என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். 

    தீக்குளிக்க முயன்ற பெண்
    தீக்குளிக்க முயன்ற பெண்

    போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார். இவர் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது வீடியோ எடுத்து வெளியிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
    அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பாடகர் எஸ்.பி.பி குறித்து உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.
    ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் அண்ணாத்த. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் முதல் பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார்.

    இதற்குமுன் ரஜினி நடித்த பல படங்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். ஆனால், இந்த பாடல் ரஜினிக்காக, எஸ்.பி.பி பாடிய கடைசி பாடலாகும். இதுகுறித்து ரஜினி தனது சமூக வலைத்தள பக்கத்தில், 

    ரஜினி
    ரஜினியின் பதிவு

    ‘45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்த படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.

    மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரஜினிக்காக பாடிய கடைசி பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அண்ணாத்த

    அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா நடிப்பில் உருவாகும் ‘பஹீரா’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் பஹீரா. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரியும், அனேகன் படத்தில் நடித்த அமைராவும் இப்படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். 

    பஹீரா படத்தின் போஸ்டர்
    பஹீரா படத்தின் போஸ்டர்

    சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பஹீரா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வருகிற அக்டோபர் 8-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
    புகழ்மணி இயக்கத்தில் யோகி பாபு, ராம் சுந்தர், பிரியங்கா நடிப்பில் உருவாகும் ’காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் முன்னோட்டம்.
    பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் "காவி ஆவி நடுவுல தேவி" படம் உருவாகிறது. யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் "காவி ஆவி நடுவுல தேவி". மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. 

    யோகி பாபு

    இப்படத்தின் மூலம் ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். "காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். இப்படத்திற்கு கணேசன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும், பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் எழுத நடன பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர். 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, ஒரு படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்க இருக்கிறாராம்.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல், முகிழ், விக்ரம், கடைசி விவசாயி, மாமனிதன், மும்பைகார், காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர பாலிவுட்டில் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியிடம் ஒரு குறும்படத்திற்கான யோசனையை சொல்லியிருக்கிறார் பாக்கியராஜ். கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. அதோடு இந்தப் படத்தில் நடிப்பதற்கு தனக்கு சம்பளமே வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். 

    விஜய் சேதுபதி

    இதைப்போல இன்னும் நான்கு குறும்படங்களுக்கான கதையைத் தயார் செய்துவிட்டு அதிலும் பிரபல கதாநாயகர்களை நடிக்க வைத்து  அதை ஒரு ஆந்தாலஜி படமாக திரையரங்கத்திலோ, ஓடிடி தளத்திலோ வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் பாக்யராஜ். 
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவின், அடுத்ததாக நடிகை நயன்தாரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
    நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’,  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

    இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கவின், வாணி போஜன்
    கவின், வாணி போஜன்

    கவின் நடிப்பில் அண்மையில் ஓடிடி-யில் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருவதால், அவர் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 
    அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் 2 பாகங்களாக உருவாகி வரும் நிலையில், தற்போது முதல் பாகத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
    அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். 

    புஷ்பா படத்தின் போஸ்டர்
    புஷ்பா படத்தின் போஸ்டர்

    முதல் பாகத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்திருந்த படக்குழு, தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக, வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரன்வீர் சிங் நடித்துள்ள 83 என்கிற படம் ரிலீசாக உள்ளதால், புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாம்.
    கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
    ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘கோமாளி’. இப்படத்தை இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். ‘கோமாளி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

    தயாரிப்பாளர்களுடன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
    தயாரிப்பாளர்களுடன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்

    இந்நிலையில், அவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சமூக வலைதளமான டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த், அவ்வப்போது அதில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
    சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமண முறிவு குறித்து அறிவித்துள்ள நிலையில், நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு டுவிட் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் என்பது சிறுவயதில் நான் ஆசிரியரிடம் கற்ற பாடங்களில் ஒன்று” என கூறியுள்ளார். சமந்தாவை மனதில் வைத்து தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

