என் மலர்
நடிகை ஒருவர் தனது கணவரையும், முன்னணி நடிகர்களையும் பொதுமேடையில் கலாய்த்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
ஜோதிமயமான நடிகை தற்போது தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகிவிட்டார். அவரது குடும்பத்தில் அவருக்கு கொடுத்திருக்கும் சுதந்திரம், மேடைகளிலும் அவரை சுதந்திரமாக பேசவிட்டிருக்கிறது என்றுதான் கோலிவுட் வட்டாரத்தில் பெரிய பேச்சாக இருந்து வருகிறது.
அப்படித்தான் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடிகை சகட்டுமேனிக்கு நடிகர்களையும், இயக்குனர்களையும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். அதாவது, ஒரு பெரிய ஹீரோ படத்துக்கு எதுக்கு மூன்று, நான்கு ஹீரோயின்கள் போடுகிறார்கள். ஒரேயொரு ஹீரோயினை நடிக்கவைத்தால் போதாதா? என்று அவர் பேசிய பேச்சு, அரங்கம் மட்டுமில்லாது திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில்கூட இந்த நடிகை, முண்ணனி நடிகரின் படத்தில் நடிக்க கமிட்டாகி, பின்னர் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அந்த படத்தில் அந்த நடிகருக்கு ஏற்கெனவே இரண்டு ஹீரோயின்கள் இருந்தனர். மூன்றாவதாக இவரும் கமிட்டாகி, அடுத்த சில நாட்களிலேயே அந்த படத்திலிருந்து வெளிவந்தது அனைவருக்கும் பெரிய கேள்வியை எழுப்பியது.
ஒருவேளை நடிகையின் இந்த எண்ணம்தான் அந்த படத்திலிருந்து இவர் விலக காரணமாக இருக்குமோ? என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இருப்பினும், நடிகை தற்போது சொல்லியிருப்பதும் சரிதானே? என்பதுபோலவும் பேசிக்கொண்டு வருகிறார்களாம். இப்படி பேசும் நடிகையின் கணவர்கூட இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் சேர்ந்து படம் பண்ணியிருக்கிறார்? என்பதை அவர் நினைவில் வந்திருக்காது போல.

இன்று சென்னையில் நடைபெற்ற ‘மகளிர் மட்டும்’ ஆடியோ விழாவில் ஜோதிகா இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது, பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் கூறியதாவது: உங்களுடைய படங்களில் பெண்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள். அம்மா, தங்கச்சி, மனைவி என உங்கள் வீட்டில் இருப்பவர்கள் மாதிரியான கதாபாத்திரங்களை படங்களின் நாயகிக்கு கொடுங்கள். நாயகர்களுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நாயகர்கள் பேசும் வசனங்கள், ஸ்டைல் என எல்லாவற்றையும் தொடர்வார்கள். சினிமாவில் நடப்பவை இளைஞர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்று நாயகிக்கு உடைகள் கொடுக்க முடியாது என்பது தெரியும். தயவு செய்து கொஞ்சம் அறிவுபூர்வமான கதாபாத்திரங்கள் கொடுங்கள். நகைச்சுவை நடிகர் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்காதீர்கள். மிக கேவலமான அறிமுக காட்சியை கொடுக்காதீர்கள். படங்களில் நாயகி ஒருவர் நாயகன் பின்னால் 'ஐ லவ் யூ' என்று சொல்லிக் கொண்டே திரிவதை நிறுத்துங்கள்.
ஒரு நாயகனுக்கு 4 நாயகிகள் எதற்கு? ஒரு நாயகி போதுமே. நான்கு நாயகிகள் வைத்தீர்கள் என்றால் இளைஞர்கள் நாமும் 4 காதலிகள் வைத்துக் கொள்ளலாம் என எண்ணுவார்கள். இந்தியாவில் இருக்கும் பெண்களுக்காக சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம் என்றார்.

