என் மலர்
இந்தி நடிகர் பர்ஹான் அக்தருக்கு அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
இந்தி நடிகர் பர்ஹான் அக்தருக்கும், அதுனா பாபனி என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சாக்கியா, அகிரா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த பர்ஹான் அக்தர்- அதுனா பாபனி தம்பதியின் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிய முடிவு செய்தனர். அதன்படி, விவாகரத்து கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி மும்பை பாந்திரா குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இருவருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டது. மேலும், இருவருக்கும் ஒருமித்த முடிவு ஏற்படும் வண்ணம், 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அவகாசம் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் பாந்திரா குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் பர்ஹான் அக்தரும், அவரது மனைவி அதுனா பாபனியும் தங்களது வக்கீல்களுடன் ஆஜராகினர். இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி எம்.எம். தாக்கரே தீர்ப்பு விவரத்தை அறிவித்தார்.
அதன்படி, இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின்பேரில், விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். மேலும் குழந்தைகள் இருவரும் தாயாரின் பராமரிப்பில் இருப்பார்கள் என்றும், அவர்களை பார்க்க பர்ஹான் அக்தருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி கூறினார்.

சிம்பு நடித்த `இது நம்ம ஆளு' படத்தை தொடர்ந்து, தனுஷ் நடித்த படம் ஒன்று தெலுங்கில் வெளியாக உள்ளது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
தனுஷ் இயக்கத்தில் `ப பாண்டி' (பவர்பாண்டி) படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் மே மாதம் ரிலீசாகவிருப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் `வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாவது பாகத்திலும் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை' படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

