என் மலர்
கார்
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எம்பிவி மாடல் கார்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா முதலிடம் பிடித்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மாடல் கார் இந்திய சந்தையில் மே மாதத்தில் அதிகம் விற்பனையான மாடலாக இருக்கிறது. மே மாதத்தில் மட்டும் மாருதி நிறுவனம் சுமார் 2353 எர்டிகா யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் மாருதி நிறுவனம் 8864 எர்டிகா யூனிட்களை விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு மே மாத விற்பனையில் 73 சதவீதம் சரிவை மாருதி சுசுகி நிறுவனம் சந்தித்து இருக்கிறது. நாட்டில் ஒட்டுமொத்த எம்பிவி விற்பனை 71 சதவீதம் சரிவடைந்துள்ளது.

தற்சமயம் மாருதி எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி, சலுகை மற்றும் விசேஷ சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட ஹூண்டாய் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, கிராண்ட் ஐ10, கிராண்ட் ஐ10 நியோஸ், எலைட் ஐ20 மற்றும் எலான்ட்ரா போன்ற மாடல்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறுகிய காலகட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் ஒவ்வொரு கார் மாடல் வேரியண்ட், விற்பனையகம் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் எலான்ட்ரா மாடலுக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, இவற்றில் தள்ளுபடி, கார்ப்பரேட் சலுகை மற்றும் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை பொருந்தும்.
இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா முதல் முறையாக மாருதி சுசுகியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் முதல் முறையாக மாருதி சுசுகியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 3212 யூனிட்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் மிக மோசமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. கடந்த இரு மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆட்டோமொபைல் துறை பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. மார்ச் மாதத்தின் இரண்டாவது பாதியில் இருந்து நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

ஹூண்டாய் கிரெட்டாவை தொடர்ந்து மாருதி எர்டிகா 2353 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் மாருதி டிசையர் 2215 யூனிட்களும், மஹிந்திரா பொலிரோ 1715 யூனிட்களும், மாருதி இகோ 1617 யூனிட்கள் விற்பனையாகி டாப் 5 இடங்களை பிடித்துள்ளன.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த 2020 கியா செல்டோஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 2020 கியா செல்டோஸ் மாடல் காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 கியா செல்டோஸ் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய 2020 கியா செல்டோஸ் மாடல் துவக்க விலை ரூ. 9.89 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.34 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

2020 கியா செல்டோஸ் காரில் 115 பிஹெச்பி பவர், 144 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது.
இந்த யூனிட் 140 பிஹெச்பி பவர், 242 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அனைத்து என்ஜின்களும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இசட் எஸ் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு இந்திய சந்தையில் மீண்டும் துவங்கியுள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவுகளை மீண்டும் துவங்கியது. புதிய இசட் எஸ் எலெக்ட்ரிக் கார் புதிதாக ஆறு நகரங்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ரூ. 20.88 லட்சம், எக்ஸ் ஷோரூம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், பெங்களூரு மற்றும் ஐதராபாத் என ஐந்து நகரங்களில் மட்டும் இதன் விற்பனை நடைபெற்று வந்தது.

எக்சைட் மற்றும் எக்ஸ்குளூசிவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23.58 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி கார் விநியோகம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கில் நாடு முழுக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து டாடா நெக்சான் இவி மாடல் விநியோகம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியுள்ளது. அதன்படி புதிய காம்பேக்ட் எஸ்யுவி விநியோகம் தற்சமயம் பெங்களூரு, சென்னை மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நெக்சான் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நாடு தழுவிய ஊரடங்கு துவங்கும் முன் இந்த காரின் முதற்கட்ட விநியோகம் துவங்கியது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விநியோக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அறிமுகமான போது இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி என்ற பெருமையை டாடா நெக்சான் இவி பெற்றது. நெக்சான் இவி மாடலில் 95கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 30.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாடா நெக்சான் இவி காரினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் ஜீப் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதி சலுகைகளை அறிவித்துள்ளது.
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (எஃப்சிஏ) நிறுவனம் ஜீப் ஃபார் ஆல் எனும் பெயரில் நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மிக எளிய மாத தவணை முறை வசதியை குறைந்த வட்டியில் வழங்குகிறது. இந்த சலுகையின் கீழ் பெண்களுக்கு 100 சதவீதம் ஆன்-ரோட் விலைக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது.
இத்துடன் திடீரென வேலையின்மை, விபத்து அல்லது உடல் நலம் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும் பட்சத்தில் காருக்கான கடன் தொகையில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த மாத தவணை வசதி முதல் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