    சித்தார்த்தின் டுவிட்டர் பதிவு
    சித்தார்த்தின் டுவிட்டர் பதிவு

    நடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலிப்பதற்கு முன்பாக நடிகர் சித்தார்த்தை காதலித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் பல்வேறு விழாக்களில் கூட ஒன்றாக வந்து கலந்து கொண்டனர். திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து தான் நாகசைதன்யாவுடன் காதல் வயப்பட்டு பின்னர் அவரையே சமந்தா திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் சிக்கியதால் மும்பை திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    மும்பை:

    மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன்தினம் சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் விருந்து நடக்க இருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து 25-க்கும் மேற்பட்ட போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றுலா பயணிகள் போல அந்த கப்பலில் சென்றனர். நேற்று முன்தினம் இரவு நடுக்கடல் அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வினியோகம் நடந்தது.

    இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக ஈடுபட்டு 2 பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவர் ஆவார். அவர்கள் 8 பேரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கைப்பற்றினார்கள்.

    இதையடுத்து மும்பை அழைத்து வரப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சட்டப்பிரிவுகள் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் விவகாரத்தில் சிக்கியதால் மும்பை திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் ஷாருக்கானின் மகன் ஆர்யன் மீது போதை பொருளை உட்கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து ஆர்யன் போதை பொருள் வைத்திருக்கவில்லை என்று அவரது வக்கீல் கூறினார்.

    ஆர்யனை ஜாமினில் விட வேண்டும் என்று இன்று வக்கீல்கள் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விசாரணை முடிந்த பின்னர்தான் ஆர்யனுக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

    ஆரியன் கான், ஷாருக்கான்


    இதற்கிடையில் ஆர்யன் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை எங்கு பதுக்கி வைத்திருந்தார் என்று தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்திய போது ஆர்யனின் அனைத்து உடமைகளையும் ஆய்வு செய்தனர். அப்போது ஆர்யன் தனது கண்ணாடி பெட்டியில் சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

    அதன் பிறகுதான் ஆர்யனின் அனைத்து பொருட்களும் ஆய்வு செய்யப்பட்டது. அவரது செல்போனையும் அதிகாரிகள் வாங்கி ஆய்வு செய்தனர். யார்-யாரிடம் அவர் பேசி இருக்கிறார் என்ற தகவல்களையும் சேகரித்தனர். வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட தகவல்களையும் ஆய்வு செய்தனர்.

    வாட்ஸ்அப் தகவல்களில் சில போதை பொருள் பயன்பாடு பற்றி இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில்தான் ஆர்யனை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்ய நேரிட்டது. வாட்ஸ்அப் தகவல்களை அழிக்காததால் ஆர்யன் சிக்கி உள்ளார்.

    அந்த வாட்ஸ்அப் தகவல் மூலம் அவரது தோழிகளுக்கும் வலைவிரிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் பதுக்கி வைத்திருந்ததாக கைதான 2 பெண்களிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் நாப்கினுக்குள் போதை பொருட்களை மறைத்து வைத்திருந்தனர். இவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் இயக்க இருப்பதாகவும், திகில் கதையம்சம் உள்ள படமாக இது உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    ரஜினிகாந்தின் மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வைராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கி உள்ளார். 3 படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், சுருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

    படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமானது. ‘வை ராஜா வை’ படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு ஐஸ்வர்யா படங்கள் இயக்காமல் ஒதுங்கினார். 

    இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் இயக்க இருப்பதாகவும், திகில் கதையம்சம் உள்ள படமாக இது உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

    ஐஸ்வர்யா தனுஷ்

    தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகவில்லை. ஐஸ்வர்யா இதற்கு முன்னர் இயக்கிய இரண்டு படங்களிலும் தனுஷ் நடித்திருந்தார். ஆதலால் இப்படத்திலும் தனுஷ் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    ×