என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கி நடிக்கும் ‘பிக்கப் டிராப்’ படத்தில், அவருக்கு ஜோடியாக வனிதா நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், தற்போது ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் அவர் வனிதாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பவர் ஸ்டார் சீனிவாசன்
இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை படக்குழுவினர் உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்த கென் கருணாஸ், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
நடிகர் தனுஷின் 44-வது படம் ‘திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவகர் இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கருணாஸ், கென், தனுஷ்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் கருணாஸ், கென் உடன் தனுஷ் எடுத்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவெ வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்த கென் கருணாஸ், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
நடிகை குஷ்பு, இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சினிமாவில் முன்னணி நடிகையாக வெற்றிகண்ட குஷ்பு, தற்போது அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இன்று 51-வது பிறந்தநாளை கொண்டாடும் அவர், கடந்து வந்த பாதையை இந்த தொகுப்பில் காணலாம்.
சினிமா
1970-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி மும்பையில் பிறந்தார் குஷ்பு. இவரது இயற்பெயர் நகர்த் கான். 1980-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார் குஷ்பு. பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்திருந்த போதும், அவருக்கு புகழை தேடித் தந்தது, தமிழில் பிரபு ஜோடியாக 1988-ம் ஆண்டு அவர் நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படம் தான்.

இதையடுத்து வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மைக்கேல் மதன காமராஜன், சின்ன தம்பி, நாட்டாமை, அண்ணாமலை, பெரியார், மன்னன், சிங்காரவேலன் என இவர் நடித்த வெற்றிப் படங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் குஷ்பு.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள குஷ்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்திய அளவில் நடிகை ஒருவருக்கு கோயில் கட்டப்பட்டது என்றால், அது குஷ்புவிற்கு மட்டும் தான். அந்த அளவிற்கு தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
காதல் திருமணம்
முறைமாமன் படத்தில் நடித்தபோது இயக்குனர் சுந்தர்.சி மீது காதல் வயப்பட்ட குஷ்பு. கடந்த 2000-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட குஷ்பு. அவ்னி சினிமேக்ஸ் என்கிற பட நிறுவனத்தை தொடங்கி கிரி, ரெண்டு, கலகலப்பு, அரண்மனை 2, மீசைய முறுக்கு, நட்பே துணை போன்ற படங்களை தயாரித்தார். இதுதவிர சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ள அவர், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
அரசியல்
கடந்த 2010-ம் ஆண்டு அரசியலில் குதித்த குஷ்பு, கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இருந்தபோது கடந்த 2014-ம் ஆண்டு திமுக-வில் இருந்து விலகினார் குஷ்பு. இதையடுத்து 2014-ம் ஆண்டு சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸில் சேர்ந்த குஷ்பு, கடந்தாண்டு அக்கட்சியில் இருந்து விலகி, பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

ரீ-என்ட்ரி
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் பிசியாக இயங்கி வரும் குஷ்பு, தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். அதன்படி சிவா - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார் குஷ்பு. இப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள குஷ்பு, இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இப்படி நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே செல்லும் நடிகை குஷ்பு, இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக நடிகை குஷ்புவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ்
இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வரும் பகத் பாசில், அப்படத்தை முடித்த பின் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சிங்கம், சிறுத்தை படங்கள் பற்றி பேசி இருக்கிறார்.
பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தனஞ்ஜெயன், சி.வி.குமார், நலன் குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

ஞானவேல் ராஜா பேசும் போது, அட்டகத்தி படம் பத்திரிகையாளர் சந்திப்பு போல் இருக்கிறது. படக்குழுவினரிடம் பழகும் போது கல்லூரி சென்ற அனுபவம் போல் இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை இயக்கி இருக்கிறார்கள். அட்டகத்தி படத்தில் பணியாற்றிய பா.ரஞ்சித், தினேஷ் ஆகியோருக்கு எப்படி பெரிய படங்கள் வாய்ப்பு கிடைத்ததோ, அதுபோல் பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழுவினருக்கும் அமையும்.

