என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ‘சந்தனதேவன்’ படம் பார்த்தால் என்னை நம்பி எந்த வேடமும் தருவார்கள் என்று இப்படத்தின் கதாநாயகி அதிதி மேனன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    அமீர் இயக்கி வரும் படம் ‘சந்தனதேவன்’. இது ஜல்லிக்கட்டு கதை. இதில் ஆர்யா, அமீர், சத்யா, அதிதிமேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் 2 கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி அதிதிமேனன் கூறுகிறார்...

    “ ‘சந்தனதேவன்’ படத்தில் சத்யா ஜோடியாக நடிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் பாவாடை தாவணி கட்டாத நான் இந்த படத்தில் முழுக்க முழுக்க பாவாடை தாவணி அணிந்து நடிக்கிறேன்.

    மதுரை பெண் போல நான் இருக்க வேண்டும் என்று அமீர் சார் என்னை மதுரை பெண்களுடன் பழக வைத்தார். அவர்கள் நடை, உடை, பாவனையை உள்வாங்கி நடித்தேன்.



    இயக்குனர் அமீர் என்னை இந்த படத்தில் மதுரை பெண்ணாகவே மாற்றி விட்டார். காதல் செய்யும் நாயகியாக இல்லாமல் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் வேடத்தில் நடிக்கிறேன். இன்னும் 2 வாரங்களில் எனது தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிடும்.

    ‘சந்தனதேவன்’ படத்தில் என் நடிப்பை பார்ப்பவர்கள் என்னை நம்பி இனி எந்த வேடமும் தருவார்கள். அந்த அளவு வெயிட்டான வேடத்தை அமீர் சார் எனக்கு தந்திருக்கிறார். இந்த படத்தை நடித்து முடிந்த பிறகுதான் அடுத்த படங்களில் நடிக்க வரும் அழைப்பை ஏற்பேன்”.

    திரைப்பட தயாரிப்பாளரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை பிரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான மதூர் பண்டார்கர் மீது நடிகை பிரீத்தி ஜெயின் கடந்த 2004ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2005-ம் ஆண்டு, இயக்குனர் மதூர் பண்டார்கரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் நடிகை பிரீத்தி ஜெயின், அவரது கூட்டாளிகள் நரேஷ் பர்தேஷி, ஷிவராம் தாஸ் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.



    இவர்கள் மீதான வழக்கு மும்பையில் உள்ள செவ்ரீ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர், அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், இயக்குனர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபிக்கப்பட்டதால், நடிகை பிரீத்தி ஜெயின், நரேஷ் பர்தேஷி, ஷிவ்ராம் தாஸ் ஆகியோருக்கு தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாத நிலையில், அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
    ஜாக்கி ஷெரப், சந்தீப் கி‌ஷன், லாவண்யா திரிபாதி நடிப்பில் திரில்லர் கதையாக உருவாகி உள்ள ‘மாயவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘மாயவன்’.

    இதில் நாயகனாக சந்தீப் கி‌ஷன், நாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்கள். இவர்களுடன் டேனியல் பாலாஜி, இந்தி நடிகர் ஜாக்கி‌ஷரப், பகவதி பெருமாள், மைம்கோபி, ஜே.பி,சிறப்பு தோற்றத்தில் அக்ஷாரா கவுடா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத், இசை-ஜிப்ரான், எடிட்டிங்- லியோஜான்பால், கலை- கோபி ஆனந்த்,ஸ்டண்ட்-ஹரிதினேஷ், தயாரிப்பு- சி.வி. குமார், கே.ஈ.ஞானவேல் ராஜா, திரைக்கதை, வசனம், நலன் குமாரசாமி, கதை, இயக்கம்- சி.வி.குமார்.