ஆர்.கே.சுரேஷ் ஒரு படத்தின் கதையை கேட்டவுடனே உடனே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்துக்குப் பின் ஒரு நடிகராக அழுத்தமான அடையாளம் பெற்றார். அதன்பிறகு தொடர்ச்சியான படவாய்ப்புகள் வரவே வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார். ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இப்போது தனி நாயகனாக 'தனிமுகம்', 'பில்லா பாண்டி' போன்ற படங்களிலும் வேறு நாயகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
ஓய்வில்லாமல் நடித்து வரும் அவரிடம் ஓர் இயக்குநர் கதை சொல்ல முன் வந்தபோது தேதிகள் இல்லை என்று ஆரம்பத்தில் தவிர்த்திருக்கிறார். கதையைக் கேளுங்கள் என்று இயக்குநர் கேட்டபோது அரை மனதுடன் கேட்க உட்கார்ந்தவர், கதையைக் கேட்டு முடித்தவுடன் எப்போது படப்பிடிப்புக்குப் போகலாம் என்றிருக்கிறார். அது மட்டுமல்ல தனது தேதிகளைச் சரிசெய்து கொடுத்துள்ளார். விரைவில் படம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்தப் படம்தான் 'வேட்டை நாய்'. அப்படிக் கதை சொல்லி ஆர்.கே. சுரேஷை கவர்ந்திருப்பவர் தான் எஸ்.ஜெய்சங்கர். இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி இயக்கிய 'மன்னாரு' படம் பாலுமகேந்திரா போன்ற படைப்பாளிகளால் பாராட்டப்பட்டது. 'வேட்டை நாய் 'இவரது இரண்டாவது படம்.
நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி, 'என் உயிர்த் தோழன்' ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.

படம் பற்றி இயக்குநர் எஸ்.ஜெய்சங்கர் பேசும்போது "படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன் என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார்? என்று உணர வைக்கிறாள். இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.? அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை.
இந்த நாயகன் பாத்திரத்தில் ஆர்.கே. சுரேஷ் சாரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படியே அவரிடம் கதை சொன்னேன். பிடித்து விட்டது. இதோ அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம்" என்கிறார். மலையும், மலை சார்ந்த கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

வெள்ளித் திரையில் பிசியாக நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். அவர் தற்போது `சபாஷ் நாயுடு' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர, சிக்கலில் இருந்த `விஸ்வரூபம்' படத்தின் இரண்டாவது பாகத்தை வெளியிடவும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய முயற்சி ஒன்றையும் மேற்கொள்ள இருக்கிறார். இந்தியில் பிரபலமான "பிக் பாஸ்" என்ற நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடத்தி வருகிறார். அந்த "பிக் பாஸ்" நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை கமல் தொகுத்து வழங்க உள்ளதாக அவரே அதனை உறுதிப்படுத்தி உள்ளார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அதனை கமல் ஏற்றுக்கொண்டுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

இதுகுறித்து கமல் தெரிவித்ததாவது,
ஒரு பொழுதுபோக்காளராக பல்வேறு முயற்சிகளை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த தொலைக்காட்சி தொடரையோ, நிகழ்ச்சியையோ நான் தொகுத்தளிக்கவில்லை. மேலும் எந்த வித ரியாலிட்டி ஷோவிலும் நான் கலந்து கொள்ளவில்லை. எந்த நிகழ்ச்சி பற்றியும் எனக்கு அனுபவம் இல்லாததால், பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறினார்.

