என் மலர்
சினிமா

ஜீத்து ஜோசப், மோகன்லால்
மீண்டும் ஓடிடி-யை நாடும் ‘திரிஷ்யம்’ கூட்டணி
‘திரிஷ்யம்’ கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளதாம்.
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து இவர்கள் கூட்டணியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றி உள்ள படம் ‘டுவெல்த் மேன்’. இது முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஆண்டனி பெரம்பாவூர், இப்படத்தையும் தயாரித்துள்ளார்.

டுவெல்த் மேன் படத்தின் போஸ்டர்
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய ‘டுவெல்த் மேன்’ படத்தின் படப்பிடிப்பை, 40 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர். இதையடுத்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘திரிஷ்யம் 2’ படத்தைப் போல இப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Next Story






