என் மலர்
பைக்
ரெவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி400 பிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரெவோல்ட் மோட்டார் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆர்வி400 மாடலை புது நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் தற்போது டூயல்-டோன் பிளாக் மற்றும் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது.
முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் அம்சங்கள், மெக்கானிக்கல் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் டெல்லி, சென்னை, மும்பை, பூனே, ஆமதாபாத் மற்றும் ஐதராபாத் என ஆறு இந்திய நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் புல் எல்.இ.டி. லைட்டிங், புளூடூத் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 3.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. விரைவில் அறிமுகமாக இருக்கும் டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் பியூவல் டேன்க் மீது 3டி லோகோ உள்ளது.
இத்துடன் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டெயில் லைட் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இந்த மோட்டார்சைக்கிள் புளூ, ரெட், எல்லோ மற்றும் பிளாக் என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. புதிய டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் டூயல்-டோன் பினிஷ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டிருக்கிறது.

இதன் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஸ்பீடோமீட்டர், பியூவல் காஜ், கடிகாரம் மற்றும் இதர விவரங்களை காண்பிக்கிறது. இந்த மாடலில் வழங்கப்பட இருக்கும் மெக்கானிக்கல் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் இசட்650 ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானை சேர்ந்த கவாசகி நிறுவனம் இசட்650 ஆர்.எஸ். மோட்டார்சைக்கிளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், இந்த மோட்டார்சைக்கிள் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அதன்படி புதிய இசட்650 ஆர்.எஸ். மாடலில் 649சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 67.3 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 191 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரீ-லோடு பேக்-லின்க் யூனிட் வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீடியோர் 350 மோட்டார்சைக்கிள் மாடலின் விலை இந்தியவில் மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஜூலை மாதத்தில் தனது மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் விலையை ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தியது. தற்போது இதன் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இம்முறை மீட்டியோர் 350 விலை ரூ. 3428 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 புதிய விலை விவரம்
மீட்டியோர் 350 பயர்பால் ரூ. 1,98,537
மீட்டியோர் 350 ஸ்டெல்லார் ரூ. 2,04,527
மீட்டியோர் 350 சூப்பர்நோவா ரூ. 2,14,513
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மாடலில் டூயல் கிராடிள் பிரேம் கொண்ட 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
இத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல்., எல்.இ.டி. டெயில் லைட், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், டூயல் சேனல் ஏ.பி.எஸ். என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 ஸ்கூட்டர் விற்பனை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முதல் விற்பனையை கடைசி நேரத்தில் ஒத்திவைத்தது. அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை முன்பதிவு நடைபெற்று வந்தது.
இதன் விற்பனை நேற்று செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், அந்நிறுவன வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விற்பனை கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது. புதிய எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விற்பனை செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது.

விற்பனை தாமதமாகி இருந்தாலும், வினியோக தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் ரேஇசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட், ஸ்டிரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்தது.
யமஹா நிறுவனத்தின் தி கால் ஆப் தி புளூ திட்டத்தின் கீழ் ரேஇசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட், ஸ்டிரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. யமஹா ரேலி இசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட் விலை ரூ. 76,830 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரேஇசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட் மற்றும் ஸ்டிரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட் மாடல்களில் ஏர்-கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 125சிசி புளூ கோர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பி.எஸ். திறன், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வழங்குகிறது. இரு ஸ்கூட்டர்களின் மொத்த எடை 99 கிலோ ஆகும்.

இரு ஸ்கூட்டர்களிலும் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கூட்டரில் ஹைப்ரிட் சிஸ்டம் வசதியை வழங்குகிறது. பெட்ரோல் விலை உயர்வு காலக்கட்டத்தில் ஸ்மார்ட் ஹைப்ரிட் எரிபொருள் செலவை குறைக்கும் பணியை மேற்கொள்ளும்.
ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் இரு ஸ்கூட்டர்களுக்கும் குவைட் என்ஜின் ஸ்டார்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் & ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச் போன்ற வசதிகளை வழங்குகிறது. இத்துடன் மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 190 எம்.எம். முன்புற டிஸ்க், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஜி310 ஜி.எஸ். மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் 2022 ஜி310 ஜி.எஸ். மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. 2022 மாடல் ட்ரிபில் பிளாக் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. ஏற்கனவே இந்த நிற வேரியண்ட் பல்வேறு சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2022 பி.எம்.டபிள்யூ. ஜி310 ஜி.எஸ். மாடலில் பி.எஸ்.6 ரக 313சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 33.5 பி.ஹெச்.பி. திறன், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த மாடலில் அப்சைடு-டவுன் முன்புற போர்க், பின்புறம் மோனோ ஷாக் யூனிட், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள் உள்ளன. இந்தியாவில் புதிய மாடலின் விலை ரூ. 3.10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எஸ்1 மற்றும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் புது மாடல் உருவாக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது.

