என் மலர்tooltip icon

    பைக்

    • உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன.
    • கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களாக ஹோண்டா, யமஹா, சுசுகி மற்றும் கவாசகி விளங்குகின்றன. நான்கு நிறுவனங்களும் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நான்கு முன்னணி நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன.

    இந்த கூட்டணி மூலம் ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் என்ஜின்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளன. கூட்டணியின் அங்கமாக அரசு அனுமதி பெற்று HySE (Hydrogen small mobility & engine technology) பெயரில் ஆய்வு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

     

    ஜப்பானை சேர்ந்த நான்கு நிறுவனங்களும் ஆற்றலை உருவாக்கும் ஒரே திறன், சூரியசக்தி மட்டும் தான் என்று நம்புவதற்கு எதிராக உள்ளன. உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன. ஆனால், இதற்கான மாற்று நிச்சம் உள்ளது. அதற்கு ஹைட்ரஜன் தான் பதில் என்று HySE உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

    கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஹோண்டா நிறுவனம் ஹைட்ரஜன் சார்ந்த என்ஜின்களின் மாடல் வளர்ச்சி பிரிவில் ஆய்வு செய்கிறது. சுசுகி நிறுவனம் இதற்கான சாத்தியக்கூறு, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்கிறது.

    யமஹா நிறுவனம் ஹைட்ரஜன் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க் பிரிவில் கவனம் செலுத்துகிறது. கவாசகி நிறுவம் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க், ஃபியூவல் டேன்க் மற்றும் இன்ஜெக்டர்களை இன்ஸ்டால் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. டொயோட்டா நிறுவனமும் இந்த கூட்டணியில் பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளை செய்து உதவ இருக்கிறது. 

    • பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது.

    பியாஜியோ நிறுவனத்தின் புதிய வெஸ்பா டூயல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெஸ்பா டூயல் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்குகிறது. புதிய டூயல் வேரியண்ட் 125சிசி மற்றும் 150சிசி என்று இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் OBD 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

    இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெஸ்பா டூயல் ஸ்கூட்டர் விசேஷமாக டூயல் டோன் லிவெரி மற்றும் அழகிய ஃபூட்போர்டு கொண்டிருக்கிறது. புதிய டூயல் டோன் நிறங்கள் வழக்கமான மோனோக்ரோம் ஸ்கூட்டர்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

     

    இதன் VXL ரேஞ்ச் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ரியர் வியூ மிரர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் SXL வேரியண்ட் செவ்வக வடிவம் கொண்ட ஹெட்லைட் மற்றும் ரியர் வியூ மிரர்கள் உள்ளன. புதிய வெஸ்பா டூயல் மாடல் நாடு முழுக்க 250-க்கும் அதிக பிரத்யேக விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது.

    விலையை பொருத்தவரை வெஸ்பா டூயல் VXL 125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 32 ஆயிரம் என்று துவங்கி டாப் எண்ட் வெஸ்பா டூயல் SXL 150 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • சிறப்பு சலுகை பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும்.
    • இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 10-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி டுகாட்டி ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடலான, மல்டிஸ்டிராடா வி4 மற்றும் பனிகேல் வி4 சார்ந்த ரோட்ஸ்டர் மாடல், ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 மாடல்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மான்ஸ்டர், ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 மற்றும் மல்டிஸ்டிராடா வி2 போன்ற மாடல்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

     

    இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளர் டுகாட்டி, இந்த பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், பயனர்கள் இந்த தொகையை கொண்டு டுகாட்டி ஆடை, பயனர் வாங்கும் மோட்டார்சைக்கிளுக்கான அக்சஸரீக்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்று டுகாட்டி இந்தியா அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது மான்ஸ்டர் எஸ்பி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என்று துவங்குகிறது. இது அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 3 லட்சம் வரை அதிகம் ஆகும்.

