என் மலர்
சினிமா செய்திகள்
ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்புவின் ‘மாநாடு’ ஆகிய படங்கள் தீபாவளியன்று ரிலீசாக உள்ள நிலையில், தற்போது அருண் விஜய் நடித்துள்ள படமும் இணைந்துள்ளது.
விஜய் சேதுபதி நடித்த றெக்க, ஜீவாவின் சீறு ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் ரத்தினசிவா. இந்த இரண்டு படங்களுக்கு முன்னர் அவர் இயக்கிய படம் ‘வா டீல்’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்தது.

வா டீல் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், இப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்புவின் ‘மாநாடு’ ஆகிய படங்கள் தீபாவளியன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருண் விஜய்யின் ‘வா டீல்’ படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படம் பண்டிகை தினத்தன்று ரிலீசாக உள்ளது.
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகி உள்ளது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டீ.டி.ராஜா தயாரித்துள்ளார்.

ராஜவம்சம் படத்தின் போஸ்டர்
இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த படக்குழு, தற்போது ரிலீஸ் தேதியை திடீரென மாற்றி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் விஷாலின் எனிமி, ஆர்யாவின் அரண்மனை 3 ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவருக்கு இப்போது 39 வயது ஆகிறது. இவரது திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாசை மணக்க இருப்பதாக பேசப்பட்டது. பின்னர் ஐதராபாத் தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போவதாக செய்திகள் வெளியானது.
தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. இதையெல்லாம் அனுஷ்கா மறுத்தார். “எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன்” என்றார்.

அனுஷ்கா
அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் ஒருவரை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக புதிய தகவல் தற்போது பரவி வருகிறது.
வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் சிண்ட்ரெல்லா படத்தின் விமர்சனம்.
சென்னையில் சவுண்ட் இன்ஜினியராக இருக்கும் ராய் லட்சுமி, பறவைகளின் சத்தத்தை பதிவு செய்ய நண்பர்களுடன் கொடைக்கானல் பகுதிக்கு சென்று காட்டு பங்களாவில் தங்குகிறார். அந்த பங்களாவில் அமானுஷ்ய சக்தி இருப்பதை ராய்லட்சுமி உணருகிறார்.



அதேசமயம் அந்த ஊரில் இரண்டு மர்மக் கொலைகள் நடக்கிறது. இதற்கு காரணம் ராய் லட்சுமிதான் என்று போலீசார் அவரை கைது செய்கின்றனர். இறுதியில் அந்தக் கொலைகளை செய்தது யார் ? எதற்காக செய்தார்கள்? அந்த பங்களாவில் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. மாடர்ன் பெண்ணாகவும், வெகுளித்தனமான பெண்ணாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். வேலை பெண்ணாக பணிவிடை செய்வது, ஆடைக்காக பணம் சேர்ப்பது, நடனம் ஆடுவது என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார்.
மற்றொரு நாயகியாக வரும் சாக்ஷி அகர்வால் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். காதல், வெறுப்பு, கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். பேய்க்கு பயப்படும் போது பரிதாபத்தையும், ராய் லட்சுமியை திட்டும்போது கோபத்தையும் ஏற்படுத்துகிறார். வில்லி கதாபாத்திரம் சாக்ஷி அகர்வாலுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

ரோபோ சங்கர் இரண்டு காட்சிகளில் மட்டும் வந்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். கல்லூரி வினோத் மற்றும் நண்பர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
பேய் கதைகளில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வினோ வெங்கடேஷ். முதல் பாதி விறுவிறுப்பாகவும், திகிலாகவும் நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் மெதுவாகவும், சுவாரஸ்யம் இல்லாமலும் நகர்கிறது. திகில் காட்சிகள் கைகொடுத்த அளவுவிற்கு காமெடி காட்சிகள் கைகொடுக்கவில்லை.

