என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பெண்களுக்கான படத்திலேயே பெண்களுக்கு மதிப்பில்லையா? என்று சரண்யா பொன்வண்ணன் கிண்டலுடன் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படம் ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ளார். நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

    ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் இன்று சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, நக்மா, இயக்குனர்கள் தரணி, மகிழ்திருமேனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்தில் கார்த்தி ஒரு பாடலை பாடியுள்ளார்.



    விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்களில் முக்கால்வாசி பேர், கார்த்தி பாடியிருந்த பாடலுக்காக அவரை புகழ்ந்து பேசினர். பின்னர் பேசவந்த சரண்யா பொன்வண்ணன் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

    அப்போது அவர் பேசும்போது, இங்கு பேசிய நிறைய பேர் கார்த்தி பாடிய பாடலுக்காக அவரை பாராட்டினார்கள். இந்த படத்தில் நானும், ஊர்வசி, பானுப்பிரியாவும் சேர்ந்து ஒரு பாடலை பாடியிருக்கிறோம். ஆனால், இந்த விஷயத்தை இங்கே யாரும் வெளியில் சொல்லவில்லை. பெண்களுக்கான படமாக உருவாகியுள்ள ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டிலேயே இதுபோல் பெண்களை புறக்கணிக்கலாமா? என்று கிண்டலுடன் பேசினார்.
    பிரபாஸுக்காக அவர் நடித்து வரும் அடுத்த படமான சாஹு படத்தின் டீசரை வெளியிட பாகுபலி 2 படக்குழு ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    `பாகுபலி 2' படத்தை தொடர்ந்து பிரபாஸ் `சாஹு' என்ற படத்தில் நடித்து வருகிறார். `பாகுபலி 2' வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாக உள்ள நிலையில், `சாஹு' படத்தின் டீசரை `பாகுபலி 2' படத்துடன் இணைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் `பாகுபலி 2' படத்தின் ஜுரம் அதிகமாகி உள்ள நிலையில், பிரபாஸின் ரசிகர்கள் அவருடைய அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். `பாகுபலி' படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் பிரபாஸ் இடம் பிடித்துள்ளார். `பாகுபலி' படத்தில் வரலாற்று கதையில் நடித்திருக்கும் பிரபாஸ், அடுத்ததாக `சாஹு' படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.



    இந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர் நடிகைகளும் இப்படத்தில் நடிக்க உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மெலும் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், வெளிநாடுகளில் முக்கிய இடங்களிலும் படமாக்கபட்டு வரும் `சாஹு' படத்தை இயக்குனர் சுஜீத் இயக்கி வருகிறார். வம்சி மற்றும் பிரமோத்தின் யூவீ கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

    அமிதாப் பட்டாச்சார்யாவின் பாடல் வரிகளில், சங்கர் - எஹ்சான் - லாய் இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் `சாஹு' படத்தின் டீசர் `பாகுபலி 2' படத்துடன் இணைந்து வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. பிரபாஸுக்காக `சாஹு' படத்தின் டீசரை `பாகுபலி 2' உடன் இணைந்து வெளியிட பாகுபலி படக்குழு ஒத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    சிபிராஜ் தன்னுடைய படத்திற்கு ஏற்கெனவே கமல் படதலைப்பை வைத்திருந்தார். தற்போது ரஜினி பட தலைப்பையும் கைப்பற்றியுள்ளார்.
    ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு கமல் நடிப்பில் 90-களில் வெளிவந்த ‘சத்யா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து சிபிராஜ் அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ரஜினி படத்தலைப்பான ‘ரங்கா’ என்ற பெயரை வைத்துள்ளனர்.

    இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்குகிறார். சிபிராஜுக்கு ஜோடியாக ‘கிடாரி’, ‘வெற்றிவேல்’ ஆகிய படங்களில் நடித்த நிகிலா விமல் நடிக்கிறார். ராம்ஜீவன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆனந்த் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.



    இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தை விஜய் செல்லையா என்பவர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    துல்கர் சல்மான் ஜோடியாக கண் தெரியாத நடனப் பெண்ணாக தன்ஷிகா நடித்து வருவதாக அப்படத்தின் இயக்குநர் பிஜாய் நம்பியார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த சில ஸ்வாரஸ்ய தகவல்களை கீழே பார்ப்போம்.
    தமிழில் விக்ரம் - ஜுவா கூட்டணியில் `டேவிட்' என்ற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் இந்தியில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் `சோலோ' என்ற படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் - ஆர்த்தி வெங்கடேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    ஸ்ருதி ஹரிஹரன், சாய் தமங்கர், பிரகாஷ் பேலவாடி, அன்சன் பால், அன் அகஸ்டின், சதீஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான சாய் தன்ஷிகா இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.



    தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் தன்ஷிகா `சோலோ' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக, பார்வையில்லாத நடனப் பெண்ணாக தன்ஷிகா நடிப்பதாக இயக்குநர் பிஜாய் நம்பியார் தெரிவித்துள்ளார். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் தன்ஷிகா இணைகிறார்.

