என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    இன்று காலை காலமான பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மரறவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    பாலிவுட்டின் பிரபல நடிகரான வினோத் கண்ணா (70) மும்பையில் இன்று காலை காலமானார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 2 நாட்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமானார்.

    இவருக்கு கவிதா கண்ணா என்ற மனைவியும், ராகுல், அக்‌ஷயே, சக்‌ஷி என்ற மகன்களும், ஷ்ரத்தா கண்ணா என்ற மகளும் இருக்கின்றனர். பஞ்சாப்புக்கான பாராளுமன்ற உறுப்பினரான வினோத் கண்ணா பாலிவுட்டில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.



    இந்நிலையில், வினோத் கண்ணா மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் மை டியர் வினோத் கண்ணா.... உங்களை மிஸ் பண்ணுகிறேன். உங்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்த ரஜினி, அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    மேலும் பிரதமர் மோடியும் வினோத் கண்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரு பிரபல நடிகராக எப்போதும் நினைவில் இருப்பவர். ஒரு சிறந்த தலைவர். நல்ல மனிதர். அவரது மறைவு வேதனையை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
    இன்று வெளியாகவிருந்த `பாகுபலி 2' படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக பாலிவுட் இயக்குநரும், `பாகுபலி 2' படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான கரன் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருக்கும் `பாகுபலி 2' உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. `பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், படம் ரிலீசாவதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது இன்று படத்தின் ப்ரீமியர் காட்சியை திரையிட படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி இன்று இரவு வெளியாகவிருந்த ப்ரீமியர் காட்சி ரத்து செய்யப்படுவதாக பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், `பாகுபலி 2' படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான கரன் ஜோஹர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    பாலிவுட்டின் பிரபல நடிகர் வினோத் கண்ணா உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக `பாகுபலி 2' படக்காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
    பாகுபலி-2 படம் தமிழ்நாட்டில் விஜய், அஜித் படங்களை நெருங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    பொதுவாக விஜய், அஜித் படங்கள் என்றால் சென்னையில் சில திரையரங்குகளில் அதிகாலை சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்வார்கள். அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் சிறப்புக்காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் முண்டியடிக்கும். இதற்காக சில திரையரங்குகள் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 4 மணிக்கு முன்னதாக 1 மணிக்கெல்லாம் அஜித், விஜய் படங்களை திரையிட்டது உண்டு.

    சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படம் ஒரு திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய வரலாறு உண்டு. இதையெல்லாம்விட ரஜினியின் படங்கள் இங்கு பல வரலாறுகளை படைத்துள்ளது என்பது வேறு விஷயம்.



    இப்படி தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு உள்ள பரபரப்பு தற்போது பிரபாஸ் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபலி-2’ படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒருசில திரையரங்குகள் அதிகாலை 4.30 மணி சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் அதிகாலையிலேயே இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டாததால் அந்த திரையரங்குகள் தற்போது அதிகாலை 4.30 காட்சிகளை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. என்னதான் பிரம்மாண்டம், அதிநவீன தொழில்நுட்பங்கள் என்று பல்வேறு எதிர்பார்ப்புடன் உருவாகியிருந்தாலும், ரஜினி, அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் போட்டி போட முடியாத நிலைமைதான் தற்போது ‘பாகுபலி-2’ க்கு உருவாகியுள்ளது என்பதுதான் உண்மை.
    அறிமுக இயக்குனர் மீஞ்சூர் கோபி நயினார் இயக்கியுள்ள படத்தில் நயன்தாரா துணை இயக்குநர் வேலைகளையும் செய்ததாக கோபி தெரிவித்துள்ளார். இதுகுறித்த மேலும் தகவல்களை கீழே பார்ப்போம்.
    அறிமுக இயக்குனர் மீஞ்சூர் கோபி நயினார் இயக்கியுள்ள படம் ‘அறம்’. இதில் நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடித்து இருக்கிறார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடித்த நயன்தாரா பற்றி கூறிய கோபி நயினார் கூறியபோது...

    “ ‘அறம்’ படத்தில் நயன்தாரா உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தனது காட்சிகள் முடிந்தாலும் செட்டிலேயே இருப்பார். மற்றவர்கள் நடிப்பதை கண்காணிப்பார்.