அட்லி ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
இயக்குனர் அட்லி தொடங்கியுள்ள ‘ஏ பார் ஆப்பிள்’ என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் முதன்முதலாக உருவாகியுள்ள ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிடவுள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, கோவை சரளா, சூரி, தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஐக் என்பவர் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சங்கிலி புங்கிலி கதவத்தொற ஆடியோ ரிலீசுக்கு முன்னதாக அட்லி திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் தன்னுடைய ‘ஏ பார் ஆப்பிள்’ நிறுவனம் தயாரிக்கும் மேலும் 2 படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, ஒரு படத்தை அட்லியின் நண்பரும், எழுத்தாளர் பாலகுமாரனின் மகனுமான சூர்யா பாலகுமாரன் இயக்குகிறார். இப்படத்தில் நிவின்பாலி ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு படத்தை அட்லியின் உதவியாளர் அசோக் இயக்கவிருக்கிறார். இப்படங்களின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஜுன் மாதத்திற்குள் அவர்களை தேர்வு செய்துவிட்டு, அந்த மாதத்திலேயே படப்பிடிப்பையும் தொடங்கவிருக்கிறார்களாம்.
அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படம் மே 19-ந் தேதி வெளியாகவிருக்கிறது. அட்லி இயக்கிவரும் விஜய்-61 தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் - அஜித்துடன் டூயட் பாடுவதை கனவாக வைத்திருப்பதாக விஜய் சேதுபதியின் தங்கை கூறியுள்ளார். இதுகுறித்த விரிவாக தகவலை கீழே பார்ப்போம்.
‘தர்மதுரை’, ‘றெக்க’ படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இப்போது ‘திருப்பதிசாமி குடும்பம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
“ ‘திருப்பதிசாமி குடும்பம்’ படத்தில் குடும்ப பாங்கான நாயகியாக நடிக்கிறேன். அடுத்து நான் நடிக்கும் புதிய படத்தில் நாகரீக பெண்ணாக நடிக்கிறேன். முகம் சுளிக்கும் வகையில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். சிம்ரன், ஜோதிகா போன்று அழகான கவர்ச்சியில் நடிப்பேன்.

எனது ரோல் மாடல் சமந்தா. அவர் முதல் படத்தில் இருந்தே சவாலான வேடங்களில் நடித்து வருகிறார். எனவே, சமந்தா போன்று ஒரு நடிகையாக வரவேண்டும் என்பது என் ஆசை. எனக்கு பிடித்த ஹீரோ விஜய் தான். அவர் நடந்து வந்தால் ஒரு மாஸாக இருக்கும். அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறேன். அவருடன் கண்டிப்பாக டூயட் பாட வேண்டும். அதுபோல், அஜித், சூர்யாவுடன் டூயட் பாடுவதும் எனது சினிமா கனவு.
விஜய்சேதுபதியின் ‘தர்மதுரை’ படத்தில் தோழியாக நடித்தேன். ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்தேன். ‘கவண்’ படத்தில் அவரது டீமில் ஒருத்தியாக நடித்தேன். அவருடன் நடித்த போது கேமராவை எப்படி பார்க்க வேண்டும், எப்படி நடிக்க வேண்டும், எப்படி வசனம் பேச வேண்டும் என்று கற்றுக் கொடுத் திருக்கிறார். அவரது மனைவியும் என்னை உற்சாகப் படுத்துவார். எனவே, அவரது குடும்பத் துக்கே நான் நன்றிக் கடன்பட்டு இருக்கிறேன். விஜய்சேதுபதி யுடனும் ஜோடி சேர்ந்து நடிக்க முயற்சி செய்து வருகிறேன். அதுவும் விரைவில் கைகூடும் என்று நம்புகிறேன்” என்றார்.

`ராவணன்' படத்திற்கு பிறகு விக்ரம் வில்லனாக பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
தமிழில் ‘கனா கண்டேன்’ படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனவர் பிரித்திவிராஜ். அதன் பிறகு ஹீரோ ஆனார். ‘காவிய தலைவன்’ படத்தில் சித்தார்த்துடன் இணைந்தார். இதிலும் வில்லனாக நடித்தார்.
சமீபத்தில் இந்தியில் வெளியான ‘நான் சபானா’ படத்திலும் அதிரடி வில்லனாக நடித்தார். தொடர்ந்து மலையாள படங்களில் நாயகனாக நடித்து வரும் பிரித்திவிராஜ் 2 ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு இடைவெளி விட்டு இருந்தார்.

