என் மலர்tooltip icon

    சினிமா

    அரவிந்த் திரிவேதி
    X
    அரவிந்த் திரிவேதி

    ரீல் ராவணன் காலமானார்

    ராமாயண தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான, நடிகர் அரவிந்த் திரிவேதியின் மறைவு, பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ராமானந்த் சாகரின் ராமாயண இதிகாச தொடர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திரிவேதி. நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

    ராமாயணத்தில் எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் தனது பண்பட்ட நடிப்பால் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திருந்தார் அரவிந்த் திரிவேதி. 300-க்கும் மேற்பட்ட இந்தி, குஜராத்தி படங்களில் நடித்துள்ளார். இதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனது பங்களிப்பைச் செலுத்தினார். ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்டார். 

    அரவிந்த் திரிவேதி
    அரவிந்த் திரிவேதி

    திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். 1991-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யாகவும் இருந்தவர். இவர் மரணமடைந்ததாகப் பல முறை வதந்தி பரவியிருக்கிறது. இவருக்கு கவுஸ்துப் என்ற மனைவி இருக்கிறார். இவரது சகோதரர் உபேந்திரா திரிவேதியும் பிரபலமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×