என் மலர்
சக்திவேல் வாசு நடித்து வரும் `7 நாட்கள்' படத்தில் அவருடன் இணைந்து நிகிஷா பட்டேல் நடித்து வருகிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகி நிகிஷா படேல். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல், `புலி' என்ற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார்.
`தலைவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர், `என்னமோ ஏதோ' நகுல் உடன் `நாரதன்' படங்களில் நடித்தார். இப்போது, இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் வாசுவின் `7 நாட்கள்' படத்தில் நடித்து வருகிறார். மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கி வரும் இப்படத்தில் பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமத்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். மதன் கார்க்கியின் வரிகளில், டி.ராஜேந்தர் பாடிய பாடலான 'புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு' என்ற பாடல் பிப்ரவரியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இது தவிர தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் `குண்டூர் டாக்கீஸ் 2', `100 டிகிரி செல்சியஸ்' படங்களிலும் நிகிஷா பட்டேல் நடித்து வருகிறார். வேறு சில படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன.

`பாகுபலி 2' படம் ஐமேக்ஸ் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் `பாகுபலி 2'. வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

மேலும் இப்படம் ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியாகும் என்று பாகுபலி படக்குழு அறிவித்திருந்தது. தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் (6K) வீடியோ வடிவில் வெளியாவது இதுவே முதல்முறை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மாறாக தெலுங்கு மற்றும் இந்தியில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
`பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக `பாகுபலி' படத்தின் தொடர்ச்சியாக `பாகுபலி 2' வெளியாக இருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் - பாலிவுட் நடிகை சகரிகா கட்ஜ்க்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. நேற்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சகரிகா கட்ஜ். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மையமாக வைத்து கடந்த 2007-ல் இந்தியில் வெளியான `சக் தே இந்தியா' படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த அவர், பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
இதையடுத்து, குறுகிய இடைவெளியில் படங்களில் நடித்து வந்த அவர், மராத்தியில் ஒரு படத்திலும், குஜராத்தியில் ஒரு படத்திலும் நடித்துள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் `இரடா' என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கட்ஜீக்கும், பிரபல கிரிக்கெட் வீரரான ஜாகீர் கானுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இருவருமே சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. மேலும் பொது இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவும் வலம் வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற யுவராஜ் சிங் - ஹசல் கீச் திருமணத்தின் போதும் இருவரும் ஒன்றாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜாகீர் கான் - சகரிகா கட்ஜ் திருமண நிச்சதார்த்தம் நேற்று நடைபெற்றதாக இருவரும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை ராகவா லாரன்ஸ் தத்தெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள். ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும் போது, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும்போது அந்த குழந்தைகளே தெய்வக்குழந்தைகள் தானே..
ஸ்ரீனிவாசன், யத்ரி தம்பதிகள் பெற்றெடுத்த அந்த குழந்தைகளுக்கு லக்ஷன், லக்ஷயா, லக்ஷிகா, லக்ஷா என்று பெயர் வைத்தார்கள். லட்சங்கள் இல்லையென்றாலும் பெயரிலாவது இருக்கட்டும் என்று பெயர் வைத்தார்களோ என்னவோ...

