என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது வெப் தொடரில் நடித்துள்ளார். ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘தி பேமிலி மேன்’ என்ற வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்துள்ளார் சமந்தா. அவர் நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். இந்த வெப்தொடரை பாலிவுட்டின் இரட்டை இயக்குனர்களான ராஜ்-டிகே ஆகியோர் இயக்கி உள்ளனர்.

    இந்த வெப் தொடரில் வில்லியாக நடித்துள்ளாராம் சமந்தா. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத கும்பல் ஒன்றின் ஸ்லீப்பர் செல் ஏஜெண்ட்டாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வெப் தொடர் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

    இயக்குனர்கள் டிகே உடன் சமந்தா

    இதுதவிர நடிகை சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘சகுந்தலம்’ எனும் புராண கதையம்சம் கொண்ட படத்திலும் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இயக்குனர் பாலா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
    மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில்  ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்.

    இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    விசித்திரன் படத்தின் போஸ்டர்

    இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாகவும், இயக்குனர் பாலா தான் தன்னை பரிந்துரைத்ததாகவும் அவர் கூறி உள்ளார். மேலும் இப்படத்தின் வெளியீடு தியேட்டரிலா அல்லது ஓடிடியிலா என்பதை தயாரிப்பாளர் பாலா தான் முடிவு செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
    கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

    முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர். 

    ஜெயம்ரவி

    இந்நிலையில், எடிட்டர் மோகன், அவரது மகன்களான நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தனர்.
    தெலுங்கு, மலையாளம் பிக்பாஸ் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    தனியார் தொலைக்காட்சி சார்பில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

    இதையடுத்து தெலுங்கு, மலையாளத்திலும் பிக்பாஸ் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    மலையாளத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கினார். கொரோனா காலம் என்பதால் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

    கோப்புப்படம்

    இந்த நிலையில் வாரத்தில் புதன்கிழமை தோறும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த வாரம் புதன்கிழமை அன்று ஊழியர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகர்-நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்கள் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இதனால் இரண்டு வாரங்களுக்கு மலையாளத்தில் நடத்தப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.
    "குறத்திமகன்'' படத்தில் நடித்ததற்கு பிறகு தொடர்ச்சியாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "வாழையடி வாழை'', "தசாவதாரம்'' ஆகிய படங்களில் ஜெயசித்ரா நடித்தார். டைரக்டர் பி.மாதவன் மூலம் 1973-ம் ஆண்டு "பொண்ணுக்கு தங்கமனசு'' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

    நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த ஜெயசித்ராவுக்கு, அந்த படத்தில் நடித்த பிறகுதான் நடிப்புத்துறை மீது ஆர்வம் வந்தது.

    1974-ம் ஆண்டு சிவாஜியின் மகளாக "பாரதவிலாஸ்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    ஜெயசித்ரா பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது இந்த படத்தில் நடித்தார். அவர் படத்தில் நடிக்கும்போது தேர்வு நடந்து கொண்டு இருந்தது. எனவே சூட்டிங் சென்றுவிட்டு மேக்கப் சரிவர கலைக்காமல் அப்படியே சென்று தேர்வு எழுதினார். 7-ம் வகுப்பு படிக்கும் போதே நடிக்கத்தொடங்கிய ஜெயசித்ரா, 10-ம் வகுப்பு படிக்கும் வரை திரைப்படங்களில் நடித்ததை மறைத்து வந்தார். சில ஆசிரியைகளுக்கு இது தெரிந்தாலும், தெரிந்ததுபோல் யாரும் காட்டிக்கொள்ளவில்லை.

    தொடர்ந்து சிவாஜியுடன் "சத்யம்'', "லட்சுமி வந்தாச்சு'', "பைலட் பிரேம்நாத்'', "ரத்தபாசம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    சிவாஜி பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "பாரதவிலாஸ் படத்தில் நடித்தபோது, நன்றாக நடிக்க கற்றுக்கொடுத்தார். அப்போது நான் பாக்கு போட்டுக்கொண்டு டயலாக் பேசுவேன். அதற்கு சிவாஜி, "இப்படி பாக்கு போடக்கூடாது'' என்று கூறினார். அன்று முதல், நடிக்கும்போது நான் பாக்கு போடுவது இல்லை. சத்தியம் படத்தில் அதிகமாக டயலாக் பேச எனக்கு வாய்ப்பு கொடுத்தார்" என்றார்.

