என் மலர்
கார்
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் ரைடர் மாடல் அதிக வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி உள்ளது. இந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடல் விலை ரூ. 7.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்கோடா ரேபிட் ரைட் மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து இருப்பதால் முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளதாக ஸ்கோடா நிறுவனம் அறிவித்து உள்ளது. புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

ஸ்கோடா ரேபிட் ரைடர் பிஎஸ்6 வெர்ஷன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர், டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர் மற்றும் 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடலில் 2 டின் மியூசிக் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, டெலிஸ்கோபிக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ல்டீரிங், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாம் தலைமுறை குர்கா எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்த புதிய குர்கா மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி உள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையில் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாகவும், புதிய மாடல் 2020 தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஃபோர்ஸ் ஆஃப் ரோடு எஸ்.யு.வி. மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 2020 குர்கா மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், புதிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் குர்காவின் பாரம்பரிய ரக்கட் வடிவமைப்பை பரைசாற்றும் விதத்தில் அமைந்து இருக்கிறது. இத்துடன் இதில் புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் 245/70 டையர்கள் வழங்கப்படுகின்றன. இதன் வீல் ஆர்ச்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.
காரின் உள்புறம் மேம்பட்ட அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், MID டிஸ்ப்ளே, இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்பட்டு, ஏ.சி. வென்ட்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கின்றன.
ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் இந்தியாவில் ரூ. 20.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் என்ஜின் ஆப்ஷன் சிவிக் விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் மாடலில் 1.6 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. தோற்றம் மற்றும் உள்புறத்தில் புதிய மாடலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்திய சந்தையில் ஹோண்டா சிவிக் மாடல் ஹூண்டாய் எலான்ட்ரா, டாடா ஹேரியர், எம்ஜி ஹெக்டார், ஜீப் காம்பஸ் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கோ ஆக்டேவியா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்கள் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்து உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான கியா மோட்டார்ஸ் யுவிஒ கனெக்ட்டெட் தொழில்நுட்பத்தை தனது செல்டோஸ் மற்றும் கார்னிவல் மாடல்களில் வழங்கி வருகிறது.
யுவிஒ கனெக்ட்டெட் தொழில்நுட்பம் சந்தையில் பல்வேறு பிரிவுகளில் 50 முதல்முறை அம்சங்களை கொண்டுள்ளது. இதில் புது அம்சமாக யுவிஒ வாய்ஸ் அசிஸ்ட் வேக்-அப் கமாண்ட் அம்சம் இருக்கிறது. இதை செயல்படுத்த ஹெலோ கியா என கூறினால் போதும்.

முதல் இரண்டு மாடல்களான செல்டோஸ் மற்றும் கார்னிவல் மாடல்களை தொடர்ந்து கியா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கும் கியா சொனெட் மாடலிலும் யுவிஒ கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய சொனெட் மாடல் அறிமுகமாகும் போதே இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஐஎம்டி) என்பது பயனர் கியர்களை மாற்ற மேனுவல் கிளட்ச் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை போக்குகிறது.
புதுவித டிரான்ஸ்மிஷன் தவிர கியா சொனெட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் பிளஸ் மாடல் கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மாடல் இந்தியாவில் ஜூலை 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. எம்ஜி ஹெக்டார் பிளஸ் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதன் டர்போ பெட்ரோல் வெர்ஷன் டிசிடி யூனிட் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் டீசல் வெர்ஷன்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடலின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.
ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் காரின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் இந்திய சந்தையில் ஜூலை 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த கார் முன்பதிவுகள் கடந்த மாதம் துவங்கப்பட்டது.
புதிய கார் முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆடிஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், மேம்பட்ட கம்பீர தோற்றம் கொண்ட முன்புற பம்ப்பர், 21 இன்ச் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட்கள், டிஃப்யூசர் மற்றும் இரண்டு எக்சாஸ்ட்டிப்கள் பொருத்தப்பட்ட பின்புற பம்ப்பர் கொண்டிருக்கிறது.
ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும்.
இந்திய சந்தையில் அறிமுகமானதும் ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ63எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
இந்திய சந்தையில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் மாடல் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மே மாதத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் முற்றிலும் முடங்கியிருந்த ஆட்டோமொபைல் துறை மே மாதத்தில் மீண்டும் பணிகளை படிப்படியாக துவங்கின.
அந்த வகையில் மே மாதத்தில் ஆட்டோமொபைல் விற்பனையும் துவங்கப்பட்டது. மே மாதத்தில் முதல் முறை விற்பனை துவங்கிய ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் அதே மாதத்தில் மட்டும் 3121 யூனிட்களை விற்பனை ஆனது. இது மே மாதத்தில் மற்ற நிறுவனங்களின் எஸ்யுவி விற்பனையை விட அதிகம் ஆகும்.

