என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது.
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி வெகுநாட்களாகவே உலவுகிறது. சமீபத்தில் திருப்பதி வந்த சமந்தாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்காமல் கோபப்பட்டார்.

சமந்தா, நாக சைதன்யா
இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நாகசைதன்யா, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “நான் சிறுவயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.
சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன், நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
ஆனந்த ரமணன் இயக்கத்தில் நவயுகா, சிறுமி அன்பரசி, மன்மதன் பாஸ்கி நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘ஆறாம் நிலம்’.
இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஆறாம் நிலம். ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நவயுகா, சிறுமி அன்பரசி, நடிகர் மன்மதன் பாஸ்கி ஆகியோர் நடித்துள்ளனர்.
சிவ சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சிந்தகா ஜெயக்கொடி இசையமைத்துள்ளார். சஜீத் ஜெயக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை நேரடியாக யூடியூபில் வெளியிட்டு உள்ளனர். ஈழத் தமிழர்கள் சந்தித்த இன்னல்களை, ஒரு டாக்குமெண்டரி படமாக இயக்குனர் ஆனந்த ரமணன் எடுத்துள்ளார்.
சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘லவ் ஸ்டோரி’. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.
இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “நல்லவேளை போலா ஷங்கர் படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை. ஏனென்றால், அவருடன் ஜோடியாக நடித்து, டூயட் பாடவே நான் விரும்புகிறேன். அவருக்கு அண்ணனாக நடிக்க விருப்பமில்லை என்று வேடிக்கையாக கூறினார்.

சிரஞ்சீவி
போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் படக்குழு அணுகியது. அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அக்கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தற்போது ‘போலா ஷங்கர்’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

தமன்னா, சிரஞ்சீவி
இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் இணைந்து நடித்திருந்த தமன்னா, தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.
மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் விமர்சனம்.
கிராமத்தில் வசிக்கும் ரம்யா பாண்டியன், பக்கத்து ஊரில் இருக்கும் மிதுன் மாணிக்கத்தை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ரம்யா பாண்டியன் திருமணம் செய்யும் போது அவர்கள் வளர்த்து வந்த கருப்பன், வெள்ளையன் என்ற இரண்டு மாடுகளை சீதனமாக எடுத்து செல்கிறார்.


மிதுன் மாணிக்கமும், ரம்யா பாண்டியனும் கருப்பன், வெள்ளையனை குழந்தைகளை போல் வளர்த்து வருகிறார்கள். ஒரு நாள் கருப்பன், வெள்ளையன் என இரண்டு மாடுகளும் காணாமல் போகின்றன. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள்.

இறுதியில் கருப்பன், வெள்ளையனை மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் இருவரும் கண்டு பிடித்தார்களா? காணாமல் போக என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மிதுன் மாணிக்கம், அறிமுகம் என்று தெரியாதளவிற்கு நடிப்பில் பளீச்சிடுகிறார். பல இடங்களில் யதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மாடுகள் மீது அக்கறை காட்டுவது, அவர்களுடன் பழகுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மிதுன் மாணிக்கத்தின் நண்பராக வரும் வடிவேல் முருகன், டைமிங் காமெடியில் அசத்தி இருக்கிறார். செய்தியாளராக வரும் வாணி போஜன், அளவான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார்.
கிராமத்து பின்னணியில் அழகான கதையை பாசம், அரசியல் கொண்டு இயக்கி, அறிமுக படத்திலேயே அசத்தி இருக்கிறார் அரிசில் மூர்த்தி. மாடுகளுக்கும், குடும்பத்தினருக்கும் உள்ள பாசத்தை இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். மாடுகளை வைத்தே முழு திரைக்கதையும் நகருவதால், ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்துகிறது.

கிரிஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்து இருக்கிறார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கும் பாடகர் கிரிஷ், சிறந்த இசையமைப்பாளராக வலம் வருவார் என்று சொல்லலாம். சுகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ சுமாரான ஆட்சி.
பா.இரஞ்சித் அடுத்ததாக இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை பா.இரஞ்சித் இயக்கிய 5 படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார். அதனால் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பா.இரஞ்சித் அடுத்ததாக இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு வேறு இசையமைப்பாளரை தேடி வருவதாக கூறப்பட்டது.