    "பொன்வண்டு'' என்ற படத்தில் நடிக்கும்போது, 11-ம் வகுப்பு தேர்வு எழுதமுடியாமல் போயிற்று.

    பின்னர் டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் "நவரத்னம்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் 9 கதாநாயகிகளை எம்.ஜி.ஆர் சந்திக்கும் நிலை ஏற்படும். அதில் பவளாயி என்ற கேரக்டரில் ஜெயசித்ரா நடித்தார். படத்தில் நடிக்கும் போது ஜெயசித்ரா குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி எடுத்தனர்.

    இது குறித்து ஜெயசித்ரா கூறும்போது, "நான் குளத்துக்குள் குதிப்பதற்கு முன்பு தண்ணீர் அழுக்காக இருக்கிறதே என்று லேசாக கூறினேன். இது அருகே நின்ற எம்.ஜி.ஆருக்கு கேட்டு இருக்கிறது. உடனே, அந்தக் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மாற்றி, புதுத்தண்ணீர் நிரப்ப எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால், கீழே பலகையை போட்டு உள்ளே கயிறு போட்டுக்கொடுத்தார்" என்றார்.

    டைரக்டர் கே.பாலசந்தரின் "அரங்கேற்றம்'' என்ற படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    தொடர்ந்து "சொல்லத்தான் நினைக்கிறேன்'' படத்தில் 3-வது தங்கையாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்தபிறகுதான், ஜெயசித்ராவுக்கு "குணச்சித்திர நடிகை'' என்ற பெயர்கிடைத்தது. "டொட்டடொய்ங்'' என்ற மேனரிசம் அந்தப் படத்தில்தான் வந்தது.

    அந்த படத்தில் நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "நான் கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்தேன் என்று பல நடிகைகளிடம் பாலசந்தர் சார் கூறியதாகக் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் சந்தேசமாக இருந்தது. அவரது டைரக்ஷனில் நடித்தை பெருமையாக கருதுகிறேன்" என்றார்.

    தேவர் பிலிம்சாரின் "வெள்ளிக்கிழமை விரதம்'' படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்றாலே மிருகங்கள் இருக்கும். இந்த படத்தில் பாம்பை நடிக்க வைத்தார்கள்.

    படத்தில் பாம்பை கண்டாலே சிவகுமாருக்கு பிடிக்காது. திருமணத்தின் போது, பாம்பை ஒரு கட்டிடத்திற்குள் போட்டு தீ வைத்து விடுவார். பாசமான பாம்பு இறந்து விட்டதே என்று ஜெயசித்ரா மயக்கமாகி விடுவார்.

    முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்ட அறையில் ஜெயசித்ராவின் மீது பாம்பு ஊர்ந்து சென்று, அவர் முகம் அருகே வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பாம்பு ஜெயசித்ராவின் முகத்திற்கு நேராக நின்று அவரது உதட்டை தனது நாவால் வருடிவிடும். உடனே கண் விழிக்கும் ஜெயசித்ரா, "தெய்வமே நீ உயிரோடுதான் இருக்கிறாயா?'' என்று வசனம் பேசுவார்.

    இந்த காட்சியை படத்தில் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும்.

    பாம்புடன் தைரியமாக நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    நான் மயங்கிக் கிடப்பதுபோல் நடித்தபோது, பாம்பு என் உடல் மீது ஏறி பாம்பு என்முகத்திற்கு நேராய் வந்தது. எனக்கு பயம். அருகே தேவர், "முருகா முருகா'' என்று வணங்கிக்கொண்டு இருந்தார்.