    கலையரசன் - சாய் தன்ஷிகா நடித்துள்ள `உரு' படம் வருகிற மே மாதம் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர `காலக்கூத்து', `கிட்னா', `ராணி', `காத்தாடி' உள்ளிட்ட படங்களிலும் தன்ஷிகா நடித்து வருகிறார்.
    சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘இது நம்ம ஆளு’ படம் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியிருந்தார். நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெளிவந்தது. இருப்பினும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். வருகிற மே மாதத்தில் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படவுள்ளனர். தெலுங்கில் ‘சரசுடு’ என்ற பெயரில் வெளியாகிறது. தமிழில் கிடைத்த வரவேற்பு தெலுங்கிலும் கிடைக்கும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.



    இப்படத்தின் தமிழ் பதிப்பை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டது. சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    நடிப்பால் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க முடியாது என்று நடிகை சோனாக்‌ஷி சின்கா தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்கா மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிப்பின் மூலம் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க முடியாது என்பதை என் வாழ்வில் வெகு சீக்கிரமாகவே கற்றுக்கொண்டேன். என்னுடைய நடிப்பில் நான் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொள்கிறேன். அப்போது தான் பிறரை மகிழ்விக்க முடியும். வாழ்வின் இந்த அணுகுமுறை சினிமாவில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

    உங்களுக்கு என்னை பிடித்தால், சிறந்தது. பிடிக்காவிட்டால், நல்லது. இதனால் தான் என்னால் என்னுடைய சொந்த நிபந்தனைகளின்படி வேலை செய்ய முடிகிறது. எனக்கு பிடித்த வேலைகளை செய்கிறேன். யாரிடம் இருந்தும் அழுத்தங்களை பெற்று அதில் மூழ்கிவிட மாட்டேன்.



    தோல்வியை கண்டதும் கவலைப்பட்டு, துவண்டு போய்விட மாட்டேன். ஒரு படம் ‘ஹிட்’ ஆனால், நான் புகழின் உச்சியை எட்டிவிட்டதாக எண்ணி கத்திக்கூச்சலிட மாட்டேன். அதேசமயம், தோல்வி அடைந்தால் மூலையில் முடங்கி கிடக்க மாட்டேன்.

    வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் நகரட்டும். வெற்றியும், தோல்வியும் ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு அங்கம். அது பள்ளிக்கூட மாணவர்களாக இருக்கட்டும் அல்லது பிரதமராக இருக்கட்டும். வெற்றி - தோல்வி அனைவருக்கும் பொதுவானது. வாழ்வில் ஏற்ற, இறக்கம் இல்லை என்றால், என்ன மாதிரியான வாழ்க்கை இது?.

    இவ்வாறு சோனாக்‌ஷி சின்கா தெரிவித்தார்.
    `அவதார்' படத்தின் அடுத்த 4 பாகங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் `அவதார் 2'-வது பாகம் வருகிற 2020-ல் வெளியாக உள்ளது. மற்ற பாகங்களின் ரிலீஸ் தேதியை கீழே பார்ப்போம்.
    கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் 'அவதார்'. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. மேலும் `டைட்டானிக்' படத்தின் வசூல் சாதனையையும் 'அவதார்' முறியடித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து 'அவதார்' படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி `அவதார் 2' 2014-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அப்படம் வெளிவரவில்லை. இதுகுறித்து கடந்த மாதம் பேட்டியளித்த ஜேம்ஸ் கேமரூன் `அவதார் 2' இந்த வருடம் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.



    இந்நிலையில், `அவதார்' படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரிசையாக வெளியாக உள்ள அவதார் படத்தின் ரிலீஸ் தேதிகளாவன,

    `அவதார் 2' - டிசம்பர் 18 2020
    `அவதார் 3' - டிசம்பர் 17 2021
    `அவதார் 4' - டிசம்பர் 20 2024
    `அவதார் 5' - டிசம்பர் 19 2025

    ஆகிய தேதிகளில் வரிசையாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    நலிந்த தமிழக விவசாயிகள் 10 பேருக்கு நடிகர் பிரசன்னா - சினேகா தம்பதியினர் ரூ. 2 லட்சத்தை நன்கொடையாக வழங்கி உள்ளனர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    நலிந்த தமிழக விவசாயிகள் 10 பேருக்கு நடிகர் பிரசன்னா - சினேகா தம்பதியினர் ரூ. 2 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளனர்.

    தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட சிலர் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடந்த மாதம் டெல்லி சென்றிருந்தனர். இதில் பெருமைமிகு தமிழர்கள் விழாவில் நடிகர் விஷால் நலிந்த விவசாயிகள் 1௦ பேருக்கு உதவி செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் பிரசன்னா - சினேகா தம்பதிகள் விவசாயிகளுக்கு உதவ முன்வந்தனர்.

    அதன்படி, நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, பிரசன்னா - சினேகா, நலிந்த 10 விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.2 லட்சத்தை நன்கொடையாக அளித்தனர்.



    தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் வேளையில் பிரசன்னா - சினேகா அளித்துள்ள நன்கொடை பாராட்டுக்குரிய ஒன்றாகும். இந்நிகழ்ச்சி நடிகர் விஷாலால் துவக்கி வைக்கப்பட்ட "Friends Of Farmers" எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது.
     
    பிரசன்னா - சினேகாவின் இந்த உதவியின் மூலம் பி. பழனியாண்டி, வி.மூக்காயி, என்.தங்கராஜ், கே.ராஜி, ஆர். வெங்கடாசலம், பி. கணேசன், ஜி. மகாதேவன், ஆர்.சதாசிவம், பி.சிலம்பாயி /பழநிசாமி, ஜான் மைகேல் ராஜ் உள்ளிட்ட 10 விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

    விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் சுமார் 40 நாட்களாக தமிழக விவசாயிகள் சார்பாக டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    சூர்யா நடிக்கவிருந்த படத்தில் தற்போது துல்கர் ச்லமான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
    1950-70-களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை சாவித்ரி. "நடிகையர் திலகம்" என போற்றப்படும் இவரது வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக எடுக்க உள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா கதாநாயகிகளாக ஒப்பந்தமாகி உள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரி வேடத்தில் நடிக்கிறார்.

    மற்றொரு கதாநாயகியான சமந்தா, பத்திரிக்கையாளராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராக உள்ள இப்படத்தில் "காதல் மன்னன்" ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில், `வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்த துல்கர் சல்மான் ஒப்பந்தமாகி உள்ளதாக இப்படத்தை தயாரிக்க உள்ள வைஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக இப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தேதி பிரச்சனையால் இப்படத்தில் சூர்யா நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

    இப்படத்திற்கு தெலுங்கில் ‘மகாநதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை வருகிற மே 8-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றனர். தமிழில் இப்படத்திற்கு `நடிகையர் திலகம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், மிக்கி ஜே.மேயர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.

    வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது.அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்:

    "அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய

    25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.

    பாவலர் அண்ணனுக்கு கம்ïனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார்.

    இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார். இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார்.

    நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல் அமர்க்களப்படும்.

    நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை. நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

    ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.

    நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார். அவர்கள் அண்ணனை நம்பினார்கள்.

    இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.

    ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்?

    அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.

    இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா.

    அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''

    இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-

    இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும்.

    ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மிïசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார். இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்ïமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார்.

    "அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன்.

    ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார், அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும்.

    அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.

    இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார்.

    அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும்.

    அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''

    அதிர்ந்தே போனேன். ஆனால் அதுதான் நடந்தது.

    புரமோஷனுக்கு வரமறுக்கும் நடிகையால் தயாரிப்பாளர் ஒருவர் டென்ஷனில் இருக்கிறாராம். அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த நடிகர், ஆரம்பத்தில் காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதன்பிறகு, அது போரடித்துப்போகவே ஆக்ஷனிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். இவர் நிறைய படங்களை தன்னுடைய பேனரிலேயே செய்தும் வருகிறார்.

    இவர் தயாரிப்பில், இவர் நடிக்கும் படங்களுக்கு புரோமோஷன் செய்ய படக்குழுவினர் அனைவருக்குமே அழைப்பு விடுக்கப்படுமாம். அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இருக்குமாம். அதன்படிதான், இதுவரை நடந்தும் வந்துள்ளதாம்.



    ஆனால், தற்போது இந்த நடிகர் நடித்துள்ள ஒரு படத்தின் புரோமோஷனுக்கு அப்படத்தில் நடித்த நடிகையை கூப்பிட்டால் அவர் வர மறுக்கிறாராம். நிறைய படங்களில் நடித்து வருவதால், என்னால் வரமுடியாது என்று அந்த நடிகையும் மழுப்பலான பதிலையே சொல்லி வருகிறாராம். இதனால் தயாரிப்பாளர் தரப்பு ரொம்பவும் டென்ஷனில் இருக்கிறார்களாம். ஆனால், நடிகையோ எதையும் கண்டுகொள்ளாதவராகவே இருக்கிறாராம்.

    கமல் நடிப்பும் மற்றும் இயக்கத்தில் உருவான ‘விஸ்வரூபம்-2’ படம் இந்த வருடத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என கடந்த 2014-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளிவந்த படம் ‘விஸ்வரூபம்‘. இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில நாட்களிலேயே இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சினையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கமலும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு கமலும் விபத்தில் சிக்கி, நடக்க முடியாமல் கஷ்டப்படவே, ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பும் கிடப்பில் போடப்பட்டது.



    இந்நிலையில், ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதால், ‘விஸ்வரூபம்-2’ படத்தை வெளியிட கமல் முயற்சி எடுத்து வருகிறார். தயாரிப்பாளருடன் ஒருவழியாக சமதான பேச்சுவாத்தை நடத்தி படத்தின் வேலைகளை மறுபடியும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இரண்டு நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகளையும், பிற பணிகளையும் தொடங்கியிருப்பதாக கமலுக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, வரும் அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் ‘விஸ்வரூபம்-2’ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×