என் மலர்
சினிமா செய்திகள்
பொன்மகள் வந்தாள் படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், பெண்கள் அமைதியை தகர்த்து எறிந்து வெளியே வரும்படி நடிகை ஜோதிகா அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓ.டி.டி.யில் வெளியானது. பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.
பொன்மகள் வந்தாள் படத்தை சென்னை ராயபுரத்தில் உள்ள 9 வயது சிறுமி பார்த்து விட்டு 48 வயது உறவினர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தாயிடம் கூறியிருக்கிறார். இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு அந்த உறவினர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜோதிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்த செய்தியை பார்த்து பலரும் பொன்மகள் வந்தாள் படத்தை வலைத்தளத்தில் பாராட்டினர். இந்த செய்தியை நடிகை ஜோதிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பாதிக்கப்படும் பெண்கள் அமைதியை தகர்த்து எறிந்து வெளியே வரும்படி அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், “அந்த அமைதி நிலையை தகர்த்து எறியுங்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு பெண் அவளுக்காக எழுந்து நிற்கும்போது அவள் தன்னை அறியாமலேயே எல்லா பெண்களுக்காகவும் எழுந்து நிற்கிறாள்“ என்று கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள மகா சமுத்திரம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சித்தார்த், அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் நடிப்பில் தற்போது மகா சமுத்திரம் படம் உருவாகி வருகிறது. இதில் தெலுங்கு நடிகர் சர்வானந்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகா சமுத்திரம் படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், மகா சமுத்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து மகா சமுத்திரம் படத்தின் இயக்குனரான அஜய் பூபதி கூறுகையில், நடிகர் சித்தார்த் அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும், அதன் காரணமாகத் தான் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் எதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், ரசிகர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இது பரபரப்பானது.

ரசிகர்கள் மற்றும் இயக்கத்தினரின் இச்செயல்களை அவ்வப்போது விஜய் அனுமதியோடு கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும், இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபடுவது வருத்தத்துக்கு உரியது.
இதுபோன்ற செயல்களை விஜய் என்றும் விரும்புவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், விஜய்யின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விஜய் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையடுத்து நடிகர் விஜய் ஒப்புதலோடு அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “சமீபகாலமாக, இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் அல்லது ஆர்வக்கோளாறால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படத்துடன் இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

ரசிகர்கள் மற்றும் இயக்கத்தினரின் இச்செயல்களை அவ்வப்போது விஜய் அனுமதியோடு கண்டித்துள்ளேன். இயக்க தோழர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும், இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபடுவது வருத்தத்துக்கு உரியது.
இதுபோன்ற செயல்களை விஜய் என்றும் விரும்புவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், விஜய்யின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விஜய் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
பி செந்தில் குமார் இயக்கத்தில் மகேஷ், மேகனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வீராபுரம் 220’ படத்தின் விமர்சனம்.
நாயகன் மகேஷும், அவரது தந்தையும் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்களின் ஓட்டல் எதிரே நாயகி மேக்னாவின் பியூட்டி பார்லர் உள்ளது. நாயகி மீது காதல் வயப்படும் மகேஷ், அதனை அவரிடம் சொல்ல முடியாமல் தயங்கி வருகிறார். நாயகன் மகேஷுக்கு 5 நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, மது அருந்துவது என பொறுப்பின்றி சுற்றி வருகிறார்.
இந்த சமயத்தில் மணல் திருடும் லாரி மோதுவதால் தனது தந்தையை இழக்கிறார் நாயகன். இதனை அடுத்து மணல் திருட்டை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் இறங்குகிறார் மகேஷ். அதனால் அவருக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சனைகளை அவர் எப்படி சமாளிக்கிறார்? இவரின் காதல் கைகூடியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் மகேஷ், கிராமத்து இளைஞராக நடித்திருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஊரில் நடக்கும் விபத்துகள் குறித்த ரகசியம் தெரியும்போது பொங்குகிறார். நாயகி மேகனா, வழக்கமான நாயகி போல் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். பாடல்களுக்கு மட்டும் வந்து செல்கிறார். நாயகனின் நண்பர்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சதீஷ் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் பி செந்தில் குமார், சமுதாய அக்கறையுடன் கூடிய கதையை சொல்ல முயற்சித்திருக்கும் அவர், திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார். குறும்படத்திற்கான கதையை பெரிய படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத காட்சிகள் அதிகம் சேர்த்திருப்பது படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் வீராபுரம் வெற்றிவாகை சூடி இருக்கும்.

