என் மலர்tooltip icon

    கார்

    2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை அந்நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.

    அடுத்த தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இதனை ஸ்கோடா இந்தியா இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

     2021 ஸ்கோடா ஆக்டேவியா

    மேலும் 2021 ஸ்கோடா அக்டேவியா முன்பதிவு கார் அறிமுகத்தின் போதே துவங்கும் என்றும், விநியோகம் இதன் வெளியீட்டை தொடர்ந்து உடனடியாக துவங்கும் என அவர் தெரிவித்தார். புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் துவங்கிவிட்டது. மேலும் இதன் முதல் யூனிட் ஔரங்காபாத் நகரில் இயங்கும் ஸ்கோடா ஆலையில் இருந்து வெளியானது. 2021 ஆக்டேவியா மாடல் முற்றிலும் புது டிசைன், அம்சங்கள் மற்றும் பவர்டிரெயின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.
    கியா இந்தியா நிறுவனத்தின் 2021 சொனெட் மாடல் இரண்டு வேரியண்ட்களில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.


    கியா இந்தியா நிறுவனம் மேம்பட்ட 2021 சொனெட் மாடலை இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 6.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சொனெட் மாடல் விநியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.

    2021 கியா சொனெட் மாடலில் கியா இந்தியாவின் புது லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் இரண்டு புது வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.7 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடி ஏடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

     2021 கியா சொனெட்

    இத்துடன் புது சொனெட் மாடலில் பேடில் ஷிப்டர்கள், வாய்ஸ் அசிஸ்ட் வசதி கொண்ட சன்ரூப், ரியர் விண்டோ சன்ஷேட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. பேடில் ஷிப்டர்கள் HTX 7DCT, GTX+ 7DCT பெட்ரோல், HTX AT, GTX + AT டீசல் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.

    வாய்ஸ் அசிஸ்ட் சன்ரூப் வசதி டாப் எண்ட் மாடல்களான HTX+, GTX+ வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ரியர் வியூ விண்டோ சன்ஷேட்கள் HTX, HTX+ மற்றும் GTX+வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விரைவில் EQS எலெக்ட்ரிக் மாடலை இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் EQS மாடலினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த எலெக்ட்ரிக் மாடலுக்கான உற்பத்தி பேக்டரி 56 ஆலையில் துவங்கி இருக்கிறது. இந்த ஆலை ஜெர்மனியில் அமைந்துள்ளது.

    பென்ஸ் ICE, எஸ் கிளாஸ் மாடல்களுடன் புதிய எலெக்ட்ரிக் EQS மாடலும் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பேக்டரி 56 ஆலையில் உற்பத்தி பணிகள் துவங்கின. இந்த ஆலையில் எஸ் கிளாஸ் மற்றும் மேபேக் எஸ் கிளாஸ் போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

     மெர்சிடிஸ் பென்ஸ் EQS

    இந்த ஆலைக்கு தேவையான மின்திறனில் 30 சதவீத மின்சாரம் ரூப்-மவுண்ட் செய்யப்பட்ட போட்டோவோல்டிக் சிஸ்டம்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. புதிய பென்ஸ் EQS 450 பிளஸ் மற்றும் 580 4மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இவை முறையே 328 பிஹெச்பி பவர், 568 என்எம் டார்க் மற்றும் 516 பிஹெச்பி பவர், 855 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இந்த கார் மெர்சிடிஸ் இந்தியா வலைதளத்திலும் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி காரின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நெக்சான் இவி எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. எலெக்ட்ரிக் கார் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 16 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

     டாடா நெக்சான் இவி

    விலை உயர்வு தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. விலை உயர்வு நெக்சான் இவி துவக்க விலையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. எனினும், நெக்சான் இவி XZ+ மற்றும் XZ+ LUX வேரியண்ட்களின் விலை ரூ. 16 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வை தொடர்ந்து நெக்சான் இவி XZ+ விலை ரூ. 15.56 லட்சம் என்றும்,  XZ+ LUX வேரியண்ட் விலை ரூ. 16.56 லட்சம் என மாறி இருக்கிறது. நெக்சான் இவி பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13.99 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது இரு மாடல்களின் விற்பனை செய்வது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ மற்றும் கேயுவி100 மாடல்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், இரு மாடல்களின் விற்பனை நிறுத்தப்படாது என மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

    விற்பனை சார்ந்த அறிவிப்பு மட்டுமின்றி, மராசோ மாடலுக்கான மிக முக்கிய அப்டேட் வழங்கப்பட இருப்பதையும் மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. வரும் மாதங்களில் புது அப்டேட் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

     மஹிந்திரா மராசோ

    முன்னதாக வெளியான தகவல்களில் மஹிந்திரா மராசோ மாடலின் ஆட்டோமேடிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில், தற்போதைய அறிவிப்பின் படி மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. முன்னதாக மராசோ டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருந்தது. இந்த மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டி சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது.  இந்த வசதி வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவை ஏப்ரல் 1 துவங்கி மே 31 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவு பெறும் வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும். 