பின்னர் ‘மாரி-2’ படத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணையவிருக்கும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் ஹாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் - ரிச்சா கங்கோபாத்யா நடிப்பில் கடந்த 2011-ல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் `மயக்கம் என்ன'. இப்படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `இது நம்ம ஆளு' படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக இரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், `மயக்கம் என்ன' படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் `வேலைக்காரன்' படக்குழு கபாலி படத்தின் பாணியில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார்.
சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 5-ஆம் தேதியும், படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் (செப்டம்பர் 29)-ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தின் முக்கால்வாசி காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள, நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை `கபாலி' பட பாணியில் நடத்த மோகன் ராஜா முடிவு செய்துள்ளார். அதற்காக, மோகன் ராஜா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்குள்ள பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் சேரி போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாதா சாகேப் விருது பெறும் இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
2016-ம் ஆண்டுக்கான 'தாதா சாஹேப் பால்கே' விருது இந்தியாவின் மிகமுக்கியமான இயக்குநர்களில் ஒருவரும் நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கமல்ஹாசன்-இளையராஜா கூட்டணியில் உருவான 'சலங்கை ஒலி' உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பெருமைக்குரியவர்.
இந்நிலையில், தாதா சாகேப் விருது பெறும் இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில், விஸ்வநாத்தின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் பால்கே விருது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மக்களுக்கு முதன்முதலில் சினிமாவை அறிமுகப்படுத்தியவர் தாதா சாஹேப் பால்கே. இவர், `இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். இந்திய சினிமாவில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் இவர் பெயரிலேயே விருது வழங்கி கெளரவிக்கிறது மத்திய அரசு.
வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.
அதன் பிறகு நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:
"நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும். ஆனால் அன்று நான் பாடத்தொடங்கிய அந்த நேரத்தில் இருந்த கொஞ்ச சத்தமும் இல்லாமல் போயிருந்தது. என் பாட்டுக்காகத்தான் இப்படி எல்லோரும் அமைதியாகி விட்டார்களோ என்ற மகிழ்ச்சியில் பாடும் சத்தத்தை அதிகரித்தேன்.
அப்போதுதான் `ஸ்பாட் விசிட்'டுக்காக அங்கே வந்திருந்த தலைமை என்ஜினீயர் என் பாட்டைக் கேட்டுவிட்டார். அப்போதும் கூட என் குரல் குறையவில்லை. நிற்கவும் இல்லை.
என்னை நெருங்கியவர், "ஹேய்! கம் ஹியர் மேன்' (இங்கே வா) என்றார்.
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த `ஓஸ் பைப்'பை மடக்கி வைத்துவிட்டு அருகில் போனேன்.
"ஹு ஆர் ï? வாட் இஸ் யுவர் நேம்? (யார் நீ? உன் பெயர் என்ன?) என்று கேட்டார்.
"ராஜையா'' என்றேன்.
"கொஞ்சமும் தயங்காமல் நான் பதில் சொன்னதைப் பார்த்தவர், "நீ படித்திருக்கிறாயா?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
"எஸ் சார். எய்த் ஸ்டாண்டர்டு'' என்றேன்.
"எய்த் ஸ்டாண்டர்டு?'' என்று ஆச்சரியமாக கேட்டவர், அரை டிராயரும், குள்ளமுமாக இருந்த என்னை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார். அதே வேகத்தில் "ஆபீசுக்கு வந்து என்னைப்பார்'' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.
அதன்படி ஆபீசுக்குப் போய் அவரை பார்த்தேன். "நீ நாளையில் இருந்து `ஓஸ் பைப்' பிடிக்க வேண்டாம். இங்கே ஆபீசுக்கு வந்துவிடு'' என்றார்.
"சரி சார்'' என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். அங்கிருந்த அவரது உதவியாளரிடம், "இங்கே வந்து நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.
அவரோ, "ஏய்! உன்னை ஆபீஸ் பையனாகப் போட்டிருக்காருய்யா. போ! போ!'' என்றார்.
அடுத்த நாள் சந்தோஷமாக ஆபீசுக்குப் போனேன். அங்கே நாலைந்து செகரட்டரி, கிளார்க், லெட்ஜர் கீப்பர், அக்கவுண்டண்ட் இவ்வளவு பேர்தான் மொத்தம். இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரே கட்டிடத்தில் தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட நான்கு மேஜை - நாற்காலிகள். அவ்வளவுதான்.
ஒரு பைலை கையில் கொடுத்து, "அவரிடம் கொடு'' என்பார், ஒருவர். "இதை அவர்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்கி வா!'' என்பார், இன்னொருவர். இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தேனே தவிர, மற்றபடி ஒரே போர். ஏனென்றால் பாட்டுப்பாடவே சான்ஸ்
இல்லையே!இதுபோக மத்தியானம் ஆபீசர் கேம்பசில் இருந்த என்ஜினீயர் முரளீதரனுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்துப் போய் பரிமாறி வரவேண்டும். ஒரு மைல் தூரம் நடந்துதான் போய்வரவேண்டும்.
ஒரு நாள் முன்னதாகவே போய் காத்திருப்பேன். இன்னொரு நாளோ அவர் காத்திருக்க, நான் லேட்டாகப்போய் திட்டு வாங்குவேன். சரிவரப் பரிமாறாவிட்டால், அதற்கு வேறு திட்டு.
என்னுடைய சர்வீசில் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னை மறுபடியும் அணைக்கட்டுப் பகுதிக்கு மாற்றி, `ஓஸ் பைப்' பிடிக்க அனுப்பி விட்டார்கள்.''
இவ்வாறு கூறும் இளையராஜாவுக்குள் அணை தொடர்பான, ஒரு சோகமும் இருக்கிறது. அதுபற்றி கூறுகிறார்:
"அப்போது பெரும்பாலும் அணையின் வேலைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம். திடீரென ஒருநாள் அரசாங்க அறிவிப்பாக தண்டோரா ஒலித்தது.
அணையின் பின்பகுதியில் நீர் தேங்கும் இடத்தில் இருந்த ஊர்களான காமக்காபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிப்பவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விட வேண்டும். இப்படி வெளியேற கடைசிநாள்'' என்று கெடு தேதியையும் அறிவித்தார்கள்.
அணை உச்சியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த என் கண்ணில் மக்கள் ஊரை காலி செய்துவிட்டுப் போகும் காட்சி கண்ணில் படும். கெடு நாள் நெருங்க நெருங்க, கூட்டம் கூட்டமாய் அங்கிருந்த மக்கள் வெளியேறுவதைக் காண மனம் சகிக்கவில்லை.
அவர்கள் வாழ்வதற்கு அரசாங்கம் வேறு நிலங்கள் கொடுக்கலாம். நிலத்தோடு அவர்களுக்கிருந்த அந்த உறவின் பிரிவுக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்?''
- இவ்வாறு மிக இளம் வயதிலேயே மற்றவர்களின் பிரச்சினைகளையும் மனதுக்குள் பதியமிட்டுக்கொண்ட இளையராஜா, ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்து முடித்துவிட்டார். கையில் பணம் கொஞ்சம் சேர்ந்திருந்தது.
"இந்த வருடம் நிச்சயம் தேவாரம் ஸ்கூலில் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விடவேண்டும்'' என்று திட்டமிட்டார்.
ஆனால், அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக கேரளாவில் நடந்த தேர்தலில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டி இருந்தது. அதற்காக இளையராஜாவும் கேரளா சென்றார்.
இதுபற்றி அவரே கூறுகிறார்:
"1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் எல்லா இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க, கேரளாவில் மட்டும் கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரேயொரு மாகாணத்தில் (கேரளா) மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேறு கட்சி உருவானதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை.
இதனால் அந்தத் தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் காங்கிரசுக்கும் கம்ïனிஸ்டுக்கும் "வாழ்வா சாவா'' நìலை. எல்லா தேசியத் தலைவர்களும் அங்கே முகாமிட்டு இருந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற டென்ஷனான நிலை. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு கம்ïனிஸ்டு கட்சி சார்பில் பாவலர் அண்ணன் போயிருந்தார்.
ஸ்கூலில் சேருவதற்கு முன் வந்த விடுமுறை நாட்களில் நானும் பாஸ்கரும் பாவலர் அண்ணனை பார்க்க மூணாறுக்கு போனோம்.
கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் ஏகப்பட்ட கூட்டம். தேர்தல் காரியதரிசி அமர்ந்திருக்க, பல எஸ்டேட் கட்சித் தலைவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் பேசிய செயலாளர், "கம்ïனிஸ்டு தலைவர்கள் பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ராஜேஸ்வரராவ், ஜீவானந்தம் என அத்தனை பேரும் உங்கள் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து வருவார்கள்'' என்றார்.
இதைக்கேட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் "தோழரே! இவர்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பாவலர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அவரை மட்டும் எங்களுடன் அனுப்பினீர்களென்றால், இந்தத் தொகுதியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்'' என்றார்கள்.
இது என் கண் முன்னே நடந்த நிகழ்ச்சி.
தொழிலாளர்கள் இப்படிச் சொன்னதும் அவர்களிடம் பேசிய செயலாளர், "பாவலர் கண்டிப்பாக வருவார். அவர் பாடியபின் கூட்டம் தலைவர்களோடு நடக்கும்'' என்றார்.
உடனே மளமளவென வேலைகள் தொடர்ந்தன. பாவலர் அண்ணன் ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொரு எஸ்டேட்டாக பாடிச்சென்றதை கண்ணாரக் காணும் பாக்கியம் எனக்கும் பாஸ்கருக்கும் கிடைத்தது.

