search icon
என் மலர்tooltip icon

    பைக்

    சர்வதேச சந்தையில் அறிமுகமானது 2024 கவாசகி எலிமினேட்டர்!
    X

    சர்வதேச சந்தையில் அறிமுகமானது 2024 கவாசகி எலிமினேட்டர்!

    • கவாசகி நிறுவனத்தின் 2024 எலிமினேட்டர் மாடலில் வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப் உள்ளது.
    • இதில் உள்ள என்ஜின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    கவாசகி நிறுவனம் தனது 2024 எலிமினேட்டர் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. குரூயிசர் மாடலான எலிமினேட்டர் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் கவாசகி மற்றும் பஜாஜ் ஆட்டோ இடையேயான கூட்டணியில், 175சிசி குரூயிசர் மாடல் முன்னதாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    அந்த வகையில், தற்போது 2024 வெர்ஷனில் எலிமினேட்டர் மாடல் மீண்டும் களமிறங்கி இருக்கிறது. இந்த முறை எலிமினேட்டர் மாடலில் 451சிசி, பேரலெல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் கவசாகி நின்ஜா Z400 மாடலில் உள்ளதை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய எலிமினேட்டர் மாடல் நியோ-ரெட்ரோ டிசைன் கொண்டுள்ளது.

    இத்துடன் வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப், மெகாஃபோன் எக்சாஸ்ட் உள்ளது. இதில் உள்ள அகலமான ஹேன்டில்பார் மற்றும் சென்ட்ரல் ஃபூட்பெக் அதிக சவுகரியமான அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டக்கோமீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், கடிகாரம், ஒடோமீட்டர், இரு ட்ரிப் மீட்டர்கள், ரேன்ஜ் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் முற்றிலும் புதிய குறைந்த எடை டிரெலிஸ் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் 41 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.

    பிரேக்கிங்கிற்கு இந்த மாடலின் முன்புறம் 310 மில்லிமீட்டர் செமி-ஃபுளோடிங் டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 18 இன்ச் / 16 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.

    என்ஜினை பொருத்தவரை புதிய மாடல், ஏற்கனவே Z400 மாடலில் பயன்படுத்தப்படும் 399சிசி பேரலல் டுவின் யூனிட்-இல் ஸ்டிரோக் அளவை 6.8 மில்லிமீட்டர்கள் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது Z400-இல் வெளிப்படுத்தும் 47.3 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை விட அதிகளவு வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.

    2024 கவாசகி எலிமினேட்டர் மாடல் அமெரிக்க சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மாடலின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    Next Story
    ×