    ‘அறம்’ படத்தை 25 நாட்களில் நடித்துக் கொடுத்தார். கடுமையான வெயிலிலும் நடிகர் நடிகைகள் போராட்ட காட்சிகளில் நடித்தனர். அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

    இப்படத்தில், உலகின் முக்கியப் பிரச்சனையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய வேடங்களில் 'காக்கா முட்டை' புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    அஜித்துக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர், தனது மேலாடை இல்லாத புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு சூடேற்றி இருக்கிறார். அந்த நடிகை யார் என்பதை கீழே பார்ப்போம்.
    இந்தி படங்களில் நடிக்கும் பிரேசிலை சேர்ந்த நடிகை புரூனா அப்துல்லா. பிரேசிலை சேர்ந்த இவர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தபோது மாடலிங் செய்து பின்னர் பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் அஜித்தின் ‘பில்லா 2’ படத்திலும் நடித்ததின் மூலமாக தமிழிலும் அறிமுகமானார்.

    அடிக்கடி பிகினி உடையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத் தளங்களில் வெளியிடுவார். இப்போது மேலாடை இல்லாத தனது புகைப்படத்தை புரூனா அப்துல்லா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.



    முன்னதாக கடந்த மாதம் பிரேசிலில் விடுமுறை நாட்களை தனது நண்பர்களுடன் கழித்து வந்த புரூனா, பிகினி உடையில் எடுக்கப்பட்ட தனது விதவிதமான புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையதளத்தை சூடேற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    படக்குழு ஒன்று காதல் ஜோடியால் ரொம்பவும் அல்லல்பட்டார்களாம். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    இரண்டெழுத்து நடிகரும் நான்கெழுத்து நடிகையும் ஒருகாலத்தில் காதலர்களாக வலம்வந்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்திக்கு இரண்டு பேரும் மறுப்பும் தெரிவிக்கவில்லை, உறுதியான தகவலும் அளிக்கவில்லை. இதனால், இந்த செய்தி இன்னமும் வதந்தியாகவே கோலிவுட் வட்டாரத்தில் சுற்றி வருகிறது.

    இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு நட்சத்திர ஜோடிகளும் மூன்றெழுத்து படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இருந்து இவர்களின் நெருக்கம் மேலும் அதிகமாகியுள்ளதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன்பு சில புகைப்படங்களும் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.



    இந்நிலையில், இந்த ஜோடிகளால் அந்த படக்குழுவும் பெரிய கஷ்டத்தை அனுபவித்துள்ளதாம். இதுவரைக்கும் அந்த இரண்டெழுத்து நடிகர் தனியாக நடித்த எந்த படமும் சரியாக ஓடியது கிடையாது. அப்படியிருக்கையில், முன்னணி நடிகர் போல் படங்களின் புரோமோஷனுக்கு வரமாட்டேன் என்று அடம்பிடிப்பார். இது ஒருபக்கம் படக்குழு தலைவலி கொடுத்தாலும், மற்றொருபுறம் இந்த இரண்டு ஜோடிகளும் படப்பிடிப்பு தளத்தில் ரொம்பவும் லூட்டி அடிப்பார்களாம். இதனால் ஒருசில நேரங்களில் படப்பிடிப்பும் ரொம்ப தாமதமாகவே நடந்துள்ளதாம்.

    இது படக்குழுவுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம். எனவே, இனியாவது சுதாரித்துக்கொண்டு இந்த ஜோடியே ஒன்றாக எந்த படத்திலும் போடக்கூடாது என்று சினிமா வட்டாரங்களில் படக்குழுவினரே கூறி வருகிறார்களாம். ஆனால், அந்த நடிகரும் நடிகையும் இதைப்பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் இருந்து வருகிறார்களாம்.
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மும்பையில் காலமானார்.
    பாலிவுட்டின் பிரபல நடிகரான வினோத் கண்ணா (70) மும்பையில் காலமானார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 2 நாட்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமானார்.

    இவருக்கு கவிதா கண்ணா என்ற மனைவியும், ராகுல், அக்‌ஷயே, சக்‌ஷி என்ற மகன்களும், ஷ்ரத்தா கண்ணா என்ற மகளும் இருக்கின்றனர். பஞ்சாப்புக்கான பாராளுமன்ற உறுப்பினரான வினோத் கண்ணா பாலிவுட்டில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.



    வினோத் கண்ணாவுக்கு முன்னதாகவே கீதாஞ்சலியுடன் திருமணமாகி பின்னர் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. அரசியலில் தீவிர கவனம் காட்டி வந்த வினோத் கண்ணா சமீபத்தில் `தபாங்', `ப்ளேயர்ஸ்', `தபாங் 2', `தில்வாலே' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் இரண்டு பாகமாக ஆனது சிம்பு ஐடியாதான் என்று அவரே தெரிவித்துள்ளார்.
    சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் இரண்டு பாகங்களாக வெளிவருவதாக சமீபத்தில் சிம்பு அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் இப்படத்தில் சிம்பு, அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடுவது குறித்து திடீரென அறிவிப்பு வெளியானது அனைவரையும் ஆச்சர்யத்தையும், கேள்வியையும் எழுப்பியது. இதுகுறித்து சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.