ஞானவேல் ராஜா
எனக்கு லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும் தான். அதாவது சூர்யா நடித்த சிங்கம், கார்த்தி நடித்த சிறுத்தை படங்கள் தான் எனக்கு நல்ல லாபத்தையும் பெயரையும் கொடுத்தது. அதுபோல் இப்போது பன்றி படம் எனக்கும் படக்குழுவினருக்கும் நல்ல பெயரை பெற்று தரும் என்று நம்புகிறேன் என்றார்.
விஜய் குறித்து வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ள நிலையில், அதற்கு விளக்கம் அளித்து எஸ்ஏ சந்திரசேகர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரையும் தனது வீட்டின் வாசலில் காக்க வைத்ததாக விஜய் குறித்து வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ள நிலையில் அதற்கு விளக்கம் அளித்து எஸ்ஏ சந்திரசேகர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
இன்றைய வார இதழில் எனது பேட்டி வெளியாகியுள்ளது. அந்த பேட்டி மிகவும் நன்றாக உள்ளது. நான் கூறியிருந்த தகவல்களை சரியாக பதிவு செய்து இருந்தார்கள். ஆனால் என்னுடைய குடும்பத்தை பற்றி ஒரு தவறான, நான் சொல்லாத ஒரு விஷயத்தை அதில் பதிவு செய்துள்ளார்கள். அதற்காகவே இந்த விளக்கம்.
நானும் ஷோபாவும் விஜய் வீட்டிற்கு வெளியில் காரில் காத்திருந்ததாகவும், விஜய் ஷோபாவை மட்டும் உள்ளேயே வரச்சொன்னதாகவும் நாங்கள் இருவருமே திரும்பி வந்து விட்டதாகவும் ஒரு தவறான செய்தியை அதில் பதிவு செய்துள்ளார்கள். அது உண்மை அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஏனெனில் எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான். அதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் விஜய்யும் அவருடைய தாயும் எப்பொழுதும் போல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கின்றார்கள், பழகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, மனக்கசப்பும் இல்லை.
அவ்வாறு இருக்கும்போது ஷோபா அவர்கள் வீட்டின் வெளியே காத்திருந்ததாக பொய்யான ஒரு தகவலை பதிவு செய்ததற்கு விளக்கம் அளிக்கவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றேன். இதை விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன்’ என்றார்.
நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்து இருக்கிறார்.
விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ படம் வெளியானது. இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியானது. தற்போது வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்கும் ‘டாணாக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் பிரபு நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவருடன் இவர் தந்தை பிரபுவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், நடிகர் விக்ரம் பிரபு, தனது தந்தை பிரபு மற்றும் தாயுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது விக்ரம் பிரபு கூறும்போது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதற்காக சாமி தரிசனம் செய்ய வந்தோம்’ என்றார். பிரபு கூறும்போது, ‘கொரோனாவில் இருந்து நாட்டு மக்கள் அனைவரும் விடுபட வேண்டும். சினிமாத்துறை மட்டுமில்லாமல் எல்லாத்துறையும் சிறந்து விளங்க வேண்டும்’ என்றார்.
ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார்.
தற்போது, மீண்டும் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ’அத்ரங்கி ரே’ படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின், படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ‘அத்ரங்கி ரே’ நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்ரங்கி ரே படக்குழுவினர்
சமீபத்தில் அக்ஷய் குமார் அளித்தப் பேட்டியில் ஒன்றில், நேரடியாக ‘அத்ரங்கி ரே’ படத்தை ஓடிடியில் வெளியிட பரிசீலித்து வருவதாகத் தெரிவித்து இருந்தார். நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்துடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அன்கா புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாகும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படத்தின் முன்னோட்டம்.
யோகிபாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகளவில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ட்ரெண்டானது.
அந்த சமயத்திலேயே, கான்ட்ராக்டர் நேசமணி தலைப்பில் தமிழில் படமெடுக்க பலரும் விருப்பம் தெரிவித்தனர். இப்போது அதற்கு அறிமுக இயக்குநர் ஸ்வாதீஷ் எம்.எஸ். வடிவம் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தை ஸ்வாதீஷ் எம்.எஸ் இயக்க, அன்கா மீடியா சார்பில் ‘வால்டர்’ படத்தின் இயக்குநர் யு.அன்பு, ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்தி கே தில்லை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

கான்ட்ராக்டர் நேசமணி படக்குழு
அன்கா மீடியாவின் முதல் படைப்பாக தயாராகிறது. தர்மபிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு, சுபாஷ் தண்டபாணி, ஒளிப்பதிவு செய்கிறார். 'மிருதன்' பட புகழ் வெங்கட் ரமணன் படத்தை தொகுக்க, ஏ.ஆர்.மோஹன் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை 'ராட்சசன்' படப் புகழ் விக்கி அமைத்திருக்கிறார். ‘சார்பட்டா பரம்பரை’ படப் புகழ் மெட்ராஸ் மீரான் பாடல்களை எழுதியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் மொயின் அலி தனது டெஸ்ட் கெரியரில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்பதையும் அவர் தெரிவித்தார். கிரிக்கெட் வீரர் மொயின் அலி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், மொயின் அலி தனது டெஸ்ட் கெரியரில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.
அதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் திடீரென என்னை அழைத்து ‘வலிமை’ அப்டேட் என கேட்டார். அதை என்னால் மறக்க முடியாது என்று மொயின் அலி கூறியுள்ளார். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஸ்வின், ‘அப்பவே சொன்னேன்’ என்று சிரிக்கும் எமோஜிகளுடன் பதிவிட்டுள்ளார்.
Appoveh sonnen.😂😂😂 https://t.co/WhBdu6huhA
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) September 27, 2021
சினிமா உலகில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் நடிகை ரம்யா நம்பீசன், ஒரு படத்திற்காக மாட்டு வண்டி ஓட்டி இருக்கிறார்.
கதாநாயகிகளில் நடிப்பு மட்டும் அல்லாமல் தனித்திறமையுள்ளவராக இருப்பவர் ரம்யா நம்பீசன். நடிப்போடு பாட்டுப்பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. பல படங்களில் பாட்டுப்பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

ஒரு படத்தில் புல்லட் ஓட்ட வேண்டும் என்றவுடன் ஒரே நாளில் பயிற்சி எடுத்து, தைரியமாக ஓட்டிக்காட்டினார். இப்போது வெற்றி துரைசாமி இயக்கும் என்றாவது ஒரு நாள் படத்தில் மாட்டு வண்டி ஓட்டியிருக்கிறார்.
இது குறித்து ரம்யா நம்பீசன் கூறும்போது, கிராமத்தில் குடும்பக் கஷ்டத்தால் மாட்டு வண்டி ஓட்டிப் பிழைக்கும் பெண்ணாக வருகிறேன். முதல் நாள் மாடுகளை கையாளுவதில் எனக்கு சிக்கல் இருந்தது. அப்புறம் அந்த மாடுகளே பழகிவிட்டன என்றார்.

இப்படம் விவசாயம், குழந்தைத் தொழிலாளர்கள், கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறது. வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’ படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் இயக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்து நிலையில், அடுத்ததாக ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தை அடுத்து, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‘சிங்கப்பாதை’ என தலைப்பு வைக்க உள்ளார்களாம்.

ஒளிப்பதிவாளர் டுட்லி
இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் டுட்லி, சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் ஜுங்கா, ஆக்ஷன், பூமி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






