search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா அல்ட்ரோஸ்
    X
    டாடா அல்ட்ரோஸ்

    ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி பெறும் டாடா கார்

    டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் மாடல் அந்நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இந்த கார் 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் மாடல் பல்வேறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாடா அல்ட்ராஸ் மாடலின் மிட்-ரேன்ஜ் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதிய அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் இந்த அப்டேட் வழங்கப்பட்டு உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.

    அந்த வகையில் டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த வேரியண்ட்டில் மேனுவல் ஏசி ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் ஒ வேரியண்ட்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. 

     டாடா அல்ட்ரோஸ்

    டாடா அல்ட்ரோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 86 பிஹெச்பி மற்றும் 90 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளன. 

    இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்டி வேரியண்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ. 6.84 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ. 8.44 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×