இப்போது, கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, ‘ராவணன்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த பிரித்திவிராஜ் இப்போது அவருடன் மோதும் அதிரடி வில்லனாக நடிக்க இருக்கிறார்.

`ஜோக்கர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நாயகி ரம்யா பாண்டியனை நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி பாராட்டியுள்ளார்.
தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் ராஜு முருகன் இயக்கத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அடுத்து தாமிரா இயக்கும் ‘ஆண் தேவதை’ படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்திருக்கிறார். இதுபற்றி ரம்யாபாண்டியனிடம் கேட்ட போது...
`ஜோக்கர்’ படத்தை விட இதில் வித்தியாசமான வேடம். முதல் படத்தில் அதிகமாக பேசவில்லை. இதில் நிறைய வசனம் பேசி நடித்திருக்கிறேன். இந்த படத்தில் என்னை வித்தியாசமான கோணத்தில் பார்க்கலாம். ‘ஜோக்கர்’ படத்தை போலவே ‘ஆண் தேவதை’ படத்திலும் எனக்கு நானே டப்பிங் பேசுகிறேன்.

இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து விட்டு ‘பயங்கரமா பண்றியேம்மா’ என்று சமுத்திரகனி சார் பாராட்டினார். ‘ஜோக்கர்’ படத்தில் என் நடிப்பை பார்த்து இந்த படத்துக்கு என்னை பரிந்துரை செய்ததும் அவர்தான். இந்த படத்தில் இயக்குனர் தாமிரா, யாராவது நன்றாக நடித்தால் அவர்களை பாராட்டி சிறிதாக பணப் பரிசு கொடுப்பார். ஒரு சீனில் நான் நன்றாக நடித்ததை பாராட்டி எனக்கும் பணப் பரிசு கொடுத்தார். அது எனக்கு விருது கிடைத்தது போன்ற திருப்தியை தந்தது.
அடுத்து எந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிடவில்லை. எதைப்பற்றியும் முடிவு செய்யாமல் கதை கேட்கிறேன். கதையும் எனது பாத்திரமும் பிடித்து இருந்தால் அதில் நடிப்பேன்” என்றார்.

‘மிஜா’, ‘கிடாரி’, ‘குற்றம் 23’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுஜா வரூணி, ஆடை இல்லாமல் நடிக்கும் துணிச்சல் இருக்கிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்த அவர் அளித்த பேட்டியை கீழே பார்ப்போம்.
‘மிஜா’, ‘கிடாரி’, ‘குற்றம் 23’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சுஜாவரூணி.
“ எனக்கு வாய்ப்பளிப்பதற்காக என்னைத் தேடி வரும் இயக்குனரிடம் முதலில் நான் திறந்த மனதுடன், கதையை கேட்கிறேன். ஒரு காட்சியில் வந்தாலும் ‘நச்’ சென்று ரசிகர்களின் மனசில் நிற்க வேண்டும். அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை.
இயக்குநர்கள் பாலா, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களில் சிறிய கேரக்டர்களில் நடிப்பதற்கு விரும்புகிறேன். திரைக்கதையின் உணர்வோட்டத்திற்கேற்ப ஆடையில்லாமல் நடிப்பதற்கான துணிச்சலும் இருக்கிறது. கவர்ச்சிக்காகவே செயற்கையாக திணிக்கப்படும் காட்சிகளில் ஆபாசமான ஆடையணிந்து நடிக்கமாட்டேன் என்று சொல்லும் துணிவும் இருக்கிறது.

ஒரேயொரு பாடல் காட்சியில் தோன்றுவதில்லை எதிர்காலத்திலும் இந்த முடிவில் நான் உறுதியாக இருப்பேன்.
தற்போது, அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற படத்திலும், கதிர் நடிக்கும் ‘சத்ரு ’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். இதில் சத்ரு படத்தில் ஒரு கேங் ஸ்டாராக நடித்திருக்கிறேன். சமுத்திரகனி நடிக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். அடுத்த மாதம் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் ‘அட்சயன்ஸ்’ என்ற படத்தில் ‘பஞ்சமி’ என்ற தமிழ் பேசும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்”.

