என் மலர்
நடிகர் விஷால் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அப்படத்திற்கு `நாளை நமதே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் `நாளை நமதே'. இப்படத்தில் நடிக்க நடிகர் விஷால் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுவும் இப்படத்தில் அவர் முன்று வேடங்களில் நடிக்கவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குனர் பொன்ராமிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் விஷால் ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். மேலும் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சதிஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில், பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.
விஷால் தற்போது, `துப்பறிவாளன்', `இரும்புத்திரை', `வில்லன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். `கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் தமிழ் - ‘கயல்’ ஆனந்தி - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘என் ஆளோட செருப்பக்காணோம்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
‘ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்ஷன்ஸ்’ நிறுவனம் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் ‘என் ஆளோட செருப்பக்காணோம்’.
இதில் அறிமுக நாயகனாக தமிழ் நடிக்கிறார். கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பாலசரவணன், லிவிங் ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- சுக செல்வன்,இசை (பாடல் கள்)-இஷான்தேவ், பின்னணி-தீபன் சக்கரவர்த்தி, படத் தொகுப்பு-மணிகண்டன் சிவகுமார், கலை-என்.கே.பால முருகன், பாடல்கள்- விஜயசாகர், நடனம்- பாலகுமார் ரேவதி, ‘மெட்டி ஒலி’ சாந்தி, தினா, சண்டை பயிற்சி-ஸ்டண்ட் ஜிஎன், தயாரிப்பு- வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ஜெகன்நாத்.

படம் பற்றி கூறிய இயக்குனர்...
ஒரு அடைமழை மாதத்தில் தொலைந்த நாயகியின் செருப்புகளை தேடி நாயகன் குடையுடன் தன் பய ணத்தை ஆரம்பிக்கிறான். 30 நாட் கள் நடக்கும் இந்த தேடல் பயணத்தில் அவன் சந்திக்கும் வித விதமான மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் அந்த செருப்புகளால் ஏற்படும் நிகழ்வுகளின் தொகுப்பே இந்த படம்.
தொலைந்த ஜோடி செருப்புகள் நாயகியை சென்றடைந்ததா? நாயக னையும், நாயகியையும் அவை ஒன்று சேர்த்ததா? என்பதை நகைச் சுவையுடனும், சுவாரசியத்துடனும் சொல்வதே ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தின் கதை” என்றார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்று, நம்பூதிரிபாடு முதல்-மந்திரியானார். "இந்த வெற்றி பாவலர் வரதராஜனின் வெற்றி'' என்று நம்பூதிரிபாடு பாராட்டினார்.

