என் மலர்
பைக்
- எனிக்மா ஆம்பயர் N8 ஸ்கூட்டரில் 26 லிட்டர் அன்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளது.
- இந்த ஸ்கூட்டரில் 1500 வாட் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
போபால்-ஐ சேர்ந்த எனிக்மா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆம்பயர் N8 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 200 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். இதில் உள்ள பேட்டரியை இரண்டில் இருந்து அதிகபட்சம் நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும்.

புதிய எனிக்மா ஆம்பயர் N8 மாடலில் சக்திவாய்ந்த 1500 வாட் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் அதிகபட்சம் 200 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
புதிய எனிக்மா ஆம்பயர் N8 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அன்டர்சீட் ஸ்டோரேஜ் 26 லிட்டர்கள் ஆகும். இது இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் வழக்கமான ஸ்கூட்டர்களில் இருப்பதை விட அதிகம் ஆகும். இந்த ஸ்கூட்டர் கிரே, வைட், புளூ, சில்வர் மற்றும் மேட் பிளாக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
- ராயல் என்பீல்டு ஹன்டர் 350 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
- ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடலில் 349சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் உலகளவில் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஹன்டர் 350 இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது.
பிப்ரவரி 2023 மாதம் முதல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையான நிலையில், அடுத்த ஒரு லட்சம் யூனிட்கள் வெறும் ஐந்து மாதங்களில் விற்பனையாகி இருக்கிறது. இந்திய சந்தையில் 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களில் ஹன்டர் 350 விற்பனை அதிகளவு வளர்ச்சி பெற்று இருப்பதாக ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடல் இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அர்ஜென்டினா, கொலம்பியா, மெக்சிகோ, நியூசிலாந்து போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதன் விற்பனை பிரேசில் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடலில் 349சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஹன்டர் 350 மாடல் டிவிஎஸ் ரோனின், ஜாவா 42 மற்றும் ஹோன்டா ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய வாகனத்திற்கான டீசர் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது.
- இந்த வாகனம் முற்றிலும் புதிய கரிஸ்மா XMR 210 மாடல் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு தயாரான நிலையில், இருக்கும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் இந்த மோட்டார்சைக்கிள் சிறப்பான தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலின் முன்புறம், பக்கவாட்டில் கூர்மையான பேனல்கள், மஸ்குலர் ஃபியூவல் டேன்க் மற்றும் ஸ்ப்லிட்-சீட் ஸ்டைல் சீட் வழங்கப்படுகிறது.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் முற்றிலும் புதிய 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த என்ஜின் 25 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்றும் இத்துடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்படும் என்று தெரிகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், கரிஸ்மா XMR 210 மாடல் பஜாஜ் பல்சர் F250, சுசுகி ஜிக்சர் SF 250 மற்றும் யமஹா YZF-R15 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.
Photo Courtesy: Bikewale
- ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை விவரம் அறிவிப்பு.
- ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் S1 ஏர் ஸ்கூட்டர் மாடலுக்கான விற்பனை ஜூலை 28-ம் தேதி துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட ஒலா S1 ஏர் மாடலின் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த மாடலின் வினியோகம் இதுவரை துவங்காமல் இருக்கிறது.
தற்போது ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஒலா S1 ஏர் மாடலை வாங்க முன்பதிவு செய்தவர்கள், ஜூலை 28-ம் தேதி இதனை வாங்கிட முடியும். இந்த மாடலுக்கான விற்பனை ஜூலை 30-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

மற்றவர்கள் இந்த ஸ்கூட்டரை ஜூலை 31-ம் தேதியில் இருந்து வாங்கிட முடியும். இவர்களுக்கான விலை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒலா S1 ஏர் மாடலுக்கான வினியோகம் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் துவங்கும் என்று தெரிகிறது.
ஒலா S1 ஏர் மாடலில் ஹப்-மவுன்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இது 4.5 கிலோவாட் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
- பெனலி பைக் மாடல்களின் இந்திய விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
- பைக் மாடல்களின் விலை தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பெனலி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வில் மிடில்வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள்களான TRK 502 மற்றும் TRK 502X பாதிக்கப்பட்டு உள்ளன.
விலை உயர்வு காரணமாக பெனலி TRK 502 சீரிஸ் விலை தற்போது ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் முந்தைய விலை ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். அதன்படி இந்த மாடலின் விலை ரூ. 25 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

புதிய விலை விவரங்கள்:
பெனலி TRK 502 டார்க் கிரே ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502 வைட் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502 பிளாக் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502 கிரீன் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரம்
பெனலி TRK 502X டார்க் கிரே ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
பெனலி TRK 502X வைட் ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
பெனலி TRK 502X எல்லோ ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
பெனலி TRK 502X கிரீன் ரூ. 6 லட்சத்து 35 ஆயிரம்
புதிய பெனலி TRK 502 சீரிசின் அனைத்து மாடல்கள் விலையும் ஒரே மாதிரியே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெனலி TRK 502X சீரிசில் எல்லோ நிறம் தவிர மற்ற மாடல்கள் விலை ஒரே மாதிரியே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
விலை தவிர பெனலி TRK 502 சீரிஸ் மாடல்களில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடல்களில் 500சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 46.8 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
- ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மாடல் ஜெ சீரிஸ் என்ஜினுடன் அறிமுகமாகிறது.
- புதிய புல்லட் 350 மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய புல்லட் 350 மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய புல்லட் 350 மாடல் ஆகஸ்ட் 30-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய புல்லட் 350 மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அதன்படி புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடலில் ஜெ சீரிஸ் 349சிசி, சிங்கில் சிலின்டர் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதே என்ஜின் தற்போதைய கிளாசிக் 350, மீடியோர் 350 மற்றும் ஹன்டர் 350 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய புல்லட் 350 மாடலின் ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இன்றி, சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

புதிய மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டியர்-டிராப் வடிவம் கொண்ட பியூவல் டேன்க் மற்றும் 2-பீஸ் சீட் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. ஹார்டுவேரிலும் மாற்றங்கள் இன்றி டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஷாக்குகள் வழங்கப்படுகின்றன.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் மற்றும் ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் யூனிட் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய புல்லட் 350 மாடலில் ஸ்போக் வீல்கள், ரோட்-பயஸ்டு டயர்கள், ஸ்பீடுமீட்டர், ஒடோமீட்டர், சிறிய டிஜிட்டல் இன்செட் கொண்ட எளிமையான இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் வழங்கப்படுகிறது.
- டிவிஎஸ் ஐகியூப் மாடலில் 3.04 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
- டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறிய பேட்டரி மற்றும் குறைந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம்.
இந்திய எலெக்ட்ரிக் வாகன பிரிவில், அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் டிவிஎஸ் ஐகியூப் மாடல் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஒலா S1 சீரிஸ் முதலிடத்தில் இருக்கிறது. ஐகியூப் மாடலின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புது திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிவிஎஸ் நிறுவனம் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த ஃபேம் 2