நான்கு குழந்தைகளையும் வளர்க்க சிரமப்படுகிற விஷயம் பத்திரிக்கையாளர் அமலன் மூலம் தெரிந்து கொண்ட லாரன்ஸ் அந்த நான்கு குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொண்டார். 3 வயதுடைய அந்த குழந்தைகளின் வளர்ப்பு, படிப்பு, எதிர்காலம் எல்லாம் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி லாரன்ஸ் தத்தெடுத்துக் கொண்டார்.
ராகவா லாரன்ஸ் ஆதரவற்றோர்களுக்கும், உடல் ஊனமுற்றோர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில்கூட தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக தனியாக அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதை செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரகனி இன்று மாலைமலர்.காம் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக உரையாடவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி 4 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.
சமூக அக்கறையுள்ள படங்களை எடுத்து, அனைவரின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சமுத்திரகனி. இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘அப்பா’ படம் அனைத்து தரப்பினராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. அவருடைய இயக்கத்தில் உருவாகியிருக்கிற ‘தொண்டன்’ படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில், சமுத்திரகனி இன்று மாலைமலர்.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக பேட்டியளிக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு மாலைமலர்.காம் பேஸ்புக் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. வாசகர்களாகிய நீங்களும் சமுத்திரகனியிடம் ஏதாவது கேள்வி கேட்கவேண்டும் என்று விருப்பப்பட்டால் மாலைமலர் பேஸ்புக் பக்கத்தில் வந்து நீங்கள் நினைக்கிற கேள்விகளை பதிவு செய்யலாம்.
அந்த கேள்விகள் சமுத்திரகனியின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரிடமிருந்து அதற்கான பதில்களை கேட்டு பெறலாம். இந்த வாய்ப்பை வாசகர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
மாலைமலர் Facebook பக்கத்திற்கு செல்ல.. https://www.facebook.com/maalaimalar/

ஒரே சம்பவத்தால் 16 பேருக்கு ஏற்படும் சிக்கலை சொல்லும் படமான ‘எய்தவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
பிரண்ட்ஸ் பெஸ்ட்டிவெல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘எய்தவன்’.
இந்த படத்தில் நாயகனாக கலையரசன், நாயகியாக சாதனா டைட்டஸ் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் நரேன், வேலா ராமசாமி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், விநோத், சவுமியா, ராதா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சி.பிரேம்குமார், இசை - பார்த்தவ் பார்கோ, எடிட்டிங் - ஐ.ஜே.அலன், கலை - எம்.லட்சுமி தேவ், பாடல்கள் - நா.முத்துகுமார், ஞானவிநோத், ஸ்டண்ட் - ராக் பிரபு, நடனம் - தினா, பாபி ஆண்டனி,
வசனம் - சக்திராஜ சேகரன், சதீஷ் சவுந்தர்.
தயாரிப்பு - எஸ்.சுதாகரன், இயக்கம் - சக்தி ராஜசேகரன்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இளைஞன் கிருஷ்ணா. ஒட்டு மொத்த குடும்பமும் தங்கையின் மேல் படிப்புக்காக சென்னைக்கு புலம் பெயர்கிறது. தங்கையின் உயர் படிப்பு கனவை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களும் அதனால் உருவாகும் பிரச்சினைகளும், கிருஷ்ணா சந்திக்கும் அரசி யல் சூழ்ச்சி களும், அதை எதிர் கொள்ள அவர் எடுக்கும் முடிவுகளுமே ‘எய்தவன்’ படத்தின் கதை.
படம் பற்றி சக்தி ராஜசேகரனிடம் கேட்ட போது...
“நகரின் முக்கிய இடத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. இதில் 16 பேர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லோரும் அந்த சம்பவத்தில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால் நாயகன், அந்த சம்பவத்துக்கான அம்பை எய்தவன் யார் என்று தேடுகிறான். கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறோம்.
காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து கமர்சியல் படமாக ‘எய்தவன்’ உருவாகி இருக்கிறது” என்றார்.