தேர்தல் பிரசாரத்தில் அண்ணனுடன் சேர்ந்து ஈடுபட்ட அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"ஒரு தேயிலைத் தோட்டத்தின் வழியாக நாங்கள் சென்றபோது, ஓரிடத்தில் ஆண்களும், பெண்களுமாக தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே மேட்டுப் பகுதியில் ஜீப்பை நிறுத்தச் சொன்ன பாவலர் அண்ணன் பிரசார பாட்டை பாடினார் இப்படி:
"சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா
வெட்கங்கெட்ட காளை ரெண்டு
முட்டி உடைஞ்ச காளை என் கண்ணம்மா - இது
மூக்குக்கயிறு அறுந்த காளை என் பொன்னம்மா''
என்று பாடினார்.
பாவலரின் பாட்டு தேயிலைத் தோட்டத்தில் எதிரொலிக்க, அங்கே வேலை செய்தவர்கள் தங்கள் பின்னால் கட்டியிருந்த தேயிலைக் கூடைகளை அப்படியே போட்டுவிட்டு, மேலே வேகமாக ஓடிவந்து ஜீப்பை சுற்றி நின்று கேட்டார்கள்.
இடையிடையே கரகோஷம். ஆனந்தக் கூச்சல்கள்.
`இன்னும் ஒரு பாட்டு. இன்னும் ஒரு பாட்டு' என்று ரசிகர்களாக மாறிப்போன தொழிலாளர்கள்!
நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பாவலர் அவர்களிடம், "வேறு இடங்களுக்கும் போகவேண்டும். நேரமாகிவிட்டது'' என்று சொல்லி ஜீப்பை கிளப்பச் சொல்ல,
அப்போது, "பாவலரே! கொஞ்ச நேரம் பொறுங்க'' என்று சொன்ன ஒரு தொழிலாளி, ஓட்டமாய் ஒரு பர்லாங் தூரம் ஓடி கையில் சூடு பறக்கும் `டீ' கிளாசுடன் வந்து நின்றார்.
அந்தக் குளிரிலும் ஆவி பறக்க டீ கொடுத்த அந்த அன்பு, எங்களை நெகிழச் செய்தது.
எதிர்பார்த்தபடியே அந்தத் தொகுதியில் மீண்டும் கம்ïனிஸ்டு கட்சி ஜெயிக்க, நம்பூதிரிபாடு தலைமையில் கம்ïனிஸ்டு கட்சி மந்திரிசபை
அமைத்தது.வெற்றி விழாவில் நம்பூதிரிபாடு
மூணாறு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம். லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். மேடையில் நம்பூதிரிபாடு பேசவந்தபோது, "இவடே பாவலர் வரதராஜன் ஆரானு?'' என்று கேட்டார்.
கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருëëத பாவலரை ஜனங்கள் எழுந்து நிற்க வைத்தார்கள். பாவலரை பார்த்த நம்பூதிரிபாடு, `என்ட சகாவே! இவிட வரு'' என்றார். அண்ணன் மேடையில் ஏறினார். கைதட்டல் அதிகமாகியது.
அப்போது நம்பூதிரிபாடு "ஈ வெற்றி முழுவன் பாவலர் வரதராஜன்ட வெற்றியானு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
அவர் இப்படிச் சொன்னதும் மொத்தக் கூட்டமும் உற்சாகமானது. கைதட்டல் ஒலி விண்ணை எட்டியது. இந்த சம்பவத்துக்குப் பிறகே தமிழ்நாடு கம்ïனிஸ்டு கட்சிக்கு பாவலர் அறிமுகமானார்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
பாவலர் அண்ணனின் பாட்டு மூலம் கேரளத்தில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொண்ட இளையராஜா, தேவாரம் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பில் பீஸ் கட்டி சேர்ந்து விட்டார்.
அதுபற்றி உற்சாகத்துடன் இளையராஜா சொன்னார்:
"பள்ளியில் சேர்ந்த அன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. புதிய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கினேன். அதன் மணம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. புதுப் புத்தகங்களை வாங்கிய அன்று அவற்றை தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கினேன்.
அடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பினேன். போன வருடம் 9-ம் வகுப்பில் பெயிலான என் நண்பன் ஜெயகரனும் என்னுடன் 9-ம் வகுப்பில் சேர்ந்து கொண்டான். நான் படிக்காமல் ஒரு வருடம் வேஸ்ட் ஆகிவிட்டதே என வருந்தியதை, அவன் படித்தும் ஒரு வருஷம் வேஸ்ட் ஆகியிருப்பதை எண்ணி மனதை தேற்றிக்கொண்டேன்.
பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது. அது `நான் 9-வது படிக்க முடியாது'' என்று சொன்ன ஜோதிடர்களுக்குத் தெரிய வேண்டாமா?
ஜோதிடர்களை பார்த்தேன். "நான் இளங்கோவடிகள் இல்லை என்றாலும், உங்கள் ஜோதிடத்தைப் பொய்யாக்கி விட்டேன் பார்த்தீர்களா?'' என்று கேட்டேன்.
அவர்களோ என்னை ஏளனமாக பார்த்தபடிகள், "கொஞ்சம் பொறு கண்ணா. இன்னும் மூணே மாசம். இந்த கிரகம் இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாய்ப் போயிடும் (அதாவது படிக்க முடியாமல் போய்விடும்) என்றார்கள்.
"அதையும் பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, படிப்பைத் தொடர்ந்தேன். என்ன நடந்தாலும் எக்காரணம் கொண்டும் படிப்பையும், ஸ்கூலையும் விட்டு விடுவதில்லை என்று எனக்குள் ஒரு வைராக்கியமே குடிகொண்டது.
அப்போது என்னை பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். நாலைந்து மாணவர்களோடு சேர்ந்து நானும் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஏதாவது முக்கியமாக சொன்னால்கூட, அதை ஏனோதானோவென்றே கேட்பார்கள்.
பள்ளியில் காலை பிரேயரை எனக்கு அண்ணன் முறைக்காரரான குருசாமி என்பவர் பாடுவார். இல்லையென்றால் ராமநாதன் என்ற தேவாரத்து மாணவன் பாடுவார். இவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்கள்.
அன்றைக்கென்று பார்த்தால் குருசாமி அண்ணனுக்கு நல்ல ஜ×ரம். குரல் வேறு கம்மிப் போயிருந்தது. அதனால் அன்றைய பிரேயர் பாடலை `பாட முடியாது' என்பதை தெரிந்து கொண்டவர், பிரேயர் நேரத்தில் என்னைப் பாட அழைத்தார்.
மைதானம் முழுக்க மாணவர்கள். நான் தயங்கித் தயங்கி, படிகளில் ஏறி, மேல் படியில் வழக்கமாக பிரேயர் பாடும் இடத்தில் நின்றபடி, `ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே' என்று தொடங்கினேன். ஒரு அமைதி எங்கிருந்தோ வந்து கவ்வியது. பாடி முடியும்வரை அந்த அமைதி தொடர்ந்தது. பாடல் முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்கள் என்னை விசேஷமாக பார்த்தார்கள்.
என் வகுப்பிலோ மாணவ-மாணவிகள் என்னை தனியாக கவனித்தார்கள்.
அதுவரை என்னை பொருட்படுத்தாதவர்களுக்கு அன்று முதல் நான் முக்கியமானவன் ஆனேன். என்னை சட்டை செய்யாதவர்கள்கூட வலுவில் வந்து பேசினார்கள்.
இப்படி திடீர் கவனிப்பு தொடர்ந்தாலும் ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்ற உறுதியுடன் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினேன். காலாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தேன்.