     ரெனால்ட் கார்

    சேவை நீட்டிப்பு ஜூலை 31 வரை வழங்கப்படுகிறது. இதுதவிர ரெனால்ட் நிறுவனத்தின் 24x7 ரோட்சைட் அசிஸ்டண்ஸ் சேவை ஆபத்து காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், ரெனால்ட் தனது சேவைகளை டிஜிட்டல் தளங்களில் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஆன்லைன் மட்டுமின்றி மை ரெனால்ட் செயலி மூலம் அனைத்து மாடல்கள் பற்றி அறிந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் க்விட், டஸ்டர், டிரைபர் மற்றும் கைகர் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
    டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மே மாத சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.


    இந்தியாவில் செயல்பட்டு வரும் தேர்வு செய்யப்பட்ட டொயோட்டா விற்பனையாளர்கள் மே மாதத்திற்கான சலுகையை வழங்கி வருகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

     டொயோட்டா கார்

    டொயோட்டா யாரிஸ் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டொயோட்டா கிளான்சா மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 8 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    பார்ச்சூனர், இன்னோவா க்ரிஸ்டா, கேம்ரி மற்றும் வெல்பயர் போன்ற மாடலுக்கு எந்த சலுகையும் இம்மாதம் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக இம்மாத துவக்கத்தில் கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களின் விலையை டொயோட்டா உயர்த்தியது. 
    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார்களுக்கான வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் கால அவகாசத்தை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருவதால் இந்த அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கிறது.

     டாடா கார்

    கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. தொற்று அதிக தீவிரம் அடைந்து வருவதால், பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஆலை பணிகளை நிறுத்துவிட்டன. 

    சர்வீஸ் மையங்கள் ஊரடங்கு காரணமாக செயல்படாது என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் 1 துவங்கி மே மாத வாக்கில் நிறைவு பெறும் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் ஜூன் 20, 2021 வரை நீட்டிக்கப்படும் என தெரிவித்து இருக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மே மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹூண்டாய் சான்ட்ரோ, ஆரா, கிராண்ட் ஐ10 நியோஸ், ஐ20 மற்றும் கோனா இவி போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    சலுகைகளின் படி ஹூண்டாய் நிறுவன மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மே 1 ஆம் தேதி துவங்கி மே 31 வரையிலான காலக்கட்டத்தில் கார் வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. இவை ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் விற்பனையாகும் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

     ஹூண்டாய் கார்

    ஹூண்டாய் சான்ட்ரோ மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் ஆரா மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஐ20 மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கோனா இவி மாடலை வாங்குவோருக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் KUV100 மற்றும் KUV300 மாடல்களின் எலெக்ட்ரிக் பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் மஹிந்திரா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தியது.

     மஹிந்திரா eKUV100

    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரு எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வெளியீடு தாமதமாகி வந்தது. தற்போது எலெக்ட்ரிக் மாடல்களுக்கான தேவை அதிகரித்து இருப்பதை ஒட்டி இரு மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டு இருக்கிறது.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் eKUV100 மற்றும் eKUV300 மாடல்களை அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. eKUV100 விலை ரூ. 8.25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்து இருக்கிறது.  
    மஹிந்திரா நிறுவனம் 2021 பொலிரோ மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் 2021 பொலிரோ மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இவைகளில் இருந்து புது மாடல் எதிர்கொள்ள இருக்கும் மாற்றங்கள் ஓரளவு தெரியவந்துள்ளது. தற்போது புது பொலிரோ மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

     மஹிந்திரா பொலிரோ

    2021 பொலிரோ மாடலில் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர், 3 சிலிண்டர் எம்-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 75 பிஹெச்பி பவர், 210 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    முந்தைய ஸ்பை படங்களில் புது பொலிரோ மாடல் டூயல்-டோன் பெயின்ட் கொண்டிருக்கும் என தெரியவந்தது. கார் முழுக்க ரெட் நிறமும், முன்புற பம்ப்பர் மற்றும் கிரில் பகுதிகள் சில்வர் நிறம் கொண்டிருக்கும். இத்துடன் மேம்பட்ட ஹெட்லேம்ப்கள் பாடி நிற ORVM-கள் வழங்கப்படுகின்றன. 
    இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா ஹேச்ட்பேக் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. கடந்த மாதம் கேம்ரி, பார்ச்சூனர் லெஜண்டர், இன்னோ க்ரிஸ்டா போன்ற மாடல்களின் விலை ரூ. 1,18,000 வரை உயர்த்தப்பட்டது.

     டொயோட்டா அர்பன் குரூயிசர்

    கிளான்சா ஹேட்ச்பேக் மாடல் ஜி மற்றும் வி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஜி ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 15,700, ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 33,900 மற்றும் டாப் எண்ட் வி வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் மிட் மற்றும் ஹை கிரேட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் விலை முறையே ரூ. 12,500, ரூ. 2500 மற்றும் பிரீமியம் கிரேட் வேரியண்ட் விலை ரூ. 5,500 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 
    ×