கிரெட்டா மாடலுக்கு போட்டியாளரான கியா செல்டோஸ் மே மாதத்தில் 1611 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்நிலையில், ஜூன் மாத விற்பனையிலும் ஹூண்டாய் கிரெட்டா 7202 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதனால் ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருக்கிறது.
இதே காலக்கட்டத்தில் கியா செல்டோஸ் 7114 யூனிட்கள் விற்பனையாகி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிக விற்பனை அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருந்த போதும், கியா செல்டோஸ் விற்பனை 342 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் 2020 சிட்டி மாடல் காரின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய சிட்டி செடான் மாடல் கார் இந்திய சந்தையில் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. புதிய ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய ஹோண்டா சிட்டி மாடல் முன்பதிவு கட்டணம் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் என்றும் விற்பனையகம் செல்வோர் ரூ. 21 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள் இன்டகிரேட் செய்யப்பட்ட ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டர்ன் சிக்னல், இசட் வடிவ ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
காரின் உள்புறத்தில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
2020 ஹோண்டா சிட்டி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC என்ஜின் 120 பிஹெச்பி பவர், 145 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.5 லிட்டர் i-DTEC டீசல் யூனிட் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புத்தம் புதிய சிவிக் பிஎஸ்6 கார் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய வாகனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் ஹோண்டா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் செடான் மாடலான சிவிக் காரை பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
முந்தைய தகவல்களின்படி ஹோண்டா சிவிக் டீசல் வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் புதிய சிவிக் பிஎஸ் டீசல் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய டீசல் மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது.

புதிய ஹோண்டா சிவிக் டீசல் மாடலில் மேம்பட்ட 1.6 லிட்டர் ஐ-டிடிஇசி நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்4 வெர்ஷனில் இந்த என்ஜின் 118 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருந்தது.
பிஎஸ்6 வெர்ஷனிலும் இந்த என்ஜின் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. எனினும், டீசல் வெர்ஷனில் மற்ற வேரியண்ட்களை விட அதிக மைலேஜ் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் 40 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை கடந்துள்ளது. புதிய எஸ்யுவி மாடல் அறிமுகமாகி சில மாதங்களிலேயே இந்த மைல்கல் எட்டியுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு துவங்கும் முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா வெளியீட்டிற்கு முன்பே 14 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை பெற்று இருந்தது. முன்பதிவு விவரங்களின் படி 67 சதவீத வாடிக்கையாளர்கள் டீசல் வேரியண்ட்டையும், 33 சதவீதம் பேர் பெட்ரோல் வேரியண்ட்டை தேர்வு செய்து இருக்கின்றனர்.

புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் கார் இந்திய சந்தை முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் மாடல் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எஸ்யுவி மாடல் விலை காரணமாக அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
இந்தியாவில் அதிக முன்பதிவுகளை பெற்று வரும் நிலையில், தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எம்ஜி ஹெக்டார் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. உற்பத்தி பாதிப்பு காரணமாக கார்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அறிமுகமானது முதல் ஹெக்டார் காரை வாங்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்து இருக்கிறது. இதில் 20 ஆயிரம் யூனிட்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் விநியோகம் செய்து இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் எஸ்யுவி மாடல் விலை ரூ. 12.74 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.44 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜூன் மாத வாகனங்கள் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் 51274 வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி 1,11,014 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் மாத விற்பனை 53.8 சதவீதம் சரிவு ஆகும்.
காம்பேக்ட் கார் பிரிவு வாகனங்களான வேகன்ஆர், ஸ்விஃப்ட், செலரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் போன்ற மாடல்கள் விற்பனைக்கு முக்கிய பங்கு வகித்து இருக்கின்றன. இந்த மாடல்கள் மட்டும் 26696 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மினி வாகனங்களான ஆல்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ உள்ளிட்டவை 10458 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

மாருதி சியாஸ் மாடல் 553 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. யுடிலிட்டி பிரிவு வாகனங்களான எஸ் கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகா போன்றவை 9764 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. மாருதி ஈகோ வேன் மாடல் 3803 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 57428 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இதில் 4289 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.