இணைந்த கைகள், ஜெகன் மோகனி உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவதுமான என்.கே.விஸ்வநாதன் இன்று காலமானார்.
சென்னை:
தமிழ் திரையுலகில் 1970-களில் ஒளிப்பதிவாளராக பிரவேசித்தவர் என்.கே.விஸ்வநாதன். சட்டம் என் கையில், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாண்டி நாட்டு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஸ்வநாதன், 1990ல் இயக்குனராகவும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார்.

இணைந்த கைகள், நாடோடி பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, ஜெகன் மோகினி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், என்.கே.விஸ்வநாதன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

நடிகை ஒருவர் தன்னால் கழற்றிவிடப்பட்ட காதலனால் பயத்தில் இருக்கிறாராம். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான பட்டணத்து நடிகை இந்தியில் நடிக்கும்போது தன்னுடன் நடித்தவருடன் காதல் வயப்பட்டார். தனது காதலனின் பெயரையும் அந்த நடிகை தனது கையில் பச்சைக் குத்திக் கொண்டார். இந்த விவரம் பாலிவுட்டில் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், இவர்களுடைய காதல் வாழ்க்கை கொஞ்ச நாட்களிலேயே கசந்து போயுள்ளது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. காதல் தோல்வியால் அந்த நடிகையை காதலித்தவர் போதைக்கு அடிமையாகிவிட்டாராம். அவரால் அந்த போதையிலிருந்து வெளியேறவே முடியவில்லையாம்.

தன்னுடைய காதல் கதையை அந்த நடிகர் புத்தகமாக எழுதி வெளியிடவிருக்கிறாராம். இதனால், பட்டணத்து நடிகைக்கு தற்போது பீதி கிளம்பியுள்ளதாம். புத்தகமாக வெளியிட்டால் தன்னுடைய இமேஜ் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம்.

விஜய் 61 படக்குழு வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய படப்பிடிப்பில் வடிவேலு, விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுவரை ராஜஸ்தான், சென்னை என ரொம்பவும் வெப்பமான இடங்களில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தக்கட்ட உறைய வைக்கும் குளிர் பிரதேசங்களில் நடத்தவுள்ளனர். இந்த படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