    இது ஒரு சீரியல் கில்லர் தொடர்பான கதை. நாயகன் சந்தீப் ஒரு சைகோ கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும், நாயகி லாவண்யா கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் உளவியல் நிபுணராகவும் நடிக்கிறார்கள். இந்தி நடிகர் ஜாக்கி‌ஷரப் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

    படம் பற்றி கூறிய சி.வி.குமார், “பல வெற்றிப்படங்களை தயாரித்துக் கொண்டு இருந்தேன். இந்த கதை என்னை கவர்ந்ததால் இயக்குனர் ஆகிவிட்டேன்.

    இது அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.
    மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ‘பாகுபலி-2’ படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தில் நிறைய முக்கியமான விஷயங்கள் சொல்ல வேண்டி உள்ளதால், படத்தின் விமர்சனமும் பெரிதாக இடம்பெற்றிருக்கிறது. வாசகர்கள் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    போரில் காலகேயனை கொன்றுவிட்டு, பிரபாஸை மகிழ்மதி அரசாங்கத்தின் அரசனாகவும், ராணாவை படைத் தளபதியாகவும் ராஜமாதாவான ரம்யாகிருஷ்ணன் பிரகடனம் செய்கிறார். அதன்பிறகு, பிரபாஸுக்கு அரசனாக முடிசூட்ட பட்டாபிஷேகம் செய்ய நாட்கள் குறிக்கிறார்கள். இதற்கிடையே, அரசனாக இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக பிரபாஸை பல்வேறு தேசங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் அனுப்பி வைக்கிறார். கூடவே கட்டப்பா சத்யராஜும் செல்கிறார்.

    அவ்வாறு பிரபாஸ் செல்லும்போது குந்தலதேசத்தில் கொள்ளையர்களால் நிறைய மக்கள் கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதேநேரத்தில், குந்தலதேசத்தின் யுவராணியான அனுஷ்காவையும் பார்க்கிறார். வாள் வீச்சில் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்யும் அவரது வீரத்தை கண்டு வியக்கிறார். மேலும், அவளது அழகிலும் மயங்குகிறார்.

    அவளிடம் தன்னை அப்பாவியாக காட்டிக்கொண்டு, கவர நினைக்கிறார் பிரபாஸ். இந்நிலையில், பிரபாஸும், சத்யராஜும் குந்தலதேசத்தில் இருக்கிறார்கள் என்று ஒற்றன் மூலமாக அரண்மனையில் இருக்கும் ராணாவுக்கு தகவல் செல்கிறது. அந்த தகவலில் பிரபாஸ், அனுஷ்காவை காதலித்து வருவதாகவும் செய்தி இருக்கிறது. கூடவே அனுஷ்காவின் ஓவியமும் இருக்கிறது. அனுஷ்காவின் ஓவியத்தை பார்த்து ராணாவுக்கும் அவள்மீது ஈர்ப்பு வருகிறது.

    அவளை தன்னுடைய மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதை தனது அம்மாவிடம் சொல்ல, அவரும் ராணாவுக்கு அனுஷ்காவை திருமணம் செய்துவைப்பதாக உறுதி கொடுக்கிறார். பெண் கேட்பதற்கு முன்பாக விலையுயர்ந்த பொருட்களை அனுஷ்காவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய வீட்டுக்கு நேரில் வந்து பெண் கேட்க தைரியமில்லாமல், தன்னை ஒன்றும் இல்லாதவர் போல் விலையுயர்ந்த பொருட்களை அனுப்புகிறார்களே என்று பதிலுக்கு அனுஷ்கா, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் பதில் கடிதம் ஒன்றை அனுப்புகிறார்.

    இதனால் ராஜமாதாவான ரம்யா கிருஷ்ணன் கோபமடைகிறார். உடனே, அனுஷ்காவை கைது செய்துவர ஆணையிடுகிறார்கள். அந்த நேரத்தில் பிரபாஸ் அங்கிருக்கும் விஷயத்தை நாசர், ரம்யா கிருஷ்ணனிடம் சொல்ல, அவர் மூலமாகவே அனுஷ்காவை கைது செய்து அழைத்துவர தூது அனுப்புகிறார்கள்.

