என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதி ஹாசன், ரசிகர் ஒருவருக்கு போன் நம்பர் கொடுத்து இருக்கிறார்.
    தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார்.

    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்.

    ஸ்ருதி ஹாசன்

    இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களுடன் சமூக வலைத் தள பக்கத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் 100 என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பதிலை பலரும் லைக் செய்து வருகின்றனர்.
    வம்சி பைடி பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 66’ படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடி பல்லி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

    விஜய், சிடாரா, மகேஷ் பாபு
    விஜய், சிடாரா, மகேஷ் பாபு

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சிடாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாம். கதை பிடித்துப்போனதால் அவரும் தனது மகளை நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மஹா படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஹன்சிகா, புதிதாக ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் மஹா, 105 மினிட்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.

    இந்நிலையில், நடிகை ஹன்சிகா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படத்துக்கு ‘ரவுடி பேபி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய ராஜா சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ரவுடி பேபி பட பூஜையில் வைரமுத்து, ஹன்சிகா
    ரவுடி பேபி பட பூஜையில் வைரமுத்து, ஹன்சிகா

    செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
    ராமாயண தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான, நடிகர் அரவிந்த் திரிவேதியின் மறைவு, பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ராமானந்த் சாகரின் ராமாயண இதிகாச தொடர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திரிவேதி. நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

    ராமாயணத்தில் எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் தனது பண்பட்ட நடிப்பால் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திருந்தார் அரவிந்த் திரிவேதி. 300-க்கும் மேற்பட்ட இந்தி, குஜராத்தி படங்களில் நடித்துள்ளார். இதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனது பங்களிப்பைச் செலுத்தினார். ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்டார். 

    அரவிந்த் திரிவேதி
    அரவிந்த் திரிவேதி

    திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். 1991-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யாகவும் இருந்தவர். இவர் மரணமடைந்ததாகப் பல முறை வதந்தி பரவியிருக்கிறது. இவருக்கு கவுஸ்துப் என்ற மனைவி இருக்கிறார். இவரது சகோதரர் உபேந்திரா திரிவேதியும் பிரபலமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    சூர்யா நடித்துள்ள நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய படங்களுக்கு ஏற்கனவே ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 

    இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வெளியாக இருக்கிறது.

    ஜெய் பீம் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் சென்சார் அப்டேட் மற்றும் ரன்னிங் டைம் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஜெய் பீம்’ படத்தின் ரன்னிங் டைம் 164 நிமிடம் (2 மணிநேரம் 44 நிமிடம்) என்றும், இப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூர்யா நடித்துள்ள படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்படுவது இது 3-வது முறை. ஏற்கனவே நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில், கடந்து வந்த பாதை குறித்து பேச வேண்டும் என போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்படுவதற்கு காரணம் அதில் நடக்கும் சண்டைகள் தான். அந்த வகையில் தற்போது நடந்து வரும் 5-வது சீசனில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள புரோமோ மூலம் அது உறுதியாகி உள்ளது.

    ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு தற்போது ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேச வேண்டும். நேற்று இசைவாணி, சின்னப் பொண்ணு ஆகியோர் தங்களது கதைகளை சொன்ன நிலையில், இன்று இமான் அண்ணாச்சி தனது கதையை கூறுவது போன்ற காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளன. 

    நமீதா, இமான் அண்ணாச்சி
    நமீதா, இமான் அண்ணாச்சி

    அதில், ‘பிக்பாஸ் டைட்டிலை ஒரு நகைச்சுவை நடிகர் வென்றால் நன்றாக இருக்கும்’ என்று இமான் அண்ணாச்சி கூற, அவரது பேச்சிற்கு சிரித்ததாக நிரூப் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை வருகிறது.

    இதையடுத்து நமீதா ’கஷ்டப்படுறோம் கஷ்டப்படுறோம் என்று யாரும் சொல்ல வேண்டாம், கஷ்டப்பட்டால் தான் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல முடியும்’ என்று கூறுகிறார். இன்னொரு புறம் நிரூப் மற்றும் அபிஷேக் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. 

