என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாதவன் இயக்கத்தில் சிம்ரன், ஜெகன், சூர்யா, ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ராக்கெட்ரி’ படத்தின் முன்னோட்டம்.
    இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.

    ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன்.

    சிம்ரன், மாதவன்
    சிம்ரன், மாதவன்

    பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
    ‘திரிஷ்யம்’ கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளதாம்.
    மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து இவர்கள் கூட்டணியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    தற்போது மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றி உள்ள படம் ‘டுவெல்த் மேன்’. இது முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஆண்டனி பெரம்பாவூர், இப்படத்தையும் தயாரித்துள்ளார். 

    டுவெல்த் மேன் படத்தின் போஸ்டர்
    டுவெல்த் மேன் படத்தின் போஸ்டர்

    கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய ‘டுவெல்த் மேன்’ படத்தின் படப்பிடிப்பை, 40 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர். இதையடுத்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘திரிஷ்யம் 2’ படத்தைப் போல இப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டாக்டர் படக்குழுவும் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
    நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘டாக்டர்’. இப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும், வினய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, அர்ச்சனா, தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

    கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இதில் இடம்பெறும் ‘செல்லம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியதோடு மாபெரும் வரவேற்பையும் பெற்றது. 

    சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன்
    சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன்

    அண்மையில் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டாக்டர் படக்குழுவும் அதே பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மொத்தம் 75 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோரின் அசத்தல் நடனம் இடம்பெற்று உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    நடிகை சிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் சிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். 

    இதனிடையே நடிகை சிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். அவர் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

    சிவானி
    சிவானி

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவானி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் பாவாடை தாவணியில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 
    ஆர்யன் கானின் செல்போனில் இடம்பெற்று உள்ள உரையாடல்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தனியாக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
    மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த சனிக்கிழமை சென்ற சொகுசு கப்பலில் போதை பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்திய 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அவர்களில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் ஆவார். 8 பேரிடமும் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 8 பேரையும் வருகிற 7-ந் தேதி வரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அனுமதி பெற்றுள்ளனர். அதன்படி இன்று காலை ஆர்யன் கான் உள்பட 8 பேரிடமும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டது. அவர்களது செல்போனில் பதிவாகி இருந்த உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு 8 பேரும் அளித்த பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. வாக்கு மூலமாகவும் பெறப்பட்டது.

    இதற்கிடையே ஆர்யன் கானின் வக்கீல் சதீஷ் கூறுகையில், “போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுவது போன்று ஆர்யன் கான் எந்த தவறும் செய்யவில்லை. இதற்கு முன்பு அவர் மீது எந்த வழக்கும் இல்லை. அவர் அனைத்து விசாரணைகளுக்கும் தயாராக இருக்கிறார்” என்று கூறி உள்ளார்.

    ஆனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆர்யன்கான் மீது சந்தேகத்தை தெரிவித்து உள்ளனர். அவர்கள் கூறுகையில், “ஆர்யன் கானின் செல்போனில் பதிவாகி இருந்த தொடர்புகள் அனைத்தும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன. அடுத்தக்கட்ட விசாரணைகளில் தான் இது தொடர்பான தகவல்கள் தெரிய வரும்” என்றனர்.

    ஆர்யன் கான்

    ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று கோர்ட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரை உலகை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆர்யன் கானின் செல்போனில் இடம்பெற்று உள்ள உரையாடல்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளில் ஒரு குழுவினர் தனியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த ஆய்வு முடிந்த பிறகுதான் ஆர்யன் கானுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய முழு விவரங்களும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தநிலையில் ஆர்யன் கானை மீட்க பாலிவுட் திரை உலகின் பல்வேறு தரப்பினரும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தி திரை உலகின் நடிகர், நடிகைகள் தொடர்ந்து ஷாருக்கானுடன் செல்போனில் பேசி ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த நடவடிக்கைகளை மும்பை போலீசார் கண்காணித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே ஆர்யன்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் மீதும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் போதைப்பொருள் பிரிவு சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

    தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சிறிது அளவு வைத்திருந்தாலே ஓராண்டு ஜெயில் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு போதைப் பொருட்களை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் வரை கூட தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆர்யன் கான் விசாரணை தகவல்களை பாலிவுட் திரை உலக பிரமுகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
    நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    விஜய்

    இந்நிலையில், பீஸ்ட் படக்குழு அடுத்தடுத்து 3 அப்டேட்டுகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 13-ந் தேதி நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது போஸ்டரை வெளியிட உள்ளார்களாம். அதையடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களான அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளிலும் பீஸ்ட் படத்தின் இரண்டு முக்கியமான அப்டேட்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
    முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ‘ருத்ர தாண்டவம்’ படத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
    ‘திரெளபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன்.ஜி இயக்கி இருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்திருந்தார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    ருத்ர தாண்டவம் படத்தின் போஸ்டர்
    ருத்ர தாண்டவம் படத்தின் போஸ்டர்

    வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. அதன்படி இப்படம் முதல் 3 நாட்களில் ரூ.7.5 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ‘ருத்ர தாண்டவம்’ படத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம், அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது.
    நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கவின்
    கவின்

    இதனிடையே பீஸ்ட் படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் கவின். அவர் கூறியதாவது: “பீஸ்ட் படத்தில் நான் எந்த விதத்திலும் பங்காற்றவில்லை. முதலில் என்னிடம் பேசியிருந்தார்கள். ஆனால், மற்ற படங்களில் பிசியானதால் அதில் பங்காற்ற முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
    ஜீவா, அஞ்சலி நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். இதையடுத்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். குறிப்பாக இவர் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான ‘தங்கமீன்கள்’ திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது.

    இவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதன்படி அப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக அஞ்சலியும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.

    படக்குழு

    இந்நிலையில், ராம் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
    சமீபத்தில் திருமணம் செய்த நகைச்சுவை நடிகை வித்யூலேகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலைசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

    நடிகை வித்யூலேகா, கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார். சமீபத்தில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    வித்யூலேகா

    இந்நிலையில், கணவருடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் வித்யூலேகா. மாலத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வித்யூலேகா இணையத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வித்யூலோகா பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக இரு தினங்களுக்கு முன்பாக அறிவித்தார்.
    சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் திருமணம், இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதற்கிடையே சமந்தா டுவிட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை சமந்தாவும், நாக சைத்தன்யாவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர்.

    சமந்தா

    இதையடுத்து தற்போது டுவிட்டரில் மீண்டும் தனது பெயரை திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல, சமந்தா எனவும் யூசர் நேமை சமந்தா பிரபு எனவும் மாற்றியிருக்கிறார். நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, அவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை இணைத்து சமந்தா அக்கினேனி என வைத்திருந்தார். தற்போது நாக சைத்தன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு பழையபடி தனது பெயரை சமந்தா பிரபு என மாற்றியிருக்கிறார்.
    சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். 

    தீக்குளிக்க முயன்ற பெண்
    தீக்குளிக்க முயன்ற பெண்

    போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார். இவர் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது வீடியோ எடுத்து வெளியிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
    ×