என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
    கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய் வில்லனாகவும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 

    பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், நெல்சன்
    பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், நெல்சன் 

    இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் டாக்டர் படம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர் (ரூ.25 கோடி) படமும், இரண்டாவது இடத்தில் தனுஷின் கர்ணன் (ரூ.11 கோடி) படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
    நடிகை சமந்தா இந்த ஆண்டு இறுதியில் நாக சைதன்யாவுடன் குழந்தைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்ததாக ‘சகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “சகுந்தலம் படத்திற்காக நானும் எனது தந்தை குணசேகரும் சமந்தாவை அணுகியபோது அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது, ஆனால், படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியுமா? என்று கேட்டார். 

    நான் ஏன் என்று கேட்டேன், அதற்கு ‘நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தாயாக விரும்புவதற்குத் தான் முன்னுரிமை அளிப்பேன். குழந்தை பிறந்தால் அதுதான் என் உலகமாக இருக்கும்’ என்றார். 

    நீலிமா, சமந்தா
    நீலிமா, சமந்தா

    அதோடு, ‘சாகுந்தலம்’ சரித்திர கதையம்சம் கொண்ட படம், முடிவடைய நீண்டகாலம் ஆகும் என்பதால், சமந்தா ஆரம்பத்தில் இந்த படத்தில் கையெழுத்திட தயங்கினார். ஆனால், திட்டமிட்டப்படி படத்தை முடித்துவிடுவோம் என்ற பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

    இதுதான் அவரது கடைசிப் படம் என்றும் அதன் பிறகு நீண்ட இடைவெளி எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். இதனால், நாங்கள் ஓய்வு எடுக்காமல் படத்தை விரைவாக முடிக்க உழைத்தோம்” என்று கூறினார்.
    கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் தள்ளிப்போகாதே படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளிப்போகாதே. இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது. கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    அனுபமா பரமேஸ்வரன், அதர்வா
    அனுபமா பரமேஸ்வரன், அதர்வா

    இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடித்துள்ளார்கள். எம்.கே.ஆர்.பி. நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்குனர் கண்ணன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனங்களை எழுதி உள்ளார். மேலும் ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றியுள்ளார். ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ரிலீசாக உள்ளது.
    பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்தி ஜோடியாக ‘தேவ்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார். இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

    ரகுல் பிரீத் சிங், ஜக்கி பக்னானி
    ரகுல் பிரீத் சிங், ஜக்கி பக்னானி

    இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரகுல் பிரீத் சிங், சமூக வலைதளம் வாயிலாக தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரை காதலிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “இந்த வருடம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என் வாழ்வை வண்ண மையமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி” என குறிப்பிட்டு காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.   
    நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் மூலம் பிரபல நடன இயக்குனர் டைரக்டராக அவதாரம் எடுக்க உள்ளார்.
    மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை பாபி ஆண்டனி இயக்க உள்ளார். நடன இயக்குனரான இவர், இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றார். 

    பாபி ஆண்டனி, ஆண்ட்ரியா
    பாபி ஆண்டனி, ஆண்ட்ரியா

    நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
    ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் மீண்டும் இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக மொரீசியஸில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
    சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு 2’. ஜீவா, மிர்ச்சி சிவா ஆகியோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படத்துக்கு ‘கோல்மால்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

    இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பொன் குமார் இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். 

    தான்யா ஹோப், பாயல் ராஜ்புட்
    தான்யா ஹோப், பாயல் ராஜ்புட்

    இப்படத்தை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக மொரீசியஸில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
    சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் பல்வேறு தடைகளை கடந்து நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் டாக்டர் படத்தை பாராட்டி வருகின்றனர். 

    அந்த வகையில் டாக்டர் படக்குழுவை பாராட்டி இயக்குனர் ஷங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இந்த கொரோனா காலகட்டத்தில் டாக்டர் எங்களுக்கு சிறந்த சிரிப்பு மருந்தை கொடுத்திருக்கிறார். அனைவரையும் மகிழ்வித்த இயக்குனர் நெல்சனுக்கு பாராட்டுக்கள். குடும்பங்கள் கொண்டாடும் படியான பொழுதுபோக்கு படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. திரையரங்க அனுபவம் மீண்டும் திரும்பி உள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என பாராட்டி உள்ளார்.

    ஷங்கர், அதிதி
    ஷங்கர், அதிதி

    ஷங்கரின் மகள் அதிதி வெளியிட்டுள்ள பதிவில், “டாக்டர் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். அற்புதமாக இருந்தது” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், அவர் ஹீரோயினாக அறிமுகம் ஆக உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து, கலக்குங்க என பதிலளித்துள்ளார்.

    இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளதாவது: “குடும்பத்துடன் டாக்டர் படம் பார்த்தேன். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளித்த இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும், சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

    சுசீந்திரன், அஸ்வத் மாரிமுத்து
    சுசீந்திரன், அஸ்வத் மாரிமுத்து

    ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறுகையில், “உருண்டு உருண்டு சிரிச்சேன். கண்ல தண்ணீ வர வர சிரிச்சேன். சிவகார்த்திகேயன் வசீகரிக்கிறார். இயக்குனர் நெல்சன் சிறந்த எழுத்தாளர். அனிருத் படத்தின் முதுகெழும்பு. விஜய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு அற்புதம். யோகிபாபுவும், டோனியும் சிரிப்பு மருத்துவர்கள்” என பதிவிட்டுள்ளார்.

    கே 13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “டாக்டர் படத்தின் வெற்றி மிக முக்கியமானது. ஒரு முன்னணி நாயகன் டார்க் காமெடி போன்ற ஒரு ஜானர் செய்வதும், அது வெற்றி அடைவதும் பல இயக்குனர், எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை தரும் விஷயம். இதை ஒரு கேம் சேஞ்சர் ஆக பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

    பரத் நீலகண்டன், ரத்னகுமார்
    பரத் நீலகண்டன், ரத்னகுமார்

    ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் கூறுகையில், “டாக்டர் நின்னு பேசும். சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் இது சிறந்த படம். அனிருத் வழக்கம் போல் பின்னணி இசையில் மாஸ் காட்டி இருக்கிறார்" என பதிவிட்டுள்ளார். 

    இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ள பதிவில், “ரியல் டாக்டர்கள் இரவு பகலாக போராடி கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி உள்ளனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் திரையரங்குகளை குணப்படுத்தி உள்ளது” என பாராட்டி உள்ளார்.

    தமன், அர்ச்சனா கல்பாத்தி
    தமன், அர்ச்சனா கல்பாத்தி

    பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ளதாவது: “இத்தகைய பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். காத்திருந்து திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
    நடிகை சமந்தா, கணவரை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
    காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். அவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார் சமந்தா. இதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    வனிதா
    வனிதா

    அந்த வகையில் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வனிதா தெரிவித்துள்ளதாவது: “இங்கே சமூகம் என்று எதுவும் இல்லை. உன் வாழ்க்கை வாழ அறிவுரை மட்டும் தான் கூறுவார்கள். மக்கள் நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள். நம்மை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. இனி உன் வாழ்க்கையை நோக்கி நீ முன்னேறி கொண்டே இரு. உனக்கான வலிமை கூடட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
    ஏ.ஆர்.கே.சரவன் இயக்க உள்ள பேண்டஸி கதையம்சம் கொண்ட படத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
    தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இந்நிலையில், அவர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளது. 

    ஏ.ஆர்.கே.சரவன்
    இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன்

    ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி, தற்போது மூன்றாவது முறையாக அந்நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    அண்ணாத்த படத்தின் ‘சாரக்காற்றே’ பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. 

    சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று 2வது பாடல் வெளியிடப்பட்டது.  ‘சாரக்காற்றே’ எனும் இந்த பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். 

    ரஜினி-நயன்தாரா பாடல் காட்சி

    ரஜினி - நயன்தாரா இடையேயான ரொமாண்டிக் பாடலாக இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்பாடலை ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீராமும் இணைந்து பாடி உள்ளனர். 
    பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்திய வழக்கில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
    ஷாருக்கான் மகன் ஆரியன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இதன்காரணமாக மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.

    கடந்த 2017ம் ஆண்டு முதல் நடிகர் ஷாருக்கான் பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்துவருகிறார். இதனால் ஆண்டுதோறும் ஷாருக்கானுக்கு பைஜூஸ் 3 முதல் 4 கோடி ரூபாய் பணம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது.

    ஷாருக்கான்

    ஷாருக்கானின் மகன் ஏற்படுத்திய சர்ச்சையால், அவருடன் தொடர்பு கொள்ள அந்நிறுவனம் விரும்பவில்லை என்பதால், அவருடனான விளம்பரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், விளம்பர தூதுவராக அவர் தொடர்கிறாரா? அல்லது அந்நிறுவனம் அவரை முழுமையாக கைவிட்டுவிட்டதா என்பது குறித்து தெரியவில்லை.
    லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

    நாய் சேகர் ரிட்டன்ஸ்

    நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×