இரட்டையர்கள் ரித்தேஷ் - ஸ்ரீதர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் கிராமத்து அழகை கண்முன் நிறுத்துகிறார்.
மொத்தத்தில் ‘வீராபுரம்’ வீரமில்லை.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் முன்னோட்டம்.
அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி, ‘கே.ஜி.எப்.’ புகழ் கருடா ராம், ஐஸ்வர்யா, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ஹரி கூறியதாவது: ‘‘சூர்யாவை வைத்து, ‘சிங்கம்’ என்று படம் எடுத்தது போல், அருண் விஜய்யை வைத்து, ‘யானை’ என்று படம் எடுத்து வருகிறோம். கதாநாயகன் யானையைப்போல் பலமானவன் என்பது படம் பார்க்கும்போது தெரியும்.

அருண்விஜய்
கிராமத்து பின்னணியில் தயாராகும் திகில் படம், இது. தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். 3 சண்டை காட்சிகள் உள்பட படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது’’ என்றார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.
‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.

தளபதி 66 படக்குழு வெளியிட்ட போஸ்டர்
வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் முன் அறிவிப்போடு தான் வெளியிடப்படும். ஆனால் சமீப காலமாக அந்த டிரெண்ட் மாறி உள்ளது. அஜித்தின் வலிமை குறித்த அறிவிப்புகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டன. அதேபோல் தற்போது விஜய்யின் ‘தளபதி 66’ அப்டேட்டும் அவ்வாறே வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.

அமலாபால்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார்.
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன், நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், நடிகை லிசி மகள் கல்யாணி, நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, நடிகை ஜீவிதாவின் மகள் சிவாத்மிகா, இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஆகியோர் கதாநாயகிகளாகி உள்ளனர்.
இந்த வரிசையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதியும் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார்.

சரஸ்வதி
தரமணி பட நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார்.
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் படத்தை இயக்குகிறார்.
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ், சாண்டி
ஏற்கனவே இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார். அதன்படி, பிக்பாஸ் பிரபலம் சாண்டி, விக்ரம் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்புவின் ‘மாநாடு’ ஆகிய படங்கள் தீபாவளியன்று ரிலீசாக உள்ள நிலையில், தற்போது அருண் விஜய் நடித்துள்ள படமும் இணைந்துள்ளது.
விஜய் சேதுபதி நடித்த றெக்க, ஜீவாவின் சீறு ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் ரத்தினசிவா. இந்த இரண்டு படங்களுக்கு முன்னர் அவர் இயக்கிய படம் ‘வா டீல்’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்தது.

வா டீல் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், இப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்புவின் ‘மாநாடு’ ஆகிய படங்கள் தீபாவளியன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருண் விஜய்யின் ‘வா டீல்’ படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படம் பண்டிகை தினத்தன்று ரிலீசாக உள்ளது.
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகி உள்ளது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டீ.டி.ராஜா தயாரித்துள்ளார்.

ராஜவம்சம் படத்தின் போஸ்டர்
இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த படக்குழு, தற்போது ரிலீஸ் தேதியை திடீரென மாற்றி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் விஷாலின் எனிமி, ஆர்யாவின் அரண்மனை 3 ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாசை மணக்க இருப்பதாக பேசப்பட்டது. பின்னர் ஐதராபாத் தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போவதாக செய்திகள் வெளியானது.
தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. இதையெல்லாம் அனுஷ்கா மறுத்தார். “எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன்” என்றார்.

அனுஷ்கா
அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் ஒருவரை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக புதிய தகவல் தற்போது பரவி வருகிறது.