    அவர் கூறும்போது, இப்படத்தில் மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கதாபாத்திரங்களின் காட்சிகளை பார்த்தபோதே கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக சென்றது. எனவே, சிம்பு இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்கலாம் என்று கூறினார். அதனால்தான் தற்போது அறிவித்தோம் என்று கூறியுள்ளார்.

    இப்படத்தின் முதல்பாகம் ரம்ஜான் தினத்தையொட்டி வெளியாகவிருக்கிறது. இரண்டாம் பாகம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாகவிருக்கிறது. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. 
    வறுமையில் வாடும் பி.எஸ்.வீரப்பாவின் மகன் பி.எஸ்.வீ.ஹரிஹரனுக்கு உதவி செய்யும் வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரூ.1 லட்சம் மதிப்பிலான வரைவோலையை வழங்கி இருக்கிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    `மகாதேவி', `மன்னாதி மன்னன்', `வஞ்சிக்கோட்டை வாலிபன்', `மீனவ நண்பன்', `மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்' போன்ற படங்களில் கம்பீர வில்லனாக வந்தவர் பி.எஸ்.வீரப்பா. பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் `ஆந்த ஜோதி', `ஆலயமணி', `ஆண்டவன் கட்டளை', `நட்பு' உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

    பி.எஸ்.வீரப்பாவின் மகன் பி.எஸ்.வீ.ஹரிஹரன் என்பவரும் தயாரிப்பாளர் தான். ஆனால் பி.எஸ்.வீரப்பாவின் மறைவுக்குப் பிறகு, படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.

    ஏராளமான படங்களில் நடித்துச் சம்பாதித்த பணத்தை, படத் தயாரிப்பில் வீரப்பா இழந்துவிட்டார். இதில் வாடகை வீட்டில் வசித்து வரும் வீரப்பாவின் மகன் பி.எஸ்.வி.ஹரிஹரனுக்கு, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக வாடகையைக் கூடச் செலுத்த முடியவில்லை. வீட்டைக் காலி செய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர் நிர்பந்தப்படுத்தி இருக்கிறார்.



    இதுகுறித்து தகவல் அறிந்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தாமாகவே முன்வந்து ரூ.1 லட்சத்துக்கான வரைவோலையை பி.எஸ்.வி.ஹரிஹரனுக்குக் கொடுத்து உதவியுள்ளார். அதனை பி.எஸ்.வி.ஹரிஹரன் வசிக்கும் முகலிவாக்கம் வீட்டுக்கே சென்று கலைப்புலி தாணு சார்பில், டைமண்ட் பாபு மற்றும் சிங்காரவேலு ஆகியோர் வழங்கினர்.

    பெரும் நடிகராக இருந்து சம்பாதித்ததை, தயாரிப்பாளராகி இழந்து வாடும் பி.எஸ்.வீரப்பா குடும்பத்துக்கு, நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று தாணு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
    சமுத்திரக்கனியுடன் ரஜியினின் சிஷ்யன் ஜீவா மோதவிருக்கிறார். எங்கே மோதுகிறார்? எதற்காக மோதுகிறார் என்பதை கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், சமூக அக்கறை கொண்டவருமான சமுத்திரக்கனி சமீபத்தில் தேசிய விருதையும் வென்றிருந்தார். இயக்குநரான அவர், பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்துள்ள அவரின் இரு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன.

    அந்த வகையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும், விக்ராந்த்தும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் `தொண்டன்' படம் வருகிற மே 5-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.



    இந்நிலையில், தனராம் சரவணன் இயக்கத்தில் `மூடர்கூடம்' நவீன் வெளியிடும் `கொளஞ்சி' படமும் அதே நாளில் வெளியாகவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான போஸ்டர்களையும் இணையதளங்களில் படக்குழு பகிர்ந்து பகிர்ந்து வருகிறது. இவ்வாறாக இருபடங்களும் ஒரே நாளில் ரிலீசானால் ஏதாவது ஒரு படம் மட்டுமே வெற்றி பெறும் என்ற ஒரு நம்பிக்கை தமிழ் சினிமாவில் இருக்கிறது. எனவே கடைசி நேரத்தில் இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    அதேநாளில் தான் ரஜினியின் சிசியனான ஜீவா நடிக்கும் `ஆரம்பமே அட்டகாசம்' படமும் ரிலீசாக உள்ளது. மேலும் கலையரசன் நடிப்பில் `எய்தவன்', தன்ஷிகா நடிப்பில் `ராணி', என மொத்தமாக 5 படங்கள் ரிலீசாக உள்ளன.