    • ஹீரோ எக்ஸ்பல்ஸ் சீரிசின் ரேலி எடிஷன் தற்போது ப்ரோ வேரியண்ட் என்று அழைக்கப்படுகிறது.
    • 2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில்: ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று ரைடு மோட்கள் உள்ளன.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2023 எக்ஸ்பல்ஸ் 200 4V மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது. எக்ஸ்பல்ஸ் சீரிசின் ரேலி எடிஷன் தற்போது ப்ரோ வேரியண்ட் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், 60mm அளவில் உயரமான விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட பெரிய ஹேண்ட் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் உள்ள 200சிசி ஆயில் கூல்டு என்ஜின் புதிய OBD-2 விதிகள் மற்றும் E20 ரக எரிபொருளில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில்: ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று ரைடு மோட்கள், சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் ரைடர் டிரையாங்கில் டுவீக் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜர் காக்பிட் அருகில் மாற்றப்பட்டுள்ளது. இதன் ப்ரோ வேரியண்டில் ரேலி கிட் ஸ்டாண்டர்டு ஃபிட்மெண்ட் ஆக வழங்கப்படுகிறது.

    • சிம்பில் எனர்ஜி மாடலில் 4.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருந்தது.
    • இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்பட்டது.

    சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அதன்படி டெஸ்டிங்கில் உள்ள மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே காட்சிப்படுத்திய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலின் அப்ரானில் எல்இடி ஹெட்லைட் மவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இண்டிகேட்டர்கள், ஹேண்டில்பாரிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஒற்றை சீட், இளமையான தோற்றம் கொண்டிருக்கிறது.

     

    2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிம்பில் எனர்ஜி மாடலில் 4.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருந்தது. பின் சில மாதங்கள் கழித்து இதே மாடலில் மூன்றாவதாக மற்றொரு பேட்டரி பேக் வழங்கப்பட்டு, இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்பட்டது.

    சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் எல்இடி இலுமினேஷன், ப்ளூடூத் மற்றும் வைபை வசதி கொண்ட டிஎப்டி கன்சோல், 2 ஜிபி ரேம், நான்கு ரைடிங் மோட்கள்- இகோ, ரைடு, டேஷ் மற்றும் சோனிக் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

    Photo Courtesy: bikewale

    • எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் குறிப்பிடத்தக்க மாற்றமாக புதிய எல்இடி ஹெட்லைட் இருக்கும்.
    • இத்துடன் மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஏபிஎஸ் சென்சிடிவிட்டி வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 200 4V மாடல் விரைவில் அப்டேட் செய்யப்பட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் மேம்பட்ட புதிய மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், பல்வேறு நிலைகளில் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் குறிப்பிடத்தக்க மாற்றமாக புதிய எல்இடி ஹெட்லைட் இருக்கும் என்று தெரிகிறது. இந்த யூனிட்டில் H வடிவம் கொண்ட ரிடிசைன் செய்யப்பட்ட டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஏபிஎஸ் சென்சிடிவிட்டி - ரோடு, ஆஃப்-ரோடு மற்றும் ரேலி வழங்கப்படுகிறது.

    இதன் ரோடு வெர்ஷன் வழக்கமான டூயல் சேனல் ஏபிஎஸ் செட்டப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இரண்டு முக்கிய மாற்றங்கள் தவிர, இந்த மாடலின் தோற்றம் அதன் தற்போதைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலில் 199.6சிசி ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 19.1 ஹெச்பி பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றங்களின் மூலம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலின் விலை தற்போதைய வெர்ஷனை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்றே தெரிகிறது.

    • இந்த மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனை செய்யப்படும் மிடில்வெயிட் மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆக இருக்கும்.
    • ஷெர்பா மாடல் இண்டர்செப்டார் 650 பைக்கின் ஆஃப் ரோடு வெர்ஷன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மோட்டார்சைக்கிள் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிள் விவரங்கள் காப்புரிமை விண்ணப்பத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் "இண்டர்செப்டார் பியர் 650" எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனை செய்யப்படும் மிடில்வெயிட் மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆக இருக்கும் என்று தெரிகிறது.