’விஜய் 61’ படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஜாக்கிசான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘ரெயில் ரோடு டைகர்ஸ்’ படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
ஜப்பான், சீனாவுக்குள் ஊடுறுவி ஒவ்வொரு பகுதிகளாக ஆக்கிரமித்து வரும் காலகட்டம். சீனாவின் மாஞ்சூரியா என்ற இடத்துக்குள் ஜப்பானியர்கள் ஊடுருவி, அங்குள்ள மக்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். சீனாவை சேர்ந்த ரெயில்வே தொழிலாளர்களான ஜாக்கிசான் மற்றும் அவரது நண்பர்கள், தன் நாட்டில் மக்கள் பசியும், பட்டினியுடன் வாழும்போது, அயல்நாட்டினர் உள்ளே நுழைவதா? என்று அவர்களுக்கெதிராக களமிறங்க திட்டம் போடுகிறார்கள்.
ஜப்பானியர்களுக்கு தெரியாமலேயே ரெயில் கொள்ளையடிப்பது போன்ற சிறுசிறு வேலைகளை செய்துவருகிறார்கள். இந்நிலையில், இந்த ரெயில் போக்குவரத்தை துண்டித்தால் ஜப்பானியர்களின் ஆதிக்கம் சீனாவுக்குள் இருக்காது என்று நினைக்கும் ஜாக்கிசான் மற்றும் அவரது நண்பர்கள், ஜப்பானியர்களின் ரெயில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் மார்கோ போலோ பாலத்தை உடைக்க திட்டம் போடுகிறார்கள். இதற்காக ஜப்பானியர்களின் ஆயுதக்கிடங்கில் இருந்து வெடிகுண்டுகளை கடத்தி, பாலத்தை உடைக்க பார்க்கிறார்கள்.

இதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
ஜாக்கிசான் இந்த வயதிலும் இளமை துள்ளலுடன் சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். ஜாக்கிசான் ரசிகர்களுக்கு ஏற்றவாறு காமெடி, ஆக்ஷன் என இரண்டிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக, வெடிகுண்டை திருடச் செல்லும் காட்சிகளில் எதிரிகளை தனது சக கூட்டாளியுடன் சேர்ந்து சண்டையிடும் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.
ஜாக்கிசானின் நண்பர்களாக வருபவர்களும் மற்றும் ஜப்பானியர்களாக வருபவர்களும் கதைக்கேற்றபடியும், அவர்களின் கதாபாத்திரத்திற்கேற்றவாறும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் கதைக்களம் என்று சொல்லும்படியாக எதுவும் இல்லை. இரண்டு மூன்று செட்டுகளை மட்டுமே போட்டு அதற்குள்ளாகவே படமாக்கியிருக்கிறார்கள்.

மேலும், பெரும்பாலான காட்சிகளில் ரெயிலேயே அதிகமாக காட்டியிருக்கிறார்கள். இதனால், படத்தில் முக்கால்வாசி நேரம் நம் காதுக்குள் நீராவி எஞ்சினின் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆக்ஷனிலும் பெரிதாக ஜாக்கிசானுக்கு ஏற்றவாறு அமைக்காதது வருத்தமளிக்கிறது.
படத்தின் ஆரம்பம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதி கொஞ்சம் விறுவிறுப்படைகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சண்டைக் காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘ரெயில் ரோடு டைகர்ஸ்’ வேகமில்லை.

அஜித் ரசிகர்களின் வரவேற்பால் சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்று மிரண்டுபோயுள்ளது. அது ஏன் என்பதை கீழே பார்ப்போம்.
வருகிற மே 1-ந் தேதி அஜித்துக்கு பிறந்தநாள். ஆனால், அவரது ரசிகர்கள் 1 மாதத்திற்கு முன்பே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அஜித்தின் பிறந்தநாளுக்கு போஸ்டர்கள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அஜித் பிறந்தநாளையொட்டி சென்னை ரோகிணி திரையரங்கில் அஜித் நடித்த 4 படங்களை 4 காட்சிகளாக திரையிட முடிவு செய்துள்ளனர். ஆனால், அந்த 4 படங்கள் என்னவென்பதை திரையரங்கம் மிகவும் சஸ்பென்சாக வைத்துள்ளது.

அப்படியிருந்தும், இந்த 4 காட்சிகளும் மூன்று நாட்களுக்கு ஹவுஸ் புல் ஆகிவிட்டதாம். இதனால், மிரண்டு போன திரையரங்கம் மேலும் இன்னொரு காட்சிக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருக்கலாம்.

`முண்டாசுப்பட்டி' ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலா பால் இணைந்து நடக்க உள்ள படத்திற்கு அசத்தலான தலைப்பை படக்குழு கைப்பற்றியுள்ளது. அது என்ன தலைப்பு என்பதை கீழே பார்ப்போம்.
விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `மாவீரன் கிட்டு'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, `கதாநாயகன்', `சின்ட்ரல்லா', `பொன் ஒன்று கண்டேன்', `சிலுக்குவார்பட்டி சிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அதேநேரத்தில் `முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் விரைவில் நடிக்க உள்ளார். `முண்டாசுப்பட்டி' படத்தில் இணைந்த அதே கூட்டணி இப்படத்திலும் இணைய உள்ளது. இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார். சஞ்சய், காளிவெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு `மின்மிணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. விஷ்ணு விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.

இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எந்த காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பதை கீழே பார்ப்போம்.
இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்தார். இதற்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தன. மிகவும் ஆபாசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இது போன்ற விளம்பரங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதில் அளித்த சன்னி லியோன், “ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.