    அதற்குள் குந்தல தேசத்தில் கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களை எதிர்க்க குந்தலதேசத்து வீரர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், பிரபாஸ் உள்ளே புகுந்து அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அவரது வீரத்தை கண்டு குந்தலதேசமே வியந்து நிற்கிறது. அப்போதுதான், பிரபாஸ் மகிழ்மதி அரசாங்கத்தின் இளவரசர் பாகுபலி என்ற விஷயத்தை கட்டப்பா போட்டு உடைக்கிறார். அதேநேரத்தில், அனுஷ்கா மீது அவர் காதல் கொண்டுள்ள விஷயத்தையும் கூறுகிறார்.

    இதைக்கேட்டு குந்தலதேச மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். அதேநேரத்தில் மகிழ்மதி அரசாங்கத்தால் பறவை மூலமாக அனுப்பப்பட்ட தூது பிரபாஸ் கைக்கு கிடைக்கிறது. அன்னையின் கட்டளைப்படி அனுஷ்காவை கைது செய்யப்போவதாகவும், அதற்கு அனுஷ்கா ஒத்துழைக்கவேண்டும் என்றும் அன்பாக கூறுகிறார். முதலில் முரண்டு பிடிக்கும் அனுஷ்கா, அதன்பிறகு பிரபாஸ் அவளுடைய கற்புக்கும், மானத்துக்கும் எந்தவித குந்தகமும் விளைவிக்காமல் உயிருள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்று கொடுக்கும் வாக்கின் அடிப்படையில் அவனுடன் செல்ல முடிவெடுக்கிறாள்.

    ஒருபக்கம் ராணாவுக்கு அனுஷ்காவை மணம் முடித்துக் கொடுப்பதாக ரம்யா கிருஷ்ணன் வாக்கு கொடுத்திருக்கிறார். மறுபக்கம் திருமணம் செய்துகொள்வேன் என்று அனுஷ்காவிட்ம் பிரபாஸ் வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த வாக்குகளால் யார் யாருக்கு? என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதை படம் முழுக்க டுவிஸ்டு மேல் டுவிஸ்டு வைத்து சொல்லியிருக்கிறார்கள்.

    படம் ஆரம்பிக்கும்போதே முந்தைய பாகத்தை நினைவுபடுத்துவதுபோல் முதல் பாகத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சிகளை கிராபிக்ஸில் காட்டுவது ரொம்பவும் அருமையாக இருக்கிறது. அதைப் பார்க்கும்போது படத்திற்குள் நாம் எப்போது நுழைவோம் என்ற எதிர்பார்ப்பு நம்மில் தொற்றிவிடுகிறது.

    பிரபாஸ் முந்தைய பாகத்தைவிட இந்த பாகத்தில் ரொம்பவும் வீறு கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கான மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி இவருடைய நடிப்பை பார்த்து நமக்கு வியப்பு வருகிறது. இந்த படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். குந்தலதேசத்தில் கொள்ளையர்களுடன் சண்டைபோடும் காட்சியில் ஒரே வில்லில் மூன்று அம்புகளை வைத்து விடும் காட்சிகள், குந்தலதேசத்து மக்களிடம் பிரபாஸை மகிழ்மதியின் இளவரசன் என்று கட்டப்பா அறிமுகப்படுத்தும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    அனுஷ்கா முந்தைய பாகத்தில் அழுக்குத் துணியுடன் ஒருசில காட்சிகள்தான் வலம் வந்தார். இந்த பாகத்தில் அவருக்கு கூடுதல் காட்சிகள் இருக்கின்றது. அரசியாக அழகாக வந்து அனைவரையும் கவர்கிறார். வாள் சண்டையில் ரொம்பவும் கைதேர்ந்தவர்போல் நடித்திருக்கிறார். வீரம், காதல், பாசம், கருணை என எல்லாவற்றையும் தனது வித்தியாசமான முகபாவனைகளை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். வசனங்களிலும் துணிச்சலான பெண்ணுக்குண்டான நடிப்புடன் அழகாக நடித்திருக்கிறார்.