புதிய திட்டத்தின் மூலம் ஜீப் எஸ்யுவியை மேலும் அதிகளவு வாடிக்கையாளர்கள் வாங்குவர் என எஃப்சிஏ நம்புகிறது. குறைந்த வட்டி தொகை தேர்வு செய்யப்பட்ட வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதற்கென ஜீப் மற்றும் தனியார் துறை வங்கிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் கடன் தொகையை ஏழு ஆண்டுகளுக்கு மாத தவணை முறையில் செலுத்தலாம். புதிய சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது எஃப்சிஏ-வின் புக் மை ஜீப் முன்பதிவு முனையத்திற்கு சென்று பயன்பெறலாம்.
டேட்சன் நிறுவனம் இந்தியாவில் 2020 டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 2.83 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4.77 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடலில் இரண்டு 800 சிசி பெட்ரோல் என்ஜின்கள், மூன்று சிலிண்டர் யூனிட் மற்றும் 999 சிசி மூன்று சிலிண்டர் யூனிட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

புதிய கார் ஹெட்லேம்ப் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல முன்புற கிரில் மிகவும் பெரிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபாக் விளக்குகள் இதில் புதிதாக இடம் பெற்றுள்ளன. இரட்டை வண்ணங்களில் சக்கர கவர்கள் அழகிய தோற்றப்பொலிவை அளிக்கின்றன.
டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் ஆறு நிறங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. உள்புறம் 8 அங்குல தொடு திரைகொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டது. இரட்டை வண்ணத்திலான இருக்கைகள் சவுகரியமான பயணத்தை அளிக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கரோக் எஸ்யுவி மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய கரோக் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கோடா கரோக் மாடலின் விலை ரூ. 24.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து பேர் பயணிக்கக்கூடிய புதிய ஸ்கோடா கரோக் மாடல் அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் கோடியக் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யுவி ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வேகன் டி ராக், கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

புதிய ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய கரோக் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் புதிய கரோக் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. புதிய கரோக் மாடலில் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், 17 இன்ச் அலாய் வீல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஒன்பது ஏர்பேக், மின்சாதன முறையில் 12 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய 1.3 லிட்டர் ஹெச்ஆர்13 என்ஜின் ஏற்கனவே 2020 நிசான் கிக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே என்ஜின் கொண்ட டஸ்டர் மாடல் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

முன்னதாக டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட டஸ்டர் மாடலின் வெளிப்புறம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காரின் முன்புற கிரில், ஃபாக் லேம்ப் ஹவுசிங், டெயில்கேட் உள்ளிட்டவற்றில் சிவப்பு நிற இன்சர்ட்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. புதிய டஸ்டரில் வழங்கப்பட இருக்கும் ஹெச்ஆர்13 1.3 லிட்டர், நான்கு சிலிண்டர் என்ஜின் 156 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் டைம்லர் மற்றும் ரெனால்ட் நிசான் மிட்சுபிஷி இணைந்து உருவாக்கி இருக்கின்றன.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 டபிள்யூஆர் வி பிஎஸ்6 மாடல் கார் வெளியீட்டுக்கு முன் விற்னபனையகம் வந்திருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விரைவில் மேம்பட்ட டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய 2020 டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
புதிய ஹோண்டா டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் அறிமுகம் தாமதமானது. தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த கார் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

2020 ஹேண்டா டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதன் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காரின் வெளிப்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி புதிய முன்புற கிரில், எல்இடி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், மேம்பட்ட முன்புற பம்ப்பர், புதிய ஃபாக் லேம்ப், சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காரின் இந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடல் இந்திய சந்தையில் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் நான்கில் மூன்று மாடல்கள் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகளவு டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டு நிலவரப்படி ஹூண்டாய் வென்யூ மாடல் மொத்தம் 93,624 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருக்கிறது. இவற்றில் 58,764 யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும். இவற்றில் 44,073 மாடல்கள் டர்போ பெட்ரோல் வேரியண்ட்கள் ஆகும்.
இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ பெட்ரோல் வேரியண்ட்கள் விலை ரூ. 6.7 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் வென்யூ டர்போ பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் மற்றும் டிசிடி டிரான்ஸ்மிஷன் விலை முறையே ரூ. 8.46 லட்சம் மற்றும் ரூ. 9.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