ஏத்தர் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் தற்போது பயன்படுத்தப்படும் 450 பிளாட்பார்மிலேயே உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் குறைந்த அம்சங்கள், சராசரியான செயல்திறன் மற்றும் சற்றே குறைந்த ரேன்ஜ் கொண்டிருக்கும் என தெரிகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மாடல் பல்வேறு மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்தது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் வினியோகம் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய கிளாசிக் 350 மாடல் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.2 பி.ஹெச்.பி. திறன், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
2021 ராயல் என்பீல்டு கிளாசிக் ரெடிட்ச் ரூ. 1,84,374, ஹல்சியோன் - ரூ. 1,93,123, சிக்னல்ஸ் - ரூ. 2,04,367, டார்க் - ரூ. 2,11,465, க்ரோம் - ரூ. 2,15,118 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய கிளாசிக் 350 பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
2021 கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 1.84 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய கிளாசிக் 350 மாடல் மீடியோர் 350 மாடலில் பயன்படுத்தப்பட்ட ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் ரெடிட்ச் ரூ. 1,84,374, ஹல்சியோன் - ரூ. 1,93,123, சிக்னல்ஸ் - ரூ. 2,04,367, டார்க் - ரூ. 2,11,465, க்ரோம் - ரூ. 2,15,118 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய கிளாசிக் 350 பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய ஜி310 ஜி.எஸ். மோட்டார்சைக்கிள் ட்ரிபில் பிளாக் எனும் புதிய நிறத்தில் உருவாகி இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜி310 ஜி.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இந்த மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டு 2022 மாடல் என அறிமுகமானது.
2022 பி.எம்.டபிள்யூ. ஜி310 ஜி.எஸ். மாடல் பிளாக்டு-அவுட் பெயிண்ட், கிரே நிற ஜி.எஸ். லோகோ கொண்டிருக்கிறது. புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய 2022 மாடலிலும் 313சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 பி.ஹெச்.பி. திறன், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 2022 பி.எம்.டபிள்யூ. ஜி310 ஜி.எஸ். மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள், புல் எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய மாடலின் விலை ரூ. 3.10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
அப்ரிலியா நிறுவனத்தின் இரண்டு புதிய 600 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
அப்ரிலியா இந்தியா நிறுவனம் இரண்டு புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல்கள் ஆர்.எஸ். 660 மற்றும் டியூனோ 660 என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 13.39 லட்சம் மற்றும் ரூ. 13.09 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அப்ரிலியா ஆர்.எஸ். 660 மற்றும் டியூனோ 660 மாடல்களில் 659சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த என்ஜின் ஆர்.எஸ். 660 மாடலில் 98.6 பி.ஹெச்.பி. திறன், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

டியூனோ 660 மாடலில் இதே என்ஜின் 93.6 பி.ஹெச்.பி. திறன், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. செயல்திறன் மட்டுமின்றி தோற்றத்தில் இரு மாடல்களும் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. இரு மாடல்களும் மூன்றுவித நிறங்களில் கிடைக்கின்றன.
அப்ரிலியா ஆர்.எஸ். 660 மாடல் அபெக்ஸ் பிளாக், லாவா ரெட் மற்றும் ஆசிட் கோல்டு நிறங்களிலும் டியூனோ 660 மாடல் கான்செப்ட் பிளாக், இரிடியம் கிரே மற்றும் அசிடிக் கோல்டு நிறங்களிலும் கிடைக்கின்றன.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 1.84 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2.15 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடல் முற்றிலும் புதிய சேசிஸ், என்ஜின், ரெட்ரோ டிசைன் மற்றும் சிறப்பான ரைடிங் அனுபவம் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக 2021 கிளாசிக் 350 இருந்தது. இந்த மாடலில் உள்ள கிளாசிக் 350 லோகோவும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.2 பி.ஹெச்.பி. திறன், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 வேரியண்ட் மற்றும் விலை விவரம்
ரெடிட்ச் - ரூ. 1,84,374
ஹல்சியோன் - ரூ. 1,93,123
சிக்னல்ஸ் - ரூ. 2,04,367
டார்க் - ரூ. 2,11,465
க்ரோம் - ரூ. 2,15,118
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய கிளாசிக் 350 மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.