    ராணா பகைமை கலந்த நடிப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார். முதல் பாதியில் ரொம்பவும் அமைதியாகவே தனது காய்களை நகர்த்தும் இவர், இரண்டாம் பாதியில் தனது முழு ஆக்ரோஷத்தையும் காட்டும் விதத்தில் ரசிகர்களின் வெறுப்பை பெறுகிறார். ரம்யா கிருஷ்ணன், ராஜமாதாவுக்குண்டான கம்பீரத்துடன் ரசிக்க வைக்கிறார். கம்பீரமாக பேசும் இவர் வசனங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு ஆக்ரோஷத்தை ஏற்படுத்துகிறது.

    நாசர் இந்த பாகத்தில் ரொம்பவும் சாதுர்யமாக காய் நகர்த்தும் சூத்ரதாரியாக பளிச்சிடுகிறார். ஒவ்வொரு முறையும் ராணா இவரை ஆசுவாசப்படுத்தும் காட்சிகளில் எல்லாம் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். கட்டப்பாவாக வரும் சத்யராஜ் படம் முழுக்க ஆக்ரமித்திருக்கிறார். முந்தைய பாகத்தில் ஆக்ரோஷமான படைத்தளபதியாக வந்த சத்யராஜ், இந்த பாகத்தில் தனக்கே உரித்தான நக்கல், நையாண்டியிலும் கலக்கியிருக்கிறார். அவை எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக, நாம் எல்லோரும் எதிர்பார்த்த கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் காட்சியில் அவரது நடிப்பால் ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.

    கடந்த பாகத்தில் அனுஷ்காவுக்கு எந்தளவுக்கு குறைவான காட்சிகள் இருந்ததோ, அதைவிட குறைவான காட்சிகளே தமன்னாவுக்கு இருக்கிறது. முந்தைய பாகத்தில் இருந்த ஆக்ரோஷத்துடன் இந்த பாகத்திலும் நடித்திருக்கிறார்.

    எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைக்கதைக்கு வேறு எந்த இயக்குனரும் ஈடுகொடுக்க முடியாது என்ற அளவுக்கு இந்த பாகத்திலும் திரைக்கதை மெச்சும்படியாக இருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் டுவிஸ்டு மேல் டுவிஸ்டாக நகர்ந்துக் கொண்டே செல்வதால் படம் பார்ப்பவர்களுக்கு எந்த இடத்திலும் சலிப்பே தட்டவில்லை. நிறைய புல்லரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. பிரபாஸ் அறிமுகமாகும் காட்சி பெரிதாக இல்லாவிட்டாலும், அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொன்றும் ரொம்பவும் மாஸாக இருக்கிறது. சரித்திர கதையென்றாலும் அதிலும் கமர்ஷியலுக்குண்டான அம்சங்களையும் பொருத்தி அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

    இந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமுடியுமா? என்பது சந்தேகம்தான். இப்படியொரு படத்தை கொடுத்ததற்காக ராஜமௌலிக்கு எவ்வளவு பெரிய உயரிய விருது கொடுத்தாலும் போதாது. அவருக்கு விருது ஒன்று கொடுக்கவேண்டுமென்றால், அதை இனிமேல் உருவாக்கினால்தான் உண்டு.

    அதேபோல், படத்தில் எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் அவை அனைத்துமே ரொம்பவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது. மதன் கார்க்கியின் வசனங்கள் படத்திற்கு ரொம்பவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வசனங்களும் ஆழமாகவும், அழுத்தமாகவும் அமைந்திருப்பது சிறப்பு.