`பாகுபலி 2' படத்திற்காக சென்னையின் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்று புதிய தொழில்நுட்பத்துடன் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. அது எந்த திரையரங்கம் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
சென்னையில் உள்ள பிரபல "காசி திரையரங்கம்" தல அஜித்தின் `விவேகம்' படத்திற்காக புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அதேபோல் `பாகுபலி 2' படத்திற்காக சென்னையின் உள்ள பிரபல "ஏ.ஜி.எஸ் திரையரங்கம்" அட்மோஸ் மற்றும் 4 கே (4K) தொழில்நுட்பத்துடன் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. சென்னை வில்லிவாக்கம் மற்றும் நாவலூரில் உள்ள திரையரங்குகளில் இந்த தொழில்நுட்பங்கள் புதிதாக இணைக்கப்படுகிறது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள `பாகுபலி 2' வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் `பாகுபலி-2' படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக `பாகுபலி' படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி-2 வெளியாக இருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 1750 திரையரங்குகளில் ரிலீசாக உள்ள பாகுபலி 2, அமெரிக்காவில் மட்டும் 750 திரைகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜாராஜன் வாங்கி உள்ளார்.
தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் (6K) வீடியோ வடிவில் வருவது இதுவே முதல்முறை. இந்நிலையில், `பாகுபலி 2' படத்திற்காக "ஏ.ஜி.எஸ் திரையரங்கம்" அட்மோஸ் மற்றும் 4K வீடியோ வடிவில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

துபாயின் முக்கிய இடங்களில் பிரம்மாண்டமாக `அரபு தாக்கு' என்ற படம் படமாக்கப்பட உள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
துபாயை கதைகளமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் `அரபு தாக்கு'. இப்படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலைத் தேடி துபாய்க்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் கஷ்டத்தையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் சொல்லவிருக்கும் படம். அரபு நாடான துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் முதல் படம் இது தான்.
இயக்குநர் பரதன் இயக்கிய `அதிதி' என்ற படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பெர்குஸார் கொரல் (Berguzar Korel) என்ற தமிழ் தெரியாத அரபு நடிகை கதையின் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். படத்தில் தம்பி ராமைய்யா வித்தியாசமான காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன் ரவி மரியாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது.

அதேபோல் துபாயின் அடையாளமான புர்ஜ் கலிபாவை வித்தியாசமான கோணத்திலும், உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடங்கள் மிகுந்து காணப்படும் துபாய் ஷேக் சாயீத் சாலையிலும் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளதாக இயக்குநர் தெரிவித்தார். மேலும் துபாயைத் தவிர்த்து ஷார்ஜா, அபுதாபி என ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள அனைத்து பகுதிகளிலும் படமாக்கப்பட உள்ள இப்படத்தில் தமிழ்நாட்டிலும் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம்.
துபாயில் தமிழ் மீது அளவற்ற பற்றுக்கொண்டிருக்கும் ஒரு அரபுப் பெண்ணை பார்த்து பிரமித்துப்போன நாயகன், அவளின் ஆசையை நிறைவேற்ற என்ன செய்கிறான்...? அரபு நாட்டுப் பெண்களை கண் கொண்டு பார்ப்பதற்கே கடுமையான தண்டணைகள் நடைமுறையில் இருக்க, அவை எதற்கும் கட்டுப்படாமல் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அப்பெண்ணின் ஆசைகளை நிறைவேற்ற நாயகன் எப்படி போராடுகிறான்? இறுதியில் அவளது ஆசையை நிறைவேற்றினானா இல்லையா? என்பதே கதையின் மையக்கரு. தமிழர்களே இல்லாத ஊரில் தமிழ் மட்டுமே தெரிந்த நாயகனின் அமரகாவியம் தான் இந்த `அரபு தாக்கு' என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

