என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘சென்னை 28’ பட நடிகர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் சென்னை 28. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் 2 ஆம் பாகமும் வெளியானது. இதில் சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த், ஜெய், வைபவ் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

    தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சென்னை 28’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

    கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர்கள் பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகியோர் இணைந்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில், மாஸ்க் அணியவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ரசிகர்களுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


    ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அண்மையில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிகண்டன் தன்னை 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்து கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கட்டாய கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    நடிகை சாந்தினி
    நடிகை சாந்தினி

    இந்நிலையில், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை சாந்தினி, தன் கணவர் மீது பொய்யான தகவலை பரப்பி, தங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளார். இந்த புகார் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்து, திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

    ராக்கி படத்தின் போஸ்டர்
    ராக்கி படத்தின் போஸ்டர்

    இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராக்கி படத்தின் வெளியீடு குறித்து நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, மீண்டும் பிரபாஸூடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
    ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா வில்லனாகவும் நடிக்க, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு பாகங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது.

    இதையடுத்து இயக்குனர் ராஜமவுலி தற்போது ஆர்.ஆர்.ஆர் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதையடுத்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்க உள்ளார்.

    பிரபாஸ், ராஜமவுலி
    பிரபாஸ், ராஜமவுலி

    இந்நிலையில், மகேஷ் பாபு படத்தை முடித்த பின் இயக்குனர் ராஜமவுலி மீண்டும் பிரபாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆதிபுருஷ், ராதே ஷியாம், சலார் போன்ற படங்களில் நடித்து வரும் பிரபாஸ், இந்த 3 படங்களையும் முடித்த பின் ராஜமவுலி படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக இளம் நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம்.
    விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார். பின்னர் அந்த படத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென அப்படத்தில் இருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ். இதையடுத்து அப்படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு சென்றது.

    ராம் பொத்தினேனி
    ராம் பொத்தினேனி

    இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை சொன்னதாகவும், அவர் சொன்ன கதை பிடித்துப்போனதால், அவரும் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் ராம் பொத்தினேனி தற்போது லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    ரஜினி, விஜய், அஜித் பட இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை, பாவக் கதைகள், குட்டி ஸ்டோரி போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  

    தற்போது வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன் ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்கத்தில் ‘விக்டிம்’ என்கிற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரிக்கிறார்.  

    இவர்களில் பா.ரஞ்சித் ரஜினியை வைத்து காலா, கபாலி என்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் வெங்கட் பிரபு அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கி உள்ளார். சிம்புதேவன் விஜய்யின் புலி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    விக்டிம் படத்தின் போஸ்டர்
    விக்டிம் படத்தின் போஸ்டர்

    இந்த ஆந்தாலஜி படத்தை முதலில் திரையரங்கில் வெளியிடலாம் என்றே திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் உள்ளதால், விக்டிம் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    'ஜகமே தந்திரம்' படம் தொடர்பாக எந்தவொரு டுவிட்டையும் வெளியிடாமலேயே இருந்த நடிகர் தனுஷ், தற்போது முதன்முறையாக அப்படம் குறித்து டுவிட் செய்துள்ளார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 18-ம் தேதி வெளியாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இந்தப் படம் ஓடிடி வெளியீடு என்று முடிவானதிலிருந்தே தயாரிப்பாளர் சசிகாந்திற்கும், நடிகர் தனுஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து 'ஜகமே தந்திரம்' படம் தொடர்பாக எந்தவொரு டுவிட்டையும் தனுஷ் வெளியிடாமலேயே இருந்தார். இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள சூழலில், முதன்முறையாக 'ஜகமே தந்திரம்' குறித்து டுவிட் செய்துள்ளார் தனுஷ்.

    நடிகர் தனுஷின் டுவிட்டர் பதிவு
    நடிகர் தனுஷின் டுவிட்டர் பதிவு

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “ஒரு அற்புதமான திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம், நெட்பிளிக்ஸ் தளத்துக்கு வருகிறது. இருந்தாலும், நீங்கள் அனைவரும் 'ஜகமே தந்திரம்' மற்றும் சுருளியை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்”. இவ்வாறு தனுஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    நடிகர் அர்ஜுன், தெலுங்கு படம் ஒன்றில் பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு தற்போது பரசுராம் பெட்லா இயக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி முடித்த படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை கொரோனா பரவல் குறைந்த பின் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இதில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மகேஷ் பாபு, அர்ஜுன்

    அர்ஜுனுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருப்பதாகவும், கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் மகேஷ் பாபு - அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
    நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது.
    நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது. 

    இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படத்தையும் தயாரித்துள்ளார் நயன்தாரா. இப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது. ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. 

    ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் ‘கூழாங்கல்’ திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது. 

    கூழாங்கல் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
    கூழாங்கல் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில் உக்ரைனில் ஆண்டுதோறும் நடைபெறும் கெய்வ் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் ‘கூழாங்கல்’ படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு கிடைத்த இன்னொரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுகிறது. 
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
    பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அதில் தனுஷ் பேசும் ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்ற வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

    தனுஷ்

    இப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதால் அதிருப்தியில் இருந்த தனுஷ், இப்படம் குறித்த எந்தவித தகவலையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிராமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது ஜகமே தந்திரம் டிரெய்லரை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
    1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த "பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.

    ஜெயசித்ராவின் 100-வது படம் "நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.

    பிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.

    1988-ல், கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.

    1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, "புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.

    ஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.

    ஜெயசித்ரா தமிழிலும், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.

    படங்களில் நடித்து வந்தபோது, "சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பின்னர் "சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.

    இந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.

    ஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது "பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.

    "சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.

    கால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.

    ரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் "தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.

    முதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த "பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.

    நான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.

    தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.

    படத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.

    நல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.

    என் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.

    எல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா தனது ஒரே ஒரு பதிலால் ரசிகர் ஒருவரை நல்வழிப்படுத்தி இருக்கிறார்.
    சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புகையிலைக்கு எதிரான ஒரு பதிவை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

    நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். குறிப்பாக குழந்தைளுக்கும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    யுவன் சங்கர் ராஜாவின் பதிவு

    இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை பதிவு செய்தனர். ஆனால் ஒருவர், நீங்கள் எனக்கு Hi என்று ஒரு பதில் அளித்தால் நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுகிறேன் என்று கூறினார். அதற்கு உடனே யுவன் சங்கர் ராஜா Hi என்று பதில் அளித்தார். இந்த பதிவு பலருடைய கவனத்தை பெற்றுள்ளது.
    ×