்சலம் முன்னிலையில் நானும் எனது குடும்பத்தாரும் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டோம்.

    அமீர்
    இயக்குனர் அமீர்

    நம்மிடையே நிலவக்கூடிய தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டு கோவிட்19 நோயிலிருந்து முழுவதுமாக விடுபடுவோம். வளமான ஆரோக்கியமான நோயில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்றிருக்கும் நடிகர் தனுஷ் கோலிசோடாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகர் தனுஷ் தற்போது ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டு வாரம் அமெரிக்காவில் ஓய்வெடுக்க உள்ள தனுஷ், அதன்பின் சென்னை திரும்ப இருக்கிறார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் கோலி சோடா குடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ஹே கோலி சோடாவே’ என்ற பாடல் வரிகள் தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். தனுஷின் இந்த பதிவிற்கு 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் குவிந்து உள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
    கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர். ஏழை மக்களுக்கு தமிழக அரசு, திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நடிகர் சூர்யா சத்தமின்றி வேலையின்றி வருமானமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகிறார். நேற்று மட்டும் 250 ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சூர்யா

    இக்கட்டான நேரத்தில் உதவி செய்யும் வகையில் சூர்யா அனுப்பிய பணம் தங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள்.
    கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் முன்னோட்டம்.
    செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’அதோ அந்த பறவை போல’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

    இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.
    மறைந்த இயக்குனர் சொர்ணம் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
    பிரபல திரைப்பட இயக்குனர் சொர்ணம், இவர் சென்னை கொட்டிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக சொர்ணத்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. மரணம் அடைந்த சொர்ணம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கதை எழுதிய ஒரே ரத்தம் படத்தை இயக்கி பிரபலமானார். தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.

    மேலும் சிவகுமார், கமல்ஹாசன் நடித்த தங்கத்திலே வைரம், முத்துராமன் நடித்த சீர்வரிசை, ஜெய்சங்கர் நடித்த ஆசை மனைவி, நீ ஒரு மகராணி போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் சொர்ணம். 

    இதுதவிர, எம்.ஜி.ஆர். நடித்த தாயின் மடியில், நம்நாடு, கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, என் அண்ணன், குமரி கோட்டம், இதயவீணை, ராமன் தேடிய சீதை, பட்டிக்காட்டு பொன்னையா உள்ளிட்ட 11 படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார்.

    திரைப்பட இயக்குனர் சொர்ணத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்
    திரைப்பட இயக்குனர் சொர்ணத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்

    மறைந்த இயக்குனர் சொர்ணம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சொர்ணத்தின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் உடன் இருந்தார்.
    தமிழில் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். 

    ராம்சரண், மாளவிகா மோகனன்
    ராம்சரண், மாளவிகா மோகனன்

    இந்நிலையில், இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால், அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாக இது அமையும். நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது அவர் கைவசம் தனுஷின் ‘டி 43’ என்கிற தமிழ் படமும், யுத்ரா என்கிற இந்தி படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நடிகை சமந்தா, வெப் தொடருக்காக சினிமாவை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. 

    நடிகை சமந்தா, அதிகபட்சமாக ஒரு படத்துக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக அவர் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா, வெப் தொடருக்காக சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சமந்தா

    மேலும் அந்த தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாயிக்கு இரண்டு சீசன்களுக்கும் சேர்த்து ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நடிகை பிரியாமணிக்கு ரூ.80 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

    பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் பா.இரஞ்சித்.

    பா.இரஞ்சித்
    பா.இரஞ்சித்

    இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம் பா.இரஞ்சித். தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடித்தபின் பா.இரஞ்சித் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
    ×