அரபு நாடுகளுக்கு சென்று திரும்பவர்களுக்கு `அரபு தாக்கு' என்ற சொல் பல்வேறு கோணங்களில் பரிச்சயமாகியிருக்கும். அதையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறோம். யாரும் ஊகிக்காத வகையில் படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும். படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. ரத்தீஸ் வேஹா என்ற மலையாள இசையமைப்பாளர் தனது இசையின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
ரசிகர்களை கவரும் வகையில் பெல்லி நடனம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இதில் காமெடி, ஆக்ஷன், லவ், சென்டிமெண்ட் என அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் டோட்டல் பேமிலி எண்டர்டெயினராக இப்படம் தயாராகவிருக்கிறது என்றார் இயக்குநர் பிரான்ஸிஸ். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது.

சினிமா தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கத்தை பரிசாக கொடுக்க முன்வந்த விஜய் சேதுபதிக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன் நன்றி தெரிவித்துள்ளது.
சவுத் இந்தியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ் யூனியன் சங்கம் சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் தலைவர் கே.ஆர்.செல்வராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,
"சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட மதியழகன், கண்ணன், மகாலட்சுமி ஆகியோர், சங்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தொடர்ந்து, உறுப்பினர்களின் ஊதியத்தை யூனியன் மூலம் பெறுவதற்கும், ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது, யூனியன் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் 10 சதவீதம் பிடித்தம் செய்வற்கான காரணைத்தை கேட்டு அறிந்துக்கொண்ட நீதிபதி, விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டதுடன், அந்த மூன்று உறுப்பினர்களை நீக்கியது செல்லும் என்றும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார். இதையடுத்து வழக்கம் போல, ஊழியர்களுக்கான ஊதியம் யூனியன் மூலமாலவே வழங்கப்பட்டு வருகிறது.

நீதிமன்ற வழக்கால் நடத்தப்படாமல் இருக்கும் 2016 - 2018 ஆம் ஆண்டுக்கான யூனியன் நிர்வாகிகள் தேர்தல், வழக்கு தீர்ப்புக்கு பிறகு முறைப்படி நடத்தப்படும்.
டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் சவுத் இந்தியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட் & டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தனது ஆதரவை தெரிவிக்கிறது. அதன்படி, 25-ஆம் தேதி சங்கத்தைச் சேர்ந்த டப்பிங் கலைஞர்கள் எந்தவித டப்பிங் வேலையிலும் ஈடுபட மாட்டார்கள்.
உலகாயுதா அமைப்பின் சார்பில் தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு துறையை சேர்ந்த 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கி கெளரவிக்க உள்ளனர். எங்கள் சங்கத்தின் சார்பில், எங்கள் யூனியனின் முன்னாள் தலைவர் டத்தோ ராதாரவி, ஹேமமாலினி, எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் தங்க நாணயம் பெறுகிறார்கள். அவர்களுக்கு யூனியன் வாழ்த்துக்களை தெரிவித்திக் கொள்வதோடு, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கும், 100 சவரன் தங்கத்திற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய் சேதுபதிக்கும் யூனியன் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விஜய் சேதுபதி எங்கள் யூனியனின் உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறோம்." என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, யூனியனின் செயலாளர் எம்.ராஜேந்திரன், பொருளாளர் டி.என்.பி.கதிரவன், உபதலைவர் டி.கோபி, இணைச் செயலாளர் எம்.நாராயணன், செயற்குழு உறுப்பினர்கள் கே.தேவி, கே.மாலா, டி.மோகன்குமார், எஸ்.சுப்ரமணி, பி.வெங்கடசாமி, பி.
சாந்தகுமார், யோகேஸ்வரி, மேலாளர் அம்மு ஆகியோர் உடன் இருந்தார்கள்.