என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நடிகை சஞ்சனா கல்ராணி, ஜாமீனில் வெளியே வந்தார்,
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவர் கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் வழக்கில் சிக்கினார். அதில் நடிகை சஞ்சனா போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார்.

    இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் வாடகை காரில் ராஜராஜேசுவரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை சஞ்சனா சென்றார். அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் டிரைவர் சூசை மணியை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. 

    இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேசுவரி நகர் போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது டிரைவர் சூசை மணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டுள்ளனர். அத்துடன் சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டுவது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் சூசைமணி வழங்கி உள்ளார். அதன்பேரில், ராஜராஜேசுவரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சஞ்சனா நேற்று விளக்கம் அளித்துள்ளார். 

    இதுகுறித்து நடிகை சஞ்சனா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது; நான் தவறு செய்யவில்லை. இந்திராநகரில் இருந்து ராஜராஜேசுவரி நகருக்கு நான் வாடகை காரில் சென்றேன். என்னிடம் சொந்தமாக கார் இல்லை. ஏற்கனவே இருந்த காரை கணவர் பயன்படுத்துகிறார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன். 

    சஞ்சனா கல்ராணி
    சஞ்சனா கல்ராணி

    ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்த ராஜராஜேசுவரி நகருக்கு செல்ல வேண்டும் என்று டிரைவரிடம் கூறினேன். ராஜராஜேசுவரி நகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது. கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன்.

    நான் மேக்கப் போடாத காரணத்தால், என்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மேக்கப் போடாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவேன். டிரைவருக்கும் நான் யார்? என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கார் டிரைவர் தவறான பாதையில் சென்றது பற்றி கேட்டதால் தான் என் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நான் ஒரு நடிகை என்பதால், இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடிகை சஞ்சனா கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து நடிகை சஞ்சனாவிடமும், கார் டிரைவரிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்று உள்ளனர். மேலும் 2 பேரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். இதற்கிடையில், கார் டிரைவருடன் நடந்த மோதல் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் நடிகை சஞ்சனா காரில் கடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது டாக்டர், டான், அயலான் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனிடையே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் பரவி வந்தது. 

    சிவகார்த்திகேயன்

    இதற்கு பதில் அளித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்று பேச்சுவார்த்தை நடந்தது. என்னை பொறுத்தவரை அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடியாது. ரெமோ படத்தில் வரும் நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் இன்னொரு படம் எடுக்கலாம்” என்றார்.
    பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் பிரபலமானார். பின்னர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    ரம்யா பாண்டியன்
    ரம்யா பாண்டியன்

    இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள ரம்யா பாண்டியன், “பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால், அந்த நிகழ்ச்சியால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதைவிட குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெஸ்ட். எனக்கு மிகவும் பிடிக்கும். காமெடியுடன் ஜாலியாக இருக்கும். ரசிகர்களிடம் இருந்து எந்தவித வெறுப்பும் வராது” என கூறியுள்ளார்.
    தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவகாரத்து செய்யும் நடிகை சமந்தாவின் முடிவுக்கு அவரது தந்தை உருக்கமாக பதில் அளித்துள்ளார்.
    தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தாங்கள் பிரிகிறோம் என்று அறிவித்தார்கள். 

    நாகசைதன்யாவின் திருமண முறிவு குறித்து அவரது தந்தை நாகார்ஜுனா கூறும்போது, இது துரதிஷ்டவசமான ஒன்று, அதேசமயம் இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்.. அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    சமந்தா

    இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு, தனது மகளின் திருமணம் முறிவு எதிர்பார்க்காத ஒன்று. விவாகரத்து குறித்து கேள்விப்பட்டதும் என் மனம் கொஞ்ச நேரத்திற்கு செயலற்றுப் போய்விட்டது. எல்லாம் சில நாட்களில் சரியாகி ஆகிவிடும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் சரியாகவில்லை என்று வருத்தத்துடன் அவர் கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து தற்போது தயாரிப்பாளராக வலம் வரும் சார்மியின் புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
    தமிழில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து ‘லாடம்’ ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார்.

    தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார் சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவை வைத்து 'லிகர்' என்னும் படத்தை தயாரித்து வருகிறார். இதில் வில்லனாக மைக் டைசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சார்மி
    நாயுடன் சார்மி

    இந்நிலையில், சார்மி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாயுடன் செல்லமாக கொஞ்சி விளையாடுகிறார் சார்மி. அந்த நாய் பார்ப்பதற்கு பெரிய அளவில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து நாயா... அல்லது சிங்கமா என்று கமண்ட் செய்து வருகிறார்கள்.


    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
    ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து இருந்தார். தியேட்டரில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவு செய்து வருவார்.

    ஸ்ருதி ஹாசன்

    இந்நிலையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் முதுகு பக்கத்தில் இருக்கும் தன் பெயரை சத்தமாக படியுங்கள் என்று ஸ்ருதிஹாசன் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.



    பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் 66வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ள விஜய்யின் 66வது படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    பிரகாஷ் ராஜ் - விஜய்
    பிரகாஷ் ராஜ் - விஜய்

    அதில் ரஜினியுடன் நடித்து வருகிறேன், சூர்யாவுடன் நடித்து வருகிறேன், விஜய்யுடன் நடிக்கவுள்ளேன்’ என்று கூறியிருக்கிறார். விஜய்யின் அடுத்த படத்தில் அவர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் பேசுவதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

    ஏற்கனவே பிரகாஷ் ராஜ், விஜய்யுடன் இணைந்து ‘கில்லி’, ’போக்கிரி’, ’ஆதி’, ’சிவகாசி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ’வில்லு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரகாஷ்ராஜ் அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பல படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் பத்து தல படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    சிம்பு - கௌதம் கார்த்திக்
    சிம்பு - கௌதம் கார்த்திக்

    கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், 26.08.2021 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்கியுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் கௌதம் கார்த்திக் இணைந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    செல்வராகவனின் மனைவியும் இயக்குனருமான கீதாஞ்சலி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
    தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கீதாஞ்சலி.

    தனுஷ்

    இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கீதாஞ்சலி செல்வராகவன் நேற்று தனது 35 வது பிறந்தநாளை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார். அந்தக் கொண்டாட்டத்தில், நடிகர் தனுஷ், செல்வராகவன், நடிகை வித்யூலேகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    தனுஷ்

    இந்த புகைப்படங்களை கீதாஞ்சலி செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். 

    இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

    மாளவிகா

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், அதன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
    அறிமுக இயக்குனர் ராஜா சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘ரவுடி பேபி’ படத்தின் முன்னோட்டம்.
    நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ரவுடி பேபி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜா சரவணன் இயக்குகிறார். இவர் பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ரவுடி பேபி படக்குழு
    ரவுடி பேபி படக்குழு

    செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதி ஹாசன், ரசிகர் ஒருவருக்கு போன் நம்பர் கொடுத்து இருக்கிறார்.
    தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார்.

    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.

    ஸ்ருதி ஹாசன்

    இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களுடன் சமூக வலைத் தள பக்கத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் 100 என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பதிலை பலரும் லைக் செய்து வருகின்றனர்.
    ×