    பியர் எனும் பெயரைக் கொண்டு இது இண்டர்செப்டார் 650 மாடலின் ஆஃப் ரோடு வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஷெர்பா மாடல் இண்டர்செப்டார் 650 பைக்கின் ஆஃப் ரோடு வெர்ஷன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், டிரேட்மார்க் விவரங்களில் ஷெர்மா மாடலில் இண்டர்செப்டார் பிராண்டிங் வழங்கப்படவில்லை.

     

    அந்த வகையில் புதிய பியர் வேரியண்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலாக இருக்கும் என்றும் இதில் ஸ்பெஷல் பெயிண்ட் மற்றும் கூடுதல் அக்சஸரீக்கள் வழங்கப்பட உள்ளது. இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது.

    அந்த வகையில், இந்த மாடல் 648சிசி பேரலல் டுவின், ஏர்/ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் புதிய வேரியண்ட் பண்டிகை காலக்கட்டம் அதாவது ஜூலை முதல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2018 ஆண்டு என்டார்க் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    • அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பிரபலமாக இருந்துவரும் என்டார்க் மாடல் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.

    டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் இந்திய சந்தை விற்பனையில் 1.45 மில்லியன் யூனிட்களை கடந்துள்ளது. கடந்த 2018 பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் விற்பனையில் 1 மில்லியன் யூனிட்களை 2022 ஏப்ரல் மாதம் எட்டியது. மார்ச் 2023 இறுதி வரை என்டார்க் மொத்த விற்பனை 12 லட்சத்து 89 ஆயிரத்து 171 யூனிட்களாக இருந்தது. 2019 நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரத்து 947 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.

    2023 நிதியாண்டில் டிவிஎஸ் என்டார்க் ஒட்டுமொத்த விற்பனை 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் ஆகும். இதன் மூலம் வருடாந்திர விற்பனையில் 16.55 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஒரே ஆண்டில் டிவிஎஸ் நிறுவனம் இத்தனை யூனிட்கள் விற்பனை செய்தது இதுவே முதல் முறை ஆகும். இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியலில் என்டார்க் மாடல் நான்காவது இடத்தில் உள்ளது.

     

    முதல் மூன்று இடங்களில் ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் சுசுகி அக்சஸ் போன்ற மாடல்கள் உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே டிவிஎஸ் என்டார்க் மாடல் பிரபலமாக இருந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் என்டார்க் மாடல் 19 ஆயிரத்து 809 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதே ஆண்டின் இறுதியில் டிவிஎஸ் நிறுவனம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 039 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    பின் 2020 ஆண்டு 2 லட்சத்து 65 ஆயிரத்து 016 யூனிட்கள் விற்பனையானது. இது வருடாந்திர அடிப்படையில் 24 சதவீதம் அதிகம் ஆகும். 2021 நிதியாண்டில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையிலும் என்டார்க் மாடல் 2 லட்சத்து 51 ஆயிரத்து 491 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. 2022 நிதியாண்டில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 277 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்த வரிசையில் 2023 நிதியாண்டில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    • 2015 ஆண்டு ஹோண்டா அறிமுகம் செய்த ஆக்டிவா மாடல் ஆக்டிவா 3ஜி எனும் பெயரில் அழைக்கப்பட்டது.
    • ஸ்கூட்டர் மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் மிகவும் பிரபல ஸ்கூட்டர் - ஹோண்டா ஆக்டிவா மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது. ஆக்டிவா 6ஜி பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிரபல ஸ்கூட்டர் பெயரில் இருந்து 6ஜி மட்டும் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா பெயரிலேயே விற்பனை செய்யப்படவுள்ளது.

    பெயர் மட்டுமின்றி 6ஜி பிராண்டிங் கொண்டிருந்த புகைப்படங்களும் மாற்றப்பட்டு இருக்கிறது. 2015 ஆண்டு ஹோண்டா அறிமுகம் செய்த ஆக்டிவா மாடல் ஆக்டிவா 3ஜி எனும் பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பின் இதைத் தொடர்ந்து அறிமுகமான ஸ்கூட்டர்கள் ஆக்டிவா பெயருடன் 4ஜி, 5ஜி மற்றும் 6ஜி பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது பெயரில் இருந்து 6ஜி நீக்கப்பட்டு இருக்கிறது.