அஸ்வமித்ராவின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். முதல் பாதியில் பல காட்சிகளில் இவருடைய பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. அதுபோல் ரம்மியின் ஒளிப்பதிவு, கொடைக்கானல் பகுதியை அழகாக படம் பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் சிண்ட்ரெல்லா மிரட்டல்.
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, மொட்ட ராஜேந்திரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பேய் மாமா’ படத்தின் விமர்சனம்.
ஒரு பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சில பேய்கள் வசித்து வருகின்றனர். அங்கு யோகிபாபு தன் குடும்பத்துடன் செல்கிறார். அந்த பேய்கள் தங்கள் பிளாஷ்பேக்கை சொல்லி யோகிபாபு உடலில் சென்று வில்லன் கோஷ்டிகளை பழி திட்டமிடுகிறார்கள்.
இறுதியில் யோகிபாபு வில்லன்களை பழிவாங்கினாரா? எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் எப்படி பேயாக மாறினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். ரஜினியின் சந்திரமுகி மற்றும் பேட்ட பட சாயலில் அறிமுகமாகிறார் யோகிபாபு. பல படங்களில் காட்சிகளை எடுத்து அதில் தன் பாணி டயலாக்கை சொல்லி நடித்திருக்கிறார். இது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. மற்ற கதாபத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
பேய் பங்களா கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். மற்ற படங்கள் போல் இப்படமும் வழக்கமான பேய் கதையாகவே இருக்கிறது. கதை மற்றும் காட்சிகளில் புதுமை இல்லை. வடிவேலு பேசிய டயலாக்குகளை எல்லாம் வைத்து பாடலாக உருவாக்கியுள்ளனர். இந்த பாடலை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. டி.வி. நிகழ்ச்சிகளை கிண்டல் செய்யும் காட்சிகள், யோகிபாபு பலரை திட்டும் காட்சிகள் கடுப்பை ஏற்படுத்துகிறது.

ராஜ் ஆர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ஓரளவிற்கு கொடுத்து இருக்கிறார். ஒளிப்பதிவில் எம்.வி.பன்னீர்செல்வம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘பேய் மாமா’ சிரிக்க முடியலமா.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றிருக்கும் நடிகர் விஜய், அங்குள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்டமாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். விமான நிலையத்திற்குள் விஜய் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் விஜய், டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அமைதியாக விஜய் வலம் வரும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும் 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னும் எஸ்பிபி இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள் எஸ்.பி.பி பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

எஸ்.பி.பி. - கமல்
நடிகர் கமல் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார். pic.twitter.com/xnmWcXonw2
— Kamal Haasan (@ikamalhaasan) September 25, 2021
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனிமை பற்றி ஒரு பதிவு செய்திருக்கிறார்.
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார்.

செல்வராகவன் பதிவு
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சில கருத்துக்களை பதிவு செய்து வருவார். தற்போது, ‘இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.’ என்று பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தரராக இருந்து வரும் கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் பிலிம் சாம்பர் ஆப் காமர்ஸ் ஆகியவற்றில் முன்னாள் தலைவராக பணி புரிந்தவர் கேயார். இவர் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தரராகவும் இருந்து இருக்கிறார். கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார் சிறுநீரக கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கேயாரின் மனைவி இந்திரா
நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் இந்திரா காலமானார். அவரது வயது 67. இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர். இந்திரா அவர்களின் இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த பாடகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ் திரையிசை வரலாற்றில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு என்று தனிப் பெருமை இருக்கிறது. ரசிகர்கள் இவருக்கு பாடும்நிலா என்று பட்டம் கொடுத்து அழைத்தாலும் திரையுலகில் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக்குப் பிறகு அதிகம் நேசிக்கப்பட்ட மூன்றெழுத்து எஸ்.பி.பி. என்ற மூன்றெழுத்தாகதான் இருக்கும்.
1966ல் கோதண்டபாணி இசையில் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்.பி.பி. 1964ம் ஆண்டுகளில் மெல்லிசைக்குழு வைத்து நடத்தி வந்தார். இவரது இசைக்குழுவில்தான் இளையராஜா கிடார் வாசித்து வந்தார். அன்று முதல் பாவலர் சகோதரர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்தார் எஸ்.பி.பி. முதல் பாடலாக ஓட்டல் ரம்பா படத்தில் அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடினார். ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை. 1966ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சாந்தி நிலையம் படத்தில் இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடலைப்பாடினார்.

எஸ்.ஜானகியோடு முதல் பாடலாக கன்னிப்பெண் படத்தில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் என்ற முதல் பாடலை பாடத்தொடங்கி அவருடன் அதிக பாடலை பாடி முடித்தார். சங்கராபரனம் படத்திற்காக முதல் தேசிய விருதைப் பெற்ற எஸ்.பி.பி. தொடர்ந்து பல விருதுகளை வாங்கிக்குவித்தார். ஏக்துஜே கேலியே பாடலும் சலங்கை ஒலி படத்தின் பாடலுக்கும் தேசிய விருதுகளைப்பெற்றார்.

இந்தியாவின் பதினாறு மொழிகளிலும், நாற்பதாயிரம் பாடல்களுக்குமேல் பாடல் பாடிய கின்னஸ் சாதனைப் பாடகராக இருப்பவர் பாலசுப்ரமணியம். இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல்கள் மட்டும் தனிக்கவனம் பெற்றன. இதனால் வெற்றிகரமாக இளையராஜாவோடு பயணத்தைத்தொடர்ந்தார். சிகரம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எஸ்.பி.பி. ஒரு நல்ல மிமிக்ரி கலைஞரும் கூட ரஜினி, கமல் படங்கள் பிற மொழியில் மாற்றம் செய்யும் போது அவர்கள் குரல் போலவே பேசி டப்பிங் செய்து கொடுப்பார்.
திருவண்ணாமலை முதல் சீரடி, திருப்பதி, மந்த்ராலயம் என்று பல கோவில்களில் பக்தி பாடல்களாக இவர் குரலே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எந்த பாடகருக்கும் அமையாத ஒரு வரமாக இவரது பாடல்களே அவர் வாழ்க்கையை பிரதிபலித்தது.

