என் மலர்
செய்திகள்

தாதா சாகேப் விருது பெறும் கே.விஸ்வநாத்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
தாதா சாகேப் விருது பெறும் இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
2016-ம் ஆண்டுக்கான 'தாதா சாஹேப் பால்கே' விருது இந்தியாவின் மிகமுக்கியமான இயக்குநர்களில் ஒருவரும் நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கமல்ஹாசன்-இளையராஜா கூட்டணியில் உருவான 'சலங்கை ஒலி' உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பெருமைக்குரியவர்.
இந்நிலையில், தாதா சாகேப் விருது பெறும் இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில், விஸ்வநாத்தின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் பால்கே விருது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மக்களுக்கு முதன்முதலில் சினிமாவை அறிமுகப்படுத்தியவர் தாதா சாஹேப் பால்கே. இவர், `இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். இந்திய சினிமாவில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் இவர் பெயரிலேயே விருது வழங்கி கெளரவிக்கிறது மத்திய அரசு.
Next Story






