search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ரூ. 1.27 லட்சம் விலையில் 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 160R 4V இந்தியாவில் அறிமுகம்!
    X

    ரூ. 1.27 லட்சம் விலையில் 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 160R 4V இந்தியாவில் அறிமுகம்!

    • புதிய எக்ஸ்டிரீம் 160R 4V மாடலில் ஸ்ப்லிட் சீட் செட்டப் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
    • 2023 மாடலில் எக்ஸ்டிரீம் 160R 4V மாடலில் 4-வால்வுகள் கொண்ட என்ஜின் உள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2023 எக்ஸ்டிரீம் 160R 4V மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் 2-வால்வுகள் கொண்ட வேரியண்டின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    புதிய மாடல் ஹெட்லைட் அப்டேட் செய்யப்பட்டு, புதிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவை டூயல் டோன் ஆப்ஷன்களை கொண்டுள்ளன. மேலும் புதிய எக்ஸ்டிரீம் 160R 4V மாடலில் ஸ்ப்லிட் சீட் செட்டப் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய மாடலில் கூர்மையான தோற்றம் மற்றும் அசத்தலான டிசைன் கொண்டிருக்கிறது.

    2023 எக்ஸ்டிரீம் 160R 4V மாடலில் நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 163சிசி, ஆயில் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட மோட்டார் ஆகும். இந்த என்ஜின் 16.6 ஹெச்பி பவர், 14.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    எல்இடி இலுமினேஷன் தவிர எக்ஸ்டிரீம் 160R 4V மாடலில் முழுமையான டிஜிட்டல் கன்சோல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, எஸ்எம்எஸ் மற்றும் கால் நோட்டிஃபிகேஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் ப்ரோ வேரியண்டில் முன்புறம் கோல்டன் யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்படுகின்றன.

    விலை விவரங்கள்:

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160R 4V ஸ்டான்டர்டு ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 300

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160R 4V கனெக்டெட் ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 800

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160R 4V ப்ரோ ரூ. 1 லட்சத்து 36 ஆயிரத்து 500

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R 4V மாடல் டிவிஎஸ் அபாச்சி RTR 4V மற்றும் பஜாஜ் பல்சர் NS160 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×