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டபோதும் கடைசியாக கொரோனா விழிப்புணர்வுக்காக ஒரு பாடலைப் பாடிவிட்டுப் போனார். உதயகீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் என்ற பாடலின் வரிகள் இப்போது கேட்டாலும் நம்மை கலங்க வைக்கும்.
கண்ணே தீரும் சோதனை
இரு கண்ணில் என்ன வேதனை
தந்தேன் எந்தன் ஜீவனை
என் சாவில் கூட சாதனை
என்ற வரிகள் எஸ்.பி.பி. அவருக்காக பாடிய வரிகளாக மாறிப்போனது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 25ம் தீவிர கொரோனா பாதிப்பால் பாடுவதை நிறுத்திக்கொண்டார் எஸ்.பி.பி. அவர் மறைந்தாலும் பாடும் நிலவாக ரசிகர்களை தன் பாடல் மூலம் காலம் முழுவதும் சந்தோஷப்படுத்திக்கொண்டிருப்பார் எஸ்.பி.பி.
எஸ்.பி.பி.யின் நினைவு தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படங்கள், பாடல்கள் மற்றும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
ஷாரங் இயக்கத்தில் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நடுவன்’ படத்தின் விமர்சனம்.
கொடைக்கானலில் பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்தும் சேர்ந்து தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். கோகுல் ஆனந்த், ஒரு முழு நேர குடிகாரர் என்பதால், பரத் தான் அங்கு அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். . பரத்துக்கு ஒரு மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
பரத்தின் மனைவி அபர்ணா வினோத்தும், நண்பன் கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். இந்த விவகாரம் பரத் வீட்டில் தங்கி வேலை பார்க்கும், உறவுக்கார இளைஞர் அருவி பாலாவுக்கு தெரிந்துவிடுகிறது. இதையடுத்து அவரை கோகுல் ஆனந்த் மிரட்டி வைக்கிறார். இறுதியில் கள்ளக் காதல் விவகாரத்தை பரத்திடம் பாலா சொன்னாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தேயிலை தொழிற்சாலை முதலாளியாக பரத் நடித்திருக்கிறார். கம்பெனியே கதி என கிடக்கும் அப்பாவியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். பரத்தின் மனைவியாக, நடித்துள்ள அபர்ணா வினோத் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளார். பரத்தின் நண்பராக நடித்துள்ள கோகுல் ஆனந்த், குடிகாரர், கள்ளக் காதலர் என வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
இயக்குனர் ஷாரங், கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ள விதம் அருமை. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, அபர்ணா, கோகுல் கள்ளக் காதல் விவகாரம் தெரிய வந்த பிறகுதான் வேகம் எடுக்கிறது. பலரும் தங்கள் உண்மை முகங்களை மறைத்து வேறொரு முகத்தைக் காட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு பரபரப்பான திரில்லராக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

திரில்லர் படங்களுக்குப் பின்னணி இசைதான் பக்கபலமாக இருக்கும். ஆனால் இப்படத்தில் அது சரிவர அமையாதது பின்னடைவு. தரண் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஒளிப்பதிவாளர் யுவாவின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் அழகை கண்முன் கொண்டு வந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘நடுவன்’ சோபிக்கவில்லை.
மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, ராதா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் முன்னோட்டம்.
ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
படத்தை பற்றி இயக்குனர் மோகன் ஜி கூறியதாவது: “பழைய வண்ணாரப்பேட்டை படத்திலிருந்து திரௌபதி படம் வரை என்னைச் சுற்றி இருப்பவர்களின் கதைகளைத்தான் படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தான் திரௌபதி திரைப்படத்தை உருவாக்கி இருந்தேன். ருத்ர தாண்டவம் படத்தின் கதையையும் என்னுடைய நண்பரான கிருத்துவ பாதிரியார் ஒருவர் தான் அளித்தார்.

தர்ஷா குப்தா, ரிஷி ரிச்சர்ட்
கிருத்துவ மதத்தில் பல உட்பிரிவுகள் இருக்கிறது கிறிஸ்தவ மதத்தை சிலர் கார்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார். மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் என்ற படத்தை பற்றி விரிவாக விவாதித்தார்.
இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் என விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும்” என சொன்னார்.