    மரகதமணியின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. அதை படமாக்கியவிதமும் ரொம்பவும் அருமை. பின்னணி இசை கதைக்கு பொருத்தமாக அமைந்து, கதையை அழகாக நகர்த்தி செல்ல பலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பாகுபலி 2’ அழிக்கமுடியாத வரலாறு.
    கேரளாவில் 290 தியேட்டர்களில் வெளியாகி ‘பாகுபலி-2’ புதிய சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    கேரளாவில் குறைந்த செலவிலேயே திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. மலையாள பட உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி போன்றோரின் படங்கள் கூட சில கோடி செலவிலேயே தயாரிக்கப்படுகிறது. மேலும் மலையாளப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் 100-க்கும் குறைவாகவே இருக்கும்.

    சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலிமுருகன்' படம் தான் மலையாள பட உலகில் அதிக பொருட்செலவில் வெளியான சினிமா என்ற சாதனையை படைத்து இருந்தது. இந்த படமும் கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.


    இந்த நிலையில் கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியான படம் என்ற புதிய சாதனையை பிரபாஸ், ராணா , அனுஷ்கா, தமன்னா நடித்துள்ள பாகுபலி-2 படம் படைத்து உள்ளது. இந்தப்படம் கேரளாவில் இன்று 290 தியேட்டர்களில் வெளியானது.

    மேலும் சில தியேட்டர் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் 330 தியேட்டர்கள் வரை பாகுபலி-2 வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக வினியோகஸ்தர்கள் தெரிவித்து உள்ளனர்.

    பாகுபலி-2 படம் வெளியாவதற்கு இருந்த பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதையடுத்து திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கிறது.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் இன்றுமுதல் உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகும் என்ற அறிவிப்போடு திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்புடன் நடந்தது.

    இப்படத்தை காண ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், பட விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இப்படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ‘பாகுபலி-2’ சிறப்புக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.



    இதுகுறித்து, விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் படத்தை வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தற்போது சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, திரையரங்குகளில் இப்படத்தை திரையிடுவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி காட்சிகள் திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிகிறது.

    தமிழகம் முழுவதும் சுமார் 650 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. தமிழ் பதிப்பிற்குத்தான் இந்த பிரச்சினையே தவிர, ‘பாகுபலி-2’ தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக மகாராஷ்டிரா போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
    மும்பை:

    பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா ஆகிய இருவர் தனியார் நிறுவனத்திடம் பணம் வாங்கி கொண்டு அவர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

    டெக்ஸ்டைல் நிறுவனத்திடம் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் தானே பிவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் போலீசார் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதனையடுத்து ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா இருவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக ஷில்பா ஷெட்டி ஏற்கனவே மோசடி புகார்களில் சிக்கி உள்ளார். மும்பையில் அவர் நடத்தி வந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடியை அவர் பெற்றுக் கொண்டதாகவும், 2 ஆண்டுகளில் 10 தவணையாக இந்த பணம் திருப்பி தரப்படும் என்றும், அவரது நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே. மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்ததாக புகார்கள் எழுந்தது.

    சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
    சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.

    கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.

    "இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.

    அவர் கூறுகிறார்:-

    "கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்ïனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்ïனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.

    அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜ×ரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜ×ரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.

    இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

    அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜ×ரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.

    ஜ×ரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.

    அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

    திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

    மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.

    அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.

    மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.

    அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.

    அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.

    இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.

    இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.

    டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.

    சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.

    இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.

    1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்

    பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்

    ஒனப்பத் தட்டும் தாரேன்

    ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்

    மாட்டப் பாத்து குத்து''

     - இது அண்ணன்.

    "ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க

    ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க

    ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள

    ஒழிச்சிக் கட்டப் போறோம்''

    - இது நான்.

    இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?

    இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி

    இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?

    தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
    தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

    திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற  மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக தமிழில்தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், 74 வயதான நடிகர் வினு சக்கரவர்த்தி கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

    அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.
    பாகுபலி-2 படத்தின் டிக்கெட் வாங்குவதற்காக 3 கி.மீ. தூரம் ரசிகர்கள் காத்திருந்தனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் நாளை வெளியாகவிருக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இந்த இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதற்கு இந்த பாகத்தில் விடை கிடைக்கும் என்பதால், ரசிகர்களும் முதல்நாளே முதல் காட்சி பார்த்துவிட துடிக்கிறார்கள். எனவே, திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய இன்று காலை முதலே ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்.



    இந்நிலையில், ‘பாகுபலி-2’ படத்தின் டிக்கெட் வாங்குவதற்காக 3 கிலோ மீட்டர் தூரம் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர். ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐமேக்ஸ் திரையரங்கமான பிரசாத் ஐமேக்சில் இன்று ரசிகர்கள் டிக்கெட் எடுக்க ஆர்வமுடன் குவிந்தனர். 
    கம்போடியா நாட்டின் நடிகை ஒருவர் மிகவும் கவர்ச்சியாக நடித்ததற்காக ஒரு வருடம் அவர் படத்தில் இருந்து நடிக்க தடை செய்யப்பட்டுள்ளார்.
    கம்போடியாவை சேர்ந்த நடிகை டேனி குவான். இவருக்கு வயது 24. இவரை சமீபத்தில் கம்போடியா நாட்டு கலாச்சாரம் மற்றும் கலைத்துறையை சேர்ந்த அமைச்சரகம் நேரில் அழைத்து பேசியுள்ளது.

    அப்போது, அவர் வரிசையாக நிறைய படங்களில் கவர்ச்சியாக நடித்ததாகவும், அவருடைய கவர்ச்சி கம்போடியாவின் கலாச்சாரத்தையும், கலையையும் அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதனால், அவரை ஒரு வருடம் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிப்பதாகவும் கூறியுள்ளது.



    இதுகுறித்து டேனி குவான் கூறும்போது, என்னைவிட மற்ற நடிகைகள் அனைவரும் எல்லையில்லா கவர்ச்சியில் நடித்து வருகிறார்கள். அவர்களை ஒப்பிடுகையில் நான் ஒன்றும் பெரிதாக கவர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை என்னுடைய தோற்றம் அவர்களுக்கு அந்த மாதிரியான எண்ணத்தை தூண்டியிருக்கலாம். எனக்கு எப்படி உடையணிய வேண்டும் என்பது தெரியும். ஆனால், என்னுடைய கலாச்சாரமும், கம்போடியா மக்களும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

    கம்போடியாவின் கலாச்சாரம் மற்றும் கலைத்துறை அமைச்சரகம் தன்னை ஒரு மகளை அழைத்து அறிவுரை கூறுவதுபோல்தான் தன்னிடம் நடந்துகொண்டது என்றும் டேனி குவான் கூறியுள்ளார்.
    வெளிநாட்டு குளிர்பான விளம்பரத்தில் ராதிகா சரத்குமார் நடித்தது சம்பந்தமாக அவரை கிண்டல்செய்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு ராதிகா பதில் அளித்துள்ளார்.
    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த பெரிய போராட்டத்தை தொடர்ந்து, வெளிநாட்டு குளிர்பானங்கள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது என்று எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இதன் எதிரொலியாக வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனையும் வெகுவாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில், ராதிகா சரத்குமார் கடந்த 2005-ஆம் ஆண்டு நடித்த வெளிநாட்டு குளிர்பான விளம்பரம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த விளம்பரத்தை ராதிகாவை கிண்டல் செய்வதுபோல் எடிட் செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



    இந்த சர்ச்சை குறித்து ராதிகா சரத்குமார் கூறும்போது, உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த விளம்பரம் 2005-ல் எடுக்கப்பட்டது. இதன் இந்தி வடிவத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இதுகுறித்து இப்போது பேசுவது மனச்சிக்கலை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். 
    ×