    பிரபல ஸ்கூட்டர் மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான் என்று கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா இ எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

    • இந்தியாவில் 25 நகரங்களில் புதிய மேட்டர் ஏரா மாடல் முன்பதிவு நடைபெற இருக்கிறது.
    • மேட்டர் ஏரா எலெக்ட்ரிக் மாடலில் 5 கிலோவாட் ஹவர் லிக்விட் கூல்டு பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆமதாபாத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம் மேட்டர் மோட்டார். இந்திய சந்தையில் கியர் கொண்ட முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஏரா எனும் பெயரில் மேட்டர் மோட்டார் வெளியிட இருக்கிறது. புதிய மேட்டர் ஏரா மாடலுக்கான முன்பதிவு மே 17 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    முதற்கட்டமாக இந்தியாவின் 25 நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் புதிய மேட்டர் ஏரா மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் மும்பை, பூனே, டெல்லி என்சிஆர், சென்னை, ஐதராபாத், புவனேஷ்வர், கவுகாத்தி உள்ளிட்ட நகரங்கள் அடங்கும்.

     

    மேட்டர் ஏரா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் 5 கிலோவாட் ஹவர் லிக்விட் கூல்டு பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சம் 10.5 கிலோவாட் பவர் வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் மேட்டர் ஏரா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 125 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேட்டர் ஏரா மாடலுக்கான முன்பதிவு மேட்டர் மோட்டார் வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் என்று வெவ்வேறு ஆன்லைன் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. ஏரா 5000 மற்றும் ஏரா 5000 பிளஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம், ரூ. 1 லட்சத்து 54 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
    • கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி மாடலில் 373 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது.

    கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தனது 390 அட்வென்ச்சர் மாடலின் புதிய வேரியண்ட்கள்- குறைந்தவிலை X வெர்ஷன் மற்றும் லோ-சீட் V ஆப்ஷன்களை அறிமுகம் செய்தது. தற்போது கேடிஎம் நிறுவனம் ஆஃப்-ரோடு சார்ந்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் ஸ்போக் வீல் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சர்வதேச சந்தையை போன்றே கேடிஎம் 390 அட்வென்ச்சர் SW மாடல், புதிய ஆஃப் ரோடு மாடல் 390 அட்வென்ச்சர் ரேலி என்ற பெயரில் தான் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.

     

    இந்த மாடலின் விற்பனை இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ துவங்கும் என்று தெரிகிறது. புதிய மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஸ்போக் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.

    கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி மாடலில் 373 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

    • சிம்பில் ஒன் மாடலின் உற்பத்தி தமிழ் நாட்டின் சூலகிரி ஆலையில் நடைபெற்று வருகிறது.
    • வெளியீட்டு நிகழ்வை தொடர்ந்து சிம்பில் ஒன் மாடலின் வினியோகம் துவங்க இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவித்து இருக்கிறது. புதிய சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மே 23 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. சிம்பில் ஒன் மாடலின் உற்பத்தி தமிழ் நாட்டின் சூலகிரி ஆலையில் நடைபெற்று வருகிறது.

    வெளியீட்டு நிகழ்வை தொடர்ந்து சிம்பில் ஒன் மாடலின் வினியோகம் துவங்க இருக்கிறது. எனினும், வினியோக தேதி இன்னமும் சரியாக அறிவிக்கப்படாமல் உள்ளது. முன்னதாக 2021 ஆண்டு ப்ரோடோடைப் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட சிம்பில் ஒன் மாடலில் 4.5 மற்றும் 4.8 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளன.

     

    பின் இந்த ஸ்கூட்டரில் அதிக திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என்று சிம்பில் எனர்ஜி அறிவித்தது. அதன்படி சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    இதன் ப்ரோடோடைப் வெர்ஷனில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வைபை, கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, நான்கு ரைடிங் மோட்கள் என்று ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் மோனோஷாக், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருந்தது. இதே அம்சங்கள் அதன் ப்ரோடக்ஷன் வெர்ஷனிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    ×