தேசிய விருது பெற நான் தகுதியற்றவன் என்றால், அந்த விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள் என்று நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
இந்தி நடிகர் அக்ஷய் குமார் ‘ருஸ்டம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச்சென்றார். அவர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை. இந்த நிலையில், அக்ஷய் குமாருக்கு தேசிய விருது அளித்தது சரியல்ல என்று பரபரப்பான விவாதம் எழுந்தது.
இதுபற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் அக்ஷய் குமாரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது, அவர் கூறியதாவது:-
ஒருவர் தேசிய விருதை பெறும்போது அவரை சுற்றிலும் விவாதம் நடப்பதை கடந்த 25 ஆண்டுகளாக நான் கேட்டு வருகிறேன். இது ஒன்றும் எனக்கு புதிது அல்ல. “அவருக்கு தேசிய விருது வழங்க கூடாது, மற்றவருக்கு வழங்கி இருக்க வேண்டும்” என்று கூறி சிலர் எப்போதும் சர்ச்சையை கிளப்புவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

நான் 26 ஆண்டுகள் கழித்து தேசிய விருது பெற்றிருக்கிறேன். இந்த விருது பெற நான் தகுதியற்றவன் என்று நீங்கள் கருதினால், அதனை திரும்ப பெற்று கொள்ளுங்கள்.
இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்தார்.
மேலும், உங்களின் சமூக தொண்டு காரணமாக வரும்காலத்தில் ‘பத்ம பூஷண்’ விருதுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, “இதுபோன்ற உயரிய விருதை பெற நாம் உன்னத சேவை செய்ய வேண்டும். அப்போது தான் அதுபோன்ற விருதுகளுக்கு நாம் தகுதிபடைத்தவர்கள் என்று பொதுமக்கள் கருதுவார்கள்” என்று அக்ஷய் குமார் பதில் அளித்தார்.
49 வயதான நடிகர் அக்ஷய் குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

`சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்திற்காக நடிகர் சிம்பு, அருண் ராஜா காமராஜ், ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். எதற்காக இணைந்தார்கள் என்பதை கீழே பார்ப்போம்.
திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகும் திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளரும், 'நடிகவேல்' எம் ஆர் ராதாவின் பேரனுமான அறிமுக இயக்குநர் ஹைக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. இப்படத்தில் ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராதாரவி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, கோவை சரளா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மயில்சாமி, தேவதர்ஷினி மற்றும் இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகிற மே 19 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தை 'ஏ ஃபார் ஆப்பிள்' நிறுவனத்தின் சார்பில் அட்லீ, 'பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்' இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக நாயகன் கமலஹாசன் படத்தின் பாடல்களை வெளியிட்டார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இதில் சிறப்பு என்னவென்றால், இப்படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களை முன்னணி நடிகர்கள் பாடிக் கொடுத்துள்ளனர். நடிகர் சிம்பு, ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத், பிரேம்ஜி அமரன், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பாடியுள்ளனர். மேலும் இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனும் ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டை வீராங்கணை மேரிகோம் வாழ்க்கை வரலாற்றை தொடர்ந்து, இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாற்றில் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. கொலம்பியா விண்கலத்தில் 7 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளிக்கு பயணித்த கல்பனா சாவ்லா அங்கு 31 நாட்கள், 14 மணிநேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். பின்னர் தனது ஆராய்ச்சிகளை முடித்த பின்னர் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் கடந்த 2003ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பாலிவுட் இயக்குநர் பிரியா மிஷ்ரா படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கான கதையையும் எழுதி முடித்துள்ளார். இதுகுறித்து பிரியா மிஷ்ரா கூறும்போது,
கடந்த ஏழு வருடங்களாக கல்பனா சாவ்லாவின் வாழ்க்கையை பற்றிய கதையை எடுக்க முய்றசி செய்து வருகிறேன். தற்போது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. இப்படத்தை உலக தரத்தில் பிரம்மாண்டமாக எடுக்க உள்ளதாக கூறினார். மேலும் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கல்பனா சாவ்லா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாகவும் கூறினார். இதற்கு முன்னதாக பிரியங்கா, பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான `மேரி கோம்' வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மேரி கோமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரியங்கா நடிப்பில் ஹாலிவுட்டில் தயாராகி உள்ள `பே வாட்ச்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!

எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்க முடியாது என்று ஊரின் பிரபல ஜோதிடர்கள் சொன்னதும், நொந்து போனார் இளையராஜா. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் ஜோதிடர்களிடம் `வார்த்தைப்போர்' செய்தார்.
அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
நான் எட்டாவதை தாண்டமாட்டேன் என்று என் ஜாதகத்தை கணித்து ஜோதிடர்கள் சொன்னதும், அவர்கள் சொன்னதில் நம்பிக்கை ஏற்படாமல் "சரியாக பாருங்கள். என் ஜாதகத்தில் அப்படியா இருக்கிறது?'' என்று தாஜா செய்து கேட்டேன்.
ஆனால் ஜோதிடர்களோ என்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், "உனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பே இல்லை'' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.
எனக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களிடம் வாதம் செய்யத் தொடங்கினேன். "உங்களுக்கு சிலப்பதிகாரத்தில் வரும் இளங்கோவடிகளைத் தெரியுமா? அவர் சேரன் செங்குட்டுவனுக்கு இளையவர். `மூத்தவன் இருக்க இளையவனுக்குத்தான் பட்டம் சூட்டப்படும்' என்று ஜோதிடம் சொன்னவர்களிடம் "உங்கள் ஜோதிடத்தை இப்போதே பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்றவர், அந்த நிமிடத்திலேயே துறவி ஆகிவிட்டார். அவர் துறவி ஆனதால், சேரன் செங்குட்டுவனுக்கே பட்டம் சூட்டப்பட்டது. அதேபோல் உங்கள் ஜோதிடத்தை நானும் பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்று சவால் விடுகிற தொனியில் பேசினேன்.
எட்டாம் வகுப்பில் முழுப் பரீட்சை எழுதுவதற்கு முன்னதாக ஒரு சின்ன சோதனை. பரீட்சையை உத்தமபாளையத்தில் எழுதவேண்டும் என்றார்கள். அங்கே ஒரு ஆஸ்டலில் தங்கி மூன்று நாட்கள் பரீட்சை எழுதவேண்டும். உணவிற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டவேண்டியிருந்தது. பணம் கட்ட வேண்டிய கடைசி நாளும் வந்தது. ஆனால் அம்மாவால் பணம் புரட்ட முடியவில்லை.
இந்த இக்கட்டான நேரத்தில், அக்கா கமலம்தான் அவரது தாலியை விற்று பணம் கொடுத்தார்; அதுவும் அத்தானுக்கு (அக்காவின் கணவர்) தெரியாமல்.
அக்கா தாலியை விற்றது கூட எனக்கு அந்த நேரத்தில் பெரிதாகத் தெரியவில்லை. ஜோதிடத்தை பொய்யாக்கப் போகிறோம் என்பதுதான் பெரிதாகத் தெரிந்தது.
இப்போது நினைத்தால் அக்காவின் அன்பும், உயர்ந்த பண்பும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. உயர்ந்த பண்புகள் கல்வியால் மட்டுமே வருவதில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அக்காவின் அன்றைய தியாகத்துக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்? எதைக் கொடுத்தாலும் ஈடாக முடியாத அந்த அன்பை வெறும் வார்த்தைகளில் விவரித்து விடமுடியாதுதான்.''
- இப்படியாக எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்த இளையராஜாவுக்கு ஒன்பதாவது வகுப்பில் சேர முடியாத சோதனை ஏற்பட்டது.
அதுபற்றி அவரே கூறுகிறார்:
"ஒன்பதாம் வகுப்பில் சேர, தேவாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு போனேன். பள்ளியில் சேரவேண்டுமானால் `ஸ்பெஷல் பீஸ்' 25 ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தும் அந்த நேரத்தில் எதுவும்
