என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
    தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மவுனம் சம்மதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். 

    1991-ல் கற்பூர முல்லை படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். 30 வருடங்களுக்கு பிறகு தற்போது கணம் என்ற தமிழ் படத்தில் அமலா மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015-ல் வெளியான ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார். 

    அமலா

    தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் ஷர்வானந்த் ஜோடியாக ரீதுவர்மா நடிக்கிறார். நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார்.
    நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன், தமிழக அரசுக்கு அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
    மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பிறந்தநாளான இன்று, அவரது நினைவுகளைப் போற்றும் விதமாக சமூக வலைதளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் நாகேஷின் நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ், இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களுள் ஒருவர். 1,000 திரைப்படங்களுக்கும்மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.

    1958-ல் 'மனமுள்ள மறுதார'த்தில் அறிமுகமாகி 2008-ல் ‘தசாவதாரம்’ வரை மிகச் சரியாக அரை நூற்றாண்டு நீடித்தது அவரது கலைப்பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதோ, விருதுகள் அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன்பொருட்டே வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.

    கமல் - நாகேஷ்

    1974-ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994-ல் 'நம்மவர்' திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலைவாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொருத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ். 

    இவர் ஃப்ரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் இவருக்கான கௌரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகித்துப்பார்க்கிறேன். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும்கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது, ஒரு சககலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தையளிக்கிறது.

    இந்த மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களில் பாடல்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த வேல்முருகன் தற்போது குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வர உள்ளார்.
    கடந்த 13 வருடங்களாக பல வெற்றிப் பாடல்களை பாடி நாட்டுப்புறம் மற்றும் திரைப்பட பாடல்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பாடகர் வேல்முருகன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

    இதுவரை ஏறக்குறைய 500 திரைப்படங்களுக்கு மேல் வேல்முருகன் பாடியுள்ளார். மதுர குலுங்க குலுங்க, ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், வேணாம் மச்சான் வேணாம், அட கருப்பு நிறத்தழகி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடியுள்ளார்.  

    இது மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாட்டுப்புற பாடகர் என்ற பெருமையும் வேல்முருகனுக்கு உண்டு. கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வேல்முருகன் வென்றுள்ளார். இதை தவிர, 5,000 நாட்டுப்புற கலைஞர்களை வைத்து கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களில் பாடல்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த வேல்முருகன் தற்போது குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வர உள்ளார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடிப்பில் வெளியான 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

    வேல் முருகன்

    ப்ரஜின் நடிக்கும் சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, மிர்ச்சி சிவா நடிப்பில் சலூன், படைப்பாளன், அன்னக்கிளி ஆர்கெஸ்ட்ரா, யோகி பாபுவுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

    “இனி பாடல், நடிப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துவேன். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். பாடகராக எனக்கு அங்கீகாரம் அளித்தது போல், நடிகனாகவும் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. எனது குரலை ஏற்றுக்கொண்டதுப் போல் எனது நடிப்பையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று வேல்முருகன் கூறுகிறார்.
    அறிமுக இயக்குனர் தாமரைச் செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘நதி’ படத்தின் முன்னோட்டம்.
    கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.

    இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார். 

    சாம் ஜோன்ஸ், ஆனந்தி
    சாம் ஜோன்ஸ், ஆனந்தி

    “நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஒளிப்பதிவாளராக எம்.எஸ்.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர். “நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ- என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், நிஷாந்தி. இவர், நடிகை பானுப்ரியாவின் உடன்பிறந்த தங்கை. முதல் படமே வெற்றி அடைந்ததால், அவருக்கு புது பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. அக்காள் பானுப்ரியாவைப்போல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாக நடித்து பிரபலமானார்.

    சாந்தி பிரியா

    திடீர் என அவர் நிஷாந்தி என்ற பெயரை மாற்றிக்கொண்டார். சாந்திப்ரியா என்ற சொந்த பெயரில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால், திரையுலகை விட்டு விலகினார். தற்போது அவர், ‘ஓ.டி.டி.’ மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் ஒரு இணைய தொடரில் நடிப்பதற்காக நிஷாந்தி என்ற சாந்திப்ரியா மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்.
    நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது.
    தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. 