    பாம்பு என் உதட்டை தடவிவிட்டு, படம் எடுத்து நிற்கும். உடனே நான் கண்விழித்து, "தெய்வமே நீ உயிருடன் தான் இருக்கிறாயா'' என்று சந்தோஷத்துடன் வசனம் பேசவேண்டும். அப்படி விழித்து வசனம் பேசும்போது பாம்பு திடீர் என்று எனது நெற்றியில் வேகமாக மோதியது. பாம்பு என்னைக் கடித்து விட்டது என்று நினைத்து பயந்து, வசனம் பேசுவதை நிறுத்தி விட்டேன். ஆனால், பாம்பு கடிக்கவில்லை, என்னை ஆசிர்வாதம் செய்தது. அதை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது.

    இந்த காட்சியில் பயப்படாமல் நடித்ததற்காக தேவர் பாராட்டினார். தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தேன். அந்தக்காட்சியில் பெண்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை கண்கூடாகக் கண்டேன்.

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.

    1975-ம் ஆண்டு "சினிமாப்பைத்தியம்'' என்ற படத்தில் நடித்தார். "கல்யாணமாம் கல்யாணம்'' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்.

    அதேபோல "அக்கரைப்பச்சை'', "கலியுககண்ணன்'', "வண்டிக்காரன்மகன்'', "பணக்காரப்பெண்'', "தேன்சிந்துதே வானம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    டைரக்டர் ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தில் கமல் ஜோடியாக ஜெயசித்ரா நடித்தார். இந்த சமயத்தில், தெலுங்கு படதயாரிப்பாளர் ராமாநாயுடு மூலம் "சோகாடு'' என்ற படம் மூலம் சோபன்பாபுக்கு ஜோடியாக தெலுங்கில் நடிக்கத்தொடங்கினார்.

    ஜெயசித்ராவின் திருமணம் 1983-ல் நடந்தது. கணவர் பெயர் கணேஷ். இவர் தொழில் அதிபர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

    சிவகார்த்திகேயன்

    அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாய், நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் 25 லட்சம் ரூபாய், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய், இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் ரூபாயும் வழங்கி இருக்கிறார்கள். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 25 லட்சம் வழங்கி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

    வெற்றி மாறன்

    அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாய், நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் 25 லட்சம் ரூபாய், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாயும் வழங்கி இருக்கிறார்கள். தற்போது இயக்குனர் வெற்றிமாறன் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் வழங்கி இருக்கிறார்.
    தரம்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள N 4 படத்தின் முன்னோட்டம்.
    “மை சன் இஸ் கே” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் குமார். முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர் தனது இரண்டாவது படமாக “N4” திரைப்படத்தை இயக்கியுள்ளார். தரம்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

    வடசென்னை மக்களின் வாழ்வியலை எதார்த்தமான கோணத்தில் காட்டும் இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, அஃப்சல் ஹமீது , வினுஷா தேவி, அக்க்ஷய் கமல், பிரக்யா நாக்ரா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:
    தயாரிப்பாளர்கள் - நவீன் சர்மா, யோகேஷ் சர்மா, லோகேஷ் குமார்
    தயாரிப்பு நிறுவனம் - தர்மராஜ் பிலிம்ஸ், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ்
    எக்ஸிகுயுடிவ் புரொடுயுசர் - ரபேல் ராஜசேகர்
    ஒளிப்பதிவு - திவ்யன்க் S
    படத்தொகுப்பு - டேனி சார்லஸ்
    இசை - பாலசுப்ரமணியன் G
    சண்டைப்பயிற்சி - V.கோட்டி
    உடைகள் - நந்தா அம்ரிதா, லோகேஷ்
    தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
    சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர். 

    கோபி

    இந்நிலையில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலமானார். ஆனால் தற்போது தான் செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

    ஷங்கர்

    அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாயை முதலமைச்சரிடம் வழங்கினார். நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் ரூபாய் 25 லட்சம் கொடுத்தார். தற்போது இயக்குனர் ஷங்கர் ரூபாய் 10 லட்சம் வழங்கி இருக்கிறார்.
    வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் உயிரிழந்துள்ளார்.
    சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த், குட்டி ரமேஷ் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர். 

    பவுன்ராஜ்

    இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு இயக்குனர் பொன்ராம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
    ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஆர் கே செல்வமணி

    இதனிடயே, இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
    ×