    நிரூப், அபிஷேக் ராஜா
    நிரூப், அபிஷேக் ராஜா

    இதைக் கேட்டு சிபி சக்கரவர்த்தி மீண்டும் ஆவேசமாக, கடைசியில் நமீதா ’வீட்டில் சண்டை ஆரம்பிக்க போகுது’ என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரோமோ முடிவடைகிறது. மொத்தத்தில் இன்றைய எபிசோடில் காரசாரமான சண்டை நடக்கும் என்பது மட்டும் முதல் புரோமோவின் மூலம் தெரியவருகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    கொரோனாவால் சினிமா துறை முடங்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் - நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் முன்னணி நடிகர் - நடிகைகள் வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    அந்த வகையில், தற்போது நடிகர் ஆர்யா, வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சித்தார்த்தின் ‘அவள்’, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

    மிலிந்த் ராவ், ஆர்யா
    மிலிந்த் ராவ், ஆர்யா

    மேலும் இந்த வெப் தொடரில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருப்பது இதுவே முதன்முறை ஆகும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால், சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமண வீடியோ வைரலாகி வருகிறது.
    தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 

    அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால். 

    அமலாபால்

    இந்நிலையில், நடிகை அமலா பாலின் தம்பி அபிஜித்திற்கு நேற்று திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்தில் எடுத்த வீடியோவை நடிகை அமலாபால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
    மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ள நடிகை வித்யூலேகா, விவாகரத்து குறித்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலைசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் சஞ்சய் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர், தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். 

    அங்கு நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் அவரை கடுமையாக விமர்சித்ததுடன் நீங்கள் எப்போது விவாகரத்து செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேள்வியும் எழுப்பினர். 

    வித்யூலேகா
    வித்யூலேகா 

    இதனால் கோபமடைந்த வித்யூலேகா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நான் நீச்சல் உடை புகைப்படத்தை பகிர்ந்ததால் உங்கள் விவாகரத்து எப்போது என்று கேட்கின்றனர். நீங்கள் 1920 காலத்தை விட்டு விட்டு 2021 காலத்துக்கு வாருங்கள். ஒரு பெண் உடை அணிவதே விவாகரத்துக்கு காரணமாகி விடும் என்றால் பாரம்பரிய உடைகள் அணிந்த பெண்கள் எல்லோரும் அவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? 

    பாதுகாப்பு, நேர்மை, அன்போடு இருக்கிற கணவனை பெற்ற நான் அதிர்ஷ்டசாலி. உங்கள் நச்சு எண்ணங்களுக்காக என்னை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். நீங்கள் வாழ்க்கையில் வேகமாக பின்னோக்கித்தான் போவீர்கள். பெண்களை பாலியல் ரீதியாகவே நீங்கள் பார்க்கிறீர்கள். வாழு வாழவிடு” என்று கூறியுள்ளார்.
    நடிகை லிஜோமோல் ஜோஸின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
    மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ், கடந்த 2019-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. 

    இதையடுத்து தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இதுதவிர மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    லிஜோமோல் ஜோஸ், அருண் ஆண்டனி
    லிஜோமோல் ஜோஸ், அருண் ஆண்டனி

    இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் லிஜோமோல் ஜோஸ் திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கும் கேரளாவை சேர்ந்த அருண் ஆண்டனி என்பவருக்கு நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை லிஜோமோல் ஜோஸுக்கு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்.
    நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. 

    அவ்வப்போது காதலனுடன் ஸ்ருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது காதலனுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் போது சமோசா மாதிரி இருக்கிறார் என்று கிண்டல் செய்கிறார். இந்த வீடியோவிற்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது.


    நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகா, தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
    அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    தற்போது அனிகா நாயகியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

    அனிகா

    இந்த நிலையில் தலையிலும் தோள்பட்டையிலும் மெழுகுவர்த்தியை ஏற்றி அது கொழுந்து விட்டு எரியும் படி போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
    ×