நடக்கவில்லை.பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது. ஒரு மாதம் ஆனது. பணம் கிடைக்கவில்லை. இரண்டு மாதமானது. பணம் புரட்ட முடியாத அம்மாவின் முகம் எனக்குள்ளும் கவலை ஏற்படுத்தியது. இதே நிலை மூன்றாவது மாதமும் நீடித்தபோது, "சரி! இந்த வருடம் நாம் ஸ்கூலுக்குப் போக, அந்த ஸ்கூல் விரும்பவில்லை போலும்'' என்று நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்தபோதே, ஜோதிடர்கள் சொன்னதும் நினைவுக்கு வர, "இனி அந்த ஜோதிடர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்?'' என்றும் வருத்தப்படத் தொடங்கினேன்.
இந்த நேரத்தில் அத்தானும் அக்காளும் வைகை அணையில் இருந்தார்கள். மிலிட்டரியில் இருந்த அத்தான் அங்கிருந்து வந்து வைகை அணைப் பகுதியில் டிரைவராக இருந்தார்.
அக்கா நினைப்பு வந்ததும் ஐடியா வந்து விட்டது. வைகை அணையில் மட்டும் எனக்கொரு வேலை கிடைத்தால் ஒரு வருடம் வேலை பார்த்து, ஒரு வருட சம்பளத்தை வைத்துக்கொண்டு அடுத்த வருடமாவது படிப்பைத் தொடரலாம் என்று நினைத்தேன்.
அம்மாவிடம் ஓடிவந்தேன். விஷயத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி, "நான் வைகை அணை போய் அத்தானைப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டேன்.
அம்மாவுக்கும் என் ஆர்வம் புரிந்தது. படிக்க ஆசைப்படும் பிள்ளையை அதற்கொரு புதிய வழி கிடைக்கும்போது எந்தத் தாய்தான் தடுப்பார்? "போய்வா மகனே'' என்றார், அம்மா.
என் வாழ்வைத்தேடி முதல் பயணம். வைகை அணை எப்படி இருக்குமோ என்ற கற்பனையுடன் புறப்பட்டேன். அத்தான் மூலமாக வேலை கிடைப்பதில் சிரமம் எதுவும் இல்லை.
வைகை அணையின் கரையிலும், கீழே பூங்காவிற்கு மேலுள்ள புல்வெளிகளிலும் தண்ணீர்க் குழாயை பிடித்தபடி தண்ணீர் ஊற்ற வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ரூபாய் சம்பளம்! வாரா வாரம் சம்பளமாக ஏழு ரூபாய் கொடுத்து விடுவார்கள் என்றார்கள்.
அரை டிராயர், அரைக்கை சட்டை, குள்ளமான கறுப்பு உருவம். தண்ணீர் பாய்ச்சும்போது சும்மா இருக்க முடியாது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டுப்பாடியபடியே தண்ணீர் பாய்ச்சுவேன்.
பொதுவாகவே சத்தம் போட்டுப் பாடுவது எனக்கும் பாஸ்கருக்கும் பழக்கம். அக்கம் பக்கம் போவோர், வருவோர் என்னை வேடிக்கை பார்த்தார்கள். நானோ விடாப்பிடியாக பாடியபடியே வேலையைத் தொடர்ந்தேன்.
ஒரு வாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆபீசுக்குப் போய் சம்பளம் வாங்கினேன்.
ஏழு புத்தம் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள். மணக்க, மணக்க! அடேயப்பா, வான மண்டலத்தில் சஞ்சரித்தேன். பறந்தேன் என்று கூட சொல்லலாம்.
ஏழு ரூபாய் கையில் கிடைத்த அந்த நொடியில் ஏற்பட்ட ஆனந்தத்தை இன்றுவரை வேறு எந்தப் பணமும் எனக்குத் தரவில்லை.
இப்படி 25 நாட்கள் வேலை செய்தால் 25 ரூபாய் வந்துவிடும். அப்புறமாய் போய் ஸ்கூலில் சேர்ந்து விடலாமா என்று கூட யோசித்தேன்.
ஆனால் 4 மாத பாடம் நடந்திருக்குமே, என்ன செய்வது?
சரி! ஒரேயடியாக அடுத்த வருடம் படிப்பை தொடரலாம். எனக்குள் ஒரு முடிவுக்கு வந்து வேலையைத் தொடர்ந்தேன்.
இப்படிச் சொன்ன இளையராஜா, ஒருநாள் தண்ணீர் பாய்ச்சும் நேரத்தில் பாடிக்கொண்டே பணியைத் தொடர அப்போது அந்த வழியாக வந்த வைகை அணையின் சீப் என்ஜினீயர் காதுக்கும் அந்தப் பாட்டு எட்டியது.