    இதுதவிர சமுத்திரக்கனி `ஆண் தேவதை', `கிட்னா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மே 5-ல் `தொண்டன்', `கொளஞ்சி', `எய்தவன்', `ராணி', `ஆரம்பமே அட்டகாசம்' உள்ளிட்ட 5 படங்கள் ரிலீசாக உள்ளன.
    பட அதிபர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மே 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், அப்போது, படப்பிடிப்புகள் நடைபெறாது; தியேட்டர்கள் மூடப்படும் என்றும் விஷால் அறிவித்தார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்க உறுப்பினர்களின் கூட்டுகூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை விளக்கி நடிகரும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரின் கூட்டுகூட்டம் நடந்தது. அதில் திரை உலக பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் சட்டத்துக்கு புறம்பான பதிவிறக்கம் போன்ற பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. இதுபற்றி இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.

    மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுக்களை அளிக்க இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நிறைவேற்றவேண்டும். அப்படி நிறைவேறாத பட்சத்தில் வருகிற மே 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். அதன்படி எந்த தியேட்டர்களிலும் படம் திரைக்கு வராது. படப்பிடிப்புகள் நடைபெறாது என்ற முக்கிய முடிவு எடுக்கவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம்.

    இவ்வாறு விஷால் கூறினார்.



    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * திரையரங்கு கட்டண முறையில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரவேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை, இருக்கும் இடம், ரசிகர்களுக்கு தரும் வசதிகள், பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்புக்கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டுவர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    * திருட்டு வி.சி.டி. ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்புபணியில் குறைந்தபட்சம் ஆயிரம் நபர் கொண்ட ‘டீம்’ அமைக்கப்பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட ‘டீம்’ போதவில்லை.

    * திரைப்படத்துறையினரே, இந்த ‘பைரசி’ தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்கவேண்டும்.

    * உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணைப்பிறப்பிக்க வேண்டும்.



    * இந்தத்துறையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் மாநிலம் முழுவதும் கட்டப்பட வேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும்.

    * பொதுச்சேவை வரி என்கிற புதிய வரிக்கொள்கையில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது திரைப்படத்துறைதான். திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும்போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது. எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்தபட்ச வரி விதிப்பாக 4 அல்லது 5 சதவீதம் மட்டுமே பொதுச்சேவை வரியாக இருக்கவேண்டும்.

    * திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும்போது, தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக பொது சேவை வரி விதிக்கப்பட வேண்டும்.

    * மத்திய அரசு, புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள், இதையே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி மற்றும் இணையசேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்யவேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்கவேண்டும்.



    * புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் பொதுச்சேவை வரி மற்றும் பல வித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்கவேண்டும்.

    * திரைப்படத்தொழிலையும், அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்பவர்களுக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும், மரியாதையையும் அளிக்கவேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட 14 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் கதிரேசன், ஞானவேல்ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர்செல்வம், டைரக்டர்கள் பார்த்திபன், பாண்டியராஜ், ஆர்.வி.உதயகுமார் மற்றும் ஏராளமான தயாரிப்பாளர்கள்-தியேட்டர் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
    `பாகுபலி 2' படத்தின் 2 நிமிடக்காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் `பாகுபலி 2'. உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

    தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது.

    பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், `பாகுபலி 2' ரிலீசாவதற்கு முன்பாகவே ரூ.438 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.



    இந்நிலையில் படம் ரிலீசாவதற்கு முன்பாக நேற்று இப்படத்தின் 2 நிமிடக் காட்சி இணையதளங்களில் லீக் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது. இதற்கு முன்பாக எடிட்டிங் பணியின் போது, ஒருசில படங்கள் வெளியாகி அதிர்ச்சியளித்தது முதல் பல்வேறு இன்னல்களை படக்குழு சந்தித்து வருகிறது.

    கர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்ததால் `பாகுபலி 2' படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருந்தது. தற்போது அந்த பிரச்சனை சீராகி உள்ள நிலையில், அடுத்ததாக தமிழக திரைப்பட விநியோகஸ்தர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் `பாகுபலி 2' படத்தில் இடம்பெறும் போர் உள்ளிட்ட 2 நிமிட சண்டைக் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதன் படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    `பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
    ×