தென்மா
அதன்படி இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தென்மா என்பவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் தென்மா பா.இரஞ்சித் தயாரித்த ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு கான்ட்ராக்டர் நேசமணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கான்ட்ராக்டர் நேசமணி படத்தின் போஸ்டர்
இப்படத்தில் ஓவியா, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை ஸ்வதீஸ் எம்.எஸ் இயக்க உள்ளார். தர்ம பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, பிரபல கிரிக்கெட் வீரருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள விஜய்சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. தற்போது 12 படங்கள் கைவசம் வைத்துள்ளார். மற்ற நடிகர்கள் படங்களில் வில்லனாகவும் நடிக்கிறார்.
இந்தநிலையில் விஜய்சேதுபதியை பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சந்தித்து பேசி உள்ளார். அந்த புகைப்படங்களை ஸ்ரீசாந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, “உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா” என்று பதிவிட்டு உள்ளார். ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
புதிய படத்தில் விஜய்சேதுபதியுடன் அவர் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இதுகுறித்து இருவரும் இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் பரவி வருகிறது. புதிய படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ச்சூ மந்திரகாளி’ படத்தின் விமர்சனம்.
படத்தின் கதை 2 கிராமங்களை சுற்றியே நடக்கின்றன. ஒரு கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். எல்லோரும் அண்ணன்-தம்பி உறவு முறை கொண்டவர்கள். இருப்பினும் பொறாமை குணம் கொண்டவர்கள். ஒருவருக்கொருவர் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.
இவர்களின் பக்கத்து ஊரில், ஒரு சாபக்கேடு. எந்த பெண்ணும் கர்ப்பம் தரிப்பதில்லை. சூனியம் வைத்துக்கொள்ளும் கிராமத்தை சேர்ந்தவர் கதாநாயகன். அந்த பழக்கத்தில் இருந்து ஊர் மக்களை காப்பாற்ற பக்கத்து ஊருக்கு சென்று மாந்திரீகம் தெரிந்த ஒரு பெண்ணை அழைத்துவர முயற்சிக்கிறான். அவன் முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக கார்த்திகேயன் வேலு, புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நடித்து இருக்கிறார். மாந்திரீகம் தெரிந்த பெண்ணாக சஞ்சனா புர்லி அறிமுகமாகி இருக்கிறார். வசீகர முகம். நடிப்பிலும் பளிச்சிடுகிறார். மற்ற கதாபாத்திரங்களிலும் அசல் கிராமத்து ஜனங்களை நடிக்க வைத்து இருக்கிறார்கள்.
படத்தின் முதல் பாதியை கலகலப்பாக கதை சொன்ன இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை, இரண்டாவது பாதியில், ‘கிராபிக்ஸ்’ உதவியை நாடியிருக்கிறார். படம் முழுக்க ஏராளமான புது முகங்கள் நடித்திருந்தாலும் அவர்களை திறம்பட கையாண்டுள்ளார்.

சதிஷ் ரகுநாதனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் நவிப் முருகன் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். முகமது பர்ஹாணின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் ‘ச்சூ மந்திரகாளி’ ரசிக்க வைக்கிறது.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வந்துள்ளன.
திருமணத்துக்கு பிறகு சமந்தா தனது பெயருக்கு பின்னால் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்து இருந்தார். சமூக வலைத்தளத்திலும் சமந்தா அக்கினேனி என்றே குறிப்பிட்டு இருந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு வலைத்தள பக்கத்தில் அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு எஸ் என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் குறிப்பிட்டார். இதை வைத்தே இருவரும் பிரியப்போகிறார்கள் என்று பேசப்பட்டது.
சமந்தா தற்போது நாக சைதன்யாவுடன் இல்லை என்றும், 4 மாதங்களாகவே தனியாகத்தான் வசித்து வருகிறார் என்றும், இருவரும் விவாகரத்துக்கு தயாராகி உள்ளனர் என்றும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் திருப்பதி வந்த சமந்தாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்காமல் கோபப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவையும், நாக சைதன்யாவையும் சேர்த்து வைக்க 4 முறை சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தும் விவாகரத்தில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள். விவாகரத்து பெறும்பட்சத்தில் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா ரூ.50 கோடி வரை கொடுக்க சம்மதித்து உள்ளதாக ஒரு தெலுங்கு இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.
சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும், அவர்கள் எதிர்ப்பை மீறியே பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்தார் என்றும், இதுவே பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜூராசிக் பார்க், தி லயன் கிங் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் குரங்கை மையமாக வைத்து அவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் அவர் அந்த படத்தை எடுக்கப்போகிறாராம். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் அடுத்ததாக விஜய்யின் 65-வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து விஜய்யின் 65-வது பட வாய்ப்பு நெல்சனுக்கு சென்றது. தற்போது அப்படம் ‘பீஸ்ட்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜூராசிக் பார்க், தி லயன் கிங் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் குரங்கை மையமாக வைத்து அவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் அவர் அந்த படத்தை எடுக்கப்போகிறாராம். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கத்தில் செந்தில்நாதன், சாண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் சின்னஞ்சிறு கிளியே படத்தின் விமர்சனம்.
நாயகன் செந்தில்நாதன் கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். இவர் ஆங்கில மருத்துவம் மீது அதிக நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். அதே ஊரில் வசிக்கும் சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் செந்தில்நாதன். பிரசவத்தின் போது, ஆங்கில மருத்துவத்தால் சாண்ட்ரா இறந்துவிடுகிறார்.
தனக்கு பிறந்த பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார் செந்தில்நாதன். 6 வயதில் இருக்கும் போது, செந்தில்நாதனின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். இறுதியில், செந்தில்நாதனின் மகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? மகளை செந்தில்நாதன் கண்டுபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், ஒரு சில இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். நாயகியாக வரும் சாண்ட்ரா நாயர் அழகாக சிரித்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அர்ச்சனா சிங் நடிப்பில் பளிச்சிடுகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பதிவத்தினி, நடிப்பில் கவர்ந்திருக்கிறார். தந்தையை செல்லமாக மிரட்டுவது, பாசம், அக்கறை என நெகிழ வைத்திருக்கிறார். பாலாஜி சண்முகசுந்தரம், குள்ளபுலி லீலா, செல்லதுரை, விக்ரமாதித்யன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

கிராமத்து பின்னணியில் அப்பா மகள் பாசம், இயற்கை மருத்துவத்தின் மகிமை, காதல், மெடிக்கல் கிரைம் என கலந்துக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன். முதல்பாதி திரைக்கதை, எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம்பாதி மெடிக்கல் கிரைம் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார். கதையில் இருக்கும் வலு, திரைக்கதையிலும், கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அதிகம் இல்லை. இப்படம் பல விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளது. பல விருது படங்கள் ஆவணப் படங்கள் போல் இருக்கும். ஆனால், இப்படம் அதுபோல் இல்லாமல் இருப்பது சிறப்பு.
மஸ்தான் காதரின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். பாண்டியன் கருப்பனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘சின்னஞ்சிறு கிளியே’ ரசிக்கலாம்.