    சமீபத்தில் நடந்த நாகார்ஜுனா பிறந்த நாள் நிகழ்ச்சியில், சமந்தா பங்கேற்கவில்லை. அதேபோல் அமீர்கானுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் வீட்டில் விருந்து அளித்தனர். இதில் நாகார்ஜுனா, நாக சைதன்யா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் சமந்தா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதன்மூலம் இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போவது உறுதி என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    சமந்தா

    இந்நிலையில், நடிகை சமந்தா தன்னை பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    ‘ராக்கெட்ரி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
    இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ராக்கெட்ரி’. இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். 

    சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது.

    ராக்கெட்ரி படக்குழு வெளியிட்ட போஸ்டர்
    ராக்கெட்ரி படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில், ‘ராக்கெட்ரி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
    நடிகர் ஆர்யாவும், அவரது மனைவி சாயிஷாவும் கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகும் நிலையில், முதன்முறையாக குழந்தையின் பெயரை வெளியிட்டுள்ளார் ஆர்யா. அதன்படி அக்குழந்தைக்கு ‘ஆரியானா’ என பெயரிட்டுள்ளனர். இதையடுத்து ஆர்யா, சாயிஷா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    ஆர்யா, சாயிஷா
    ஆர்யா, சாயிஷா

    நடிகர் ஆர்யா நடிப்பில் தற்போது எனிமி, அரண்மனை 3 ஆகிய படங்கள் உருவாகி உள்ளன. இந்த இரண்டு படங்களும் வருகிற அக்டோபர் மாதம் 14-ந் தேதி ஆயுத பூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதில் எனிமி படத்தில் வில்லனாகவும், அரண்மனை 3 படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் ஆர்யா.
    நடிகை நயன்தாரா, இன்று காலை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். விஐபி தரிசனம் மூலம் இன்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்த அவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் வேதங்கள் முழங்க தேவஸ்தான பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
    பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்ததாக ‘ஆதிபுருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமாயணத்தின் ஒருபகுதியை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.

    ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆதிபுருஷ் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
    ஆதிபுருஷ் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சச்சேத் பரம்பரா இசையமைக்கிறார்.
    பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
    ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. 

    இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். முதல் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால், தற்போது அதற்கான நடிகைகள் தேர்வு நடக்கிறது. இதனிடையே ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் பரவி வந்தது.

    அனுஷ்கா

    இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பி.வாசு கூறியதாவது: “ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அனுஷ்கா மட்டுமின்றி இன்னும் சில முன்னணி நடிகைகளிடமும் பேசி வருகிறோம். 

    சந்திரமுகியாக அனுஷ்கா தான் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகை நடிக்க உள்ளாரா? என்பது குறித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் ‘சந்திரமுகி 2’ படத்தில் அனுஷ்கா நடிப்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
    பொன்மகள் வந்தாள் படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், பெண்கள் அமைதியை தகர்த்து எறிந்து வெளியே வரும்படி நடிகை ஜோதிகா அறிவுரை வழங்கியுள்ளார்.
    ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓ.டி.டி.யில் வெளியானது. பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. 

    பொன்மகள் வந்தாள் படத்தை சென்னை ராயபுரத்தில் உள்ள 9 வயது சிறுமி பார்த்து விட்டு 48 வயது உறவினர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தாயிடம் கூறியிருக்கிறார். இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு அந்த உறவினர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 

    ஜோதிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
    ஜோதிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இந்த செய்தியை பார்த்து பலரும் பொன்மகள் வந்தாள் படத்தை வலைத்தளத்தில் பாராட்டினர். இந்த செய்தியை நடிகை ஜோதிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பாதிக்கப்படும் பெண்கள் அமைதியை தகர்த்து எறிந்து வெளியே வரும்படி அறிவுரை வழங்கியுள்ளார். 

    ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், “அந்த அமைதி நிலையை தகர்த்து எறியுங்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு பெண் அவளுக்காக எழுந்து நிற்கும்போது அவள் தன்னை அறியாமலேயே எல்லா பெண்களுக்காகவும் எழுந்து நிற்கிறாள்“ என்று கூறியுள்ளார்.
    ×