அய்யப்பன் கோவிலில் ஆகமவிதிகளை மீறி பாடியதாக நடிகர் ஜெயராம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள அரசிடம் இதுகுறித்து அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் நடந்து வருகிறது. மேலும் ஏராளமான கட்டுப்பாடு களும் காலம் காலமாக இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
10 வயதிற்கு மேல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இங்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. அதையும் மீறி தடை செய்யப்பட்ட வயதிற் குட்பட்ட பெண்கள் இங்கு சாமி தரிசனம் செய்ததாக அடிக்கடி சர்ச்சை எழுந்து வருகிறது.

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த 50 வயதிற்கு உட்பட்ட 2 இளம் பெண்கள் சரிபமலையில் சாமி தரிசனம் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரள தேவசம்போர்டு விஜிலன்ஸ் அமைப்பு விசாரணை நடத்தியது.
இதுதொடர்பான விசா ரணை அறிக்கையும் சமீபத் தில் கேரள தேவசம் போர்டு மந்திரி மற்றும் சபரிமலை சிறப்பு ஆணையரிடம் வழங்கப்பட்டது. அதில் தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்று உள்ள இன்னொரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கேரள தொழில் அதிபர் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தபோது பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் அன்று சபரி மலையில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர் சபரிமலை கோவில் கலைஞர்கள் இசைக்கும் இசைக்கருவியான ‘இடக்கா’ கருவியை வாங்கி அதை இசைத்து பாட்டுப்பாடி உள்ளார். இது சபரிமலை ஐதீகத்தை மீறிய செயல் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அன்று தொழில் அதிபருக் காக சபரிமலை அய்யப் பனுக்கு விதிகளை மீறி சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ஜெயராம் சபரிமலை யில் இசைக்கருவி இசைத்து பாட்டுப்பாட அனுமதித்தது தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுசுடன் ‘வடசென்னை’ படத்தில் நடித்து வருகிறார். கவுதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்‘ படத்துக்கும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
“வடசென்னை’ படத்தில் குப்பத்து பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே இதுபோன்ற வேடத்தில் நடித்திருப்பதால் இதில் அதைவிட மாறுபட்ட நடிப்பை கொடுத்து வருகிறேன்.
இந்த படத்தில் நடிப்பதன் மூலம் தனுசுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது.
‘துருவநட்சத்திரம்‘ படத்தில் நடிக்கிறேன். இது விக்ரம் நடிக்கும் படம் என்பது மட்டும்தான் தெரியும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பதை டைரக்டர் சொல்லவில்லை.

இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ரித்துவர்மா நடிக்கிறார். எங்களில் யார் விக்ரம் ஜோடி என்பது எனக்கு தெரியாது. எப்போதுமே திறமையான நடிப்பை காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.
டூயட்பாடும் வேடம் வேண்டும் என்று இயக்குனரிடம் சொல்வதில்லை. அழுத்தமான வேடத்தில்தான் நடிக்க விரும்புகிறேன். இந்த படத்திலும் கவுதம்மேனன் எனக்கு அழுத்தமான வேடம் வைத்திருப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம் என்று நடிகை கேத்தரின் தெரசா கூறியுள்ளார். இதுகுறித்த அவர் அளித்த முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
ஆர்யாவுடன் கேத்தரின் தெரசா நடித்து வெளியாகி உள்ள ‘கடம்பன்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுகுறித்து கேத்தரின் தெரசா கூறுகிறார்...
“தமிழ், தெலுங்கில் எத்தனையோ படங்கள் நடித்துவிட்டேன். கடம்பன் மாதிரி ஒரு படத்தில் நடித்தது இல்லை. இந்த மாதிரி கஷ்டப்பட்டதும் இல்லை. சில நாட்கள் நடித்த எனக்கே இவ்வளவு பிரச்சினை. ஆனால் நிஜவாழ்க்கையில் மலையில் காட்டில் வாழும் பெண்களை நினைத்து பார்த்தேன். அவர்கள் எவ்வளவு மன உறுதி மிக்கவர்கள், அவர்களுக்கு என் சல்யூட்.
ஆர்யாவுடன் நடித்தது நல்ல அனுபவம். ஆர்யா ஸ்வீட் பெர்சன். படப்பிடிப்பு தளத்தில் அவரும் உயிரை கொடுத்து வேலை செய்து இருக்கிறார்.

அடுத்து விஷ்ணுவுடன் ‘கதாநாயகன்’ படத்தில் நடிக்கிறேன். என்னுடன் நடித்த பல நடிகர்கள் என்னை பாராட்டியிருக்கிறார்கள்.
நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம். நான் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன். துரித உணவு வகைகளை சாப்பிடமாட்டேன். ஸ்வீட்டுக்கும் தடா. இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை. பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகமாகிறது. இது தவறு. பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும். நான் துபாயில் வளர்ந்தவள். அந்த மாதிரி இங்கேயும் பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் வர வேண்டும்”.
என்று கூறினார்.

‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் பாடல்களை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
ஸ்வாதி பிலிம்ஸ் சர்கியூட் தயாரிப்பில் ‘லொள்ளு சபா’ ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’.
காதலும், காமெடியும் கலந்த இந்த படத்தில் கதாநாயகியாக சங்கீதா பட் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ஸ்ரீரஞ்சனி, சாம்ஸ், வையாபுரி, மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். ரங்கா இயக்கியுள்ள இந்தபடத்துக்கு ஜெய.கே.தாஸ் இசை அமைத்துள்ளார். ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