இந்திய சினிமாவிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக 2016-ம் ஆண்டின் 'தாதாசாகேப் பால்கே' விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய சினிமவின் தந்தை என்றழைக்கப்படும் மறைந்த இயக்குநர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
2016 ஆண்டுக்கான 'தாதாசாகேப் பால்கே' விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதை ஜனாதிபதி வழங்க இருக்கிறார். இந்த விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

மறைந்த இயக்குநர் தாதாசாகேப் பால்கே
இந்திய திரையுலகின் உயரிய விருதை வென்றுள்ள கே.விஸ்வநாத் ஏற்கனவே பல விருதுகளை குவித்தவர். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகிய படங்களை இயக்கியவர். தனுஷ் நடிப்பில் வெளியான 'யாரடி நீ மோகினி' மற்றும் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ராஜபாட்டை’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.விஸ்வநாத் நடித்துள்ளார்.
சமீபத்தில் அமைச்சர் ஒருவர் அறிமுகப்படுத்திய தெர்மாகோல் திட்டத்தை கிண்டலடித்து கமல், ராதாரவி ஆகியோர் பேசியுள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
சமீபத்தில் அமைச்சர் ஒருவர் ஆற்று நீர் ஆவியாவதை தடுப்பதற்கு தெர்மாகோல் வைத்து ஆற்று நீரை மூடியதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக போய்க் கொண்டிருந்தது. அந்த திட்டத்தை கிண்டல் செய்து ஏகப்பட்ட மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடந்த ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் இந்த தெர்மாகோல் விஷயம் பேசப்பட்டது. இப்படத்தின் ஆடியோவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். பின்னர், அவர் பேசும்போது, இப்படத்தின் டிரைலரை நான் ஏற்கெனவே பார்த்துவிட்டேன் என்பதில் பெருமை.

இன்னும் ஒரு பெருமை என்னவென்றால், எனக்கு ரொம்பவும் தெரிந்தவர்கள், என்னுடன் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் இந்த படத்துல இருக்கிறார்கள் என்பதுதான். இந்த டிரைலரை பார்க்கும்போதே இப்படத்தில் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் என்று சொல்லாம். இப்படம் ஆவிகளை பற்றிய படம். ஆனால் இந்த ஆவிக்கு தெர்மாகோல் தேவையில்லை என்று பேசினார். கமலின் இந்த பேச்சால் அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.
அவரைத் தொடர்ந்து ராதாரவி பேசும்போது, கமல் சமீபகாலமாக அரசியல் பேசி வருகிறார். மற்றவர்களைப்போல் நான் டுவிட்டரில் அரசியல் பேசுபவன் அல்ல, நேரடியாகவே பேசுபவன். சமீபத்தில் அமைச்சர் ஒருவர் தெர்மாகோலை வைத்து ஆற்றை மூடி ஆவி வெளியேறாமல் தடுக்க முயன்றார். அம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தெர்மாகோலை அவர்மீது போட்டிருந்தால் அவருடைய ஆவி வெளியேறாமல் இருந்திருக்குமே? என்று நையாண்டியாக பேசினார்.
இப்படியாக ஆடியோ வெளியீட்டில் தெர்மாகோல் விஷயத்தை நடிகர்கள் போட்டி போட்டு பேசியது அங்கிருந்த ரசிகர்களை மேலும் கலகலப்பாக்கியது.