மாலதி வேலு தயாரித்திருக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ பாடல்களை ரஜினி வெளியிட்டார். அப்போது, “படத்தின் தலைப்பை போலவே உங்கள் எதிர்கால ஆரம்பமே அட்டகாசமாக அமையும் என” வாழ்த்தினார்.
இந்த படம் மே 5-ந் தேதி திரைக்கு வருகிறது. இதை பிரைடே பிலிம் பேக்டரி நிறுவனத்தார் வெளியிடுகிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரஜினிகாந்தின் ‘2.0’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய இரண்டு படங்களுக்கான இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்து முந்தைய காலங்களில் வருடத்துக்கு இரண்டு, மூன்று படங்கள் திரைக்கு வந்தன. அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை வருடத்துக்கு ஒரு படம், இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று குறைந்து விட்டது. அதிக பொருட்செலவுகள், உலகத்தரத்தில் தொழில் நுட்பங்களை புகுத்துதல், வெளிநாடுகளில் படப்பிடிப்புகளை நடத்துதல் போன்ற பல்வேறு விஷயங்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றன.
ரஜினிகாந்த் நடித்து 2010-ம் ஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் ஷங்கர் அப்போதே திட்டமிட்டார். அதற்கான திரைக்கதையையும் உருவாக்கினார். ஆனால் படப்பிடிப்பு உடனடியாக தொடங்காததால், இடையில் ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்திலும், ‘லிங்கா’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்தார். 2014-ம் ஆண்டு இந்த படங்கள் திரைக்கு வந்தன.

அதன்பிறகு எந்திரன் இரண்டாம் பாகத்துக்கு ‘2.0’ என்று பெயர் சூட்டி ரூ.350 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்க, படப்பிடிப்பு பணிகள் 2015-ல் தொடங்கின. சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பல கோடி செலவில் பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கடைவீதிகள், தார் ரோடுகள், எந்திர மனிதனை உருவாக்கும் விஞ்ஞான கூடங்கள் ஆகியவற்றை அரங்குகளாக அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.
ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற நேர்ந்ததால், படப்பிடிப்பில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இடையில் அவர் ‘கபாலி’ என்ற படத்தில் நடித்து அது கடந்த வருடம் ஜூலை மாதம் திரைக்கு வந்து விட்டது. தீபாவளிக்கு ‘2.0’ படம் வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நாயகியாக எமிஜாக்சனும், வில்லனாக அக்ஷய்குமாரும் நடிக்கிறார்கள்.

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் 2013-ம் ஆண்டு திரைக்கு வந்ததும், அடுத்த சில மாதங்களிலேயே ‘விஸ்வரூபம்-2’ படமும் வெளிவரும் என்று அறிவித்தனர். ஆனால் நிதி பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்டபடி அந்த படம் வெளியாகவில்லை. அதன்பிறகு கமல்ஹாசன் உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய 3 படங்களில் நடித்து விட்டார். தொடர்ந்து சபாஷ்நாயுடு படத்திலும் நடிக்க தொடங்கினார்.
விஸ்வரூபம்-2 படம் எப்போது வெளிவரும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு. விஸ்வரூபம்-2 படத்தை 2017-ம் ஆண்டுக்குள் வெளிகொண்டு வருவதற்கான பொறுப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் ஏற்றுள்ளது. ‘விஸ்வரூபம்-2’ படத்தை இனி நீங்கள் பார்க்க முடியும். அரசியல் குறுக்கீடுகள் இருந்தபோதிலும் நான் தொடர்ந்து போராடினேன். அதுவும் நல்ல அனுபவம்தான்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாத இடைவெளியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கான இறுதி கட்ட பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

`பாகுபலி 2' நாயகன் பிரபாஸீக்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அது என்ன பரிசு என்பதை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் `பாகுபலி 2'. நாளை மறுநாள் (ஏப்ரல் 28-ஆம் தேதி) உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. மேலும் கூடுதல் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது.

பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், `பாகுபலி 2' ரிலீசாவதற்கு முன்பாகவே ரூ.438 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்னமும் மாபெரும் வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், `பாகுபலி' நாயகன் பிரபாஸீக்கு, இயக்குநர் ராஜமவுலி பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். 5 வருடங்களாக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் ஒரே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவர் பிரபாஸ். எனவே பிரபாஸை பலமேடைகளில், பலமுறை ராஜமவுலி பாராட்டியிருக்கிறார். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் விதமாக, `பாகுபலி' படத்தில் பிரபாஸ் பயன்படுத்திய போர் கவசம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
`பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சூர்யாவுடனான தனது அடுத்த படம் குறித்து இயக்குநர் ஹரி தகவல் தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’ படங்களை எடுத்தவர் இயக்குநர் ஹரி. அதுவும், ‘சிங்கம்’ மூன்று பாகங்களைக் கடந்துவிட்டது. நான்காவது பாகமும் வெளியாகும் என இயக்கநர் ஹரி கூறியிருக்கிறார்.
இந்நிலையில், மறுபடியும் சூர்யாவை வைத்து தான் படம் இயக்கப்போவதாகக் ஹரி தெரிவித்துள்ளார். ஆனால், அந்த படம் ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் இல்லை என்றும், புதிய கதையொன்றில் இருவரும் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது ஹரி பிசியாக இருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களில் சாமி 2 படத்திற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இப்படத்தை முடித்த பிறகு சூர்யா படத்தின் வேலைகளைத் தொடங்க இருக்கிறார் ஹரி. சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா அதன்பிறகு, ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிப்பார்.
அதன்பின்னர் 5 அல்லது 6 வருடங்கள் கழித்து சிங்கம் படத்தின் 4-வது பாகம் வெளியாகும் என்று ஹரி முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள் அமெரிக்கா, ஜார்ஜியா, போலந்து என முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தும் வருகிறார்.
இதில், ஆனந்த் பால்கி இயக்கத்தில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துவிட்ட சந்தானம், அடுத்ததாக ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் - புதுமுக நாயகி வைபவி நடிக்கும் படம் ‘சக்கபோடு போடு ராஜா’. இந்தப் படத்தை விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஓப்பனிங் சாங்கை அமெரிக்கா, ஜார்ஜியா உள்ளிட்ட முன்னணி நாடுகளில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்தை முடித்த பிறகு செல்வராகவன் இயக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்துக்காக சந்தானம் போலந்து செல்கிறார். அங்கு, சில முக்கியக் காட்சிகளைப் படமாக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களையும் முடித்தபிறகு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் நடிக்கும் சந்தானம், அதன்பிறகு ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார்.

பிரபல இந்திய பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகை ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த நடிகை யார் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
பிரபல இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால். 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
அவரது வாழ்க்கை வரலாற்றை எடுக்க கடந்த 2012 முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அமோல் குப்தே படமாக எடுக்க உள்ளார். சாய்னா நேவால் மற்றும் பாட்மின்டன் குறித்த ஆய்வில் தீவிரமாக இறங்கியுள்ள குப்தே, இப்படத்தில் சாய்னா நேவாலாக பிரபல பாலிவுட் நடிகை ஷரத்தா கபூரை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தை பூஷன் குமார் தயாரிக்க உள்ளார்.

இதுகுறித்து ஷரத்தா கபூரிடம் கேட்ட போது, அவரும் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். பள்ளிகளில் தான் பாட்டிமின்டன் விளையாடிய அனுபவம் தனக்கு இருப்பதாக கூறிய ஷரத்தா, உலகின் நம்பர்.1 வீராங்கணையான சாய்னா கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அதற்காக தான் தீவிரமாக தயராகி வருவதாகவும் கூறினார்.
ஆசிய சேம்பியன்ஷிப் போட்டியில் பிசியாக விளையாடி வரும் சாய்னாவிடம் இந்த தகவல் குறித்து கேட்ட போது, இது எனக்கு செய்தி. இந்த படம் பற்றி எனக்கு தெரியும். ஆனால் ஷரத்தா கபூர் நடிப்பது குறித்த தற்போதே அறிந்து கொண்டேன் என்றார். மேலும் ஷரத்தா ஒரு திறமை மிக்க நடிகை. எனது நெருங்கிய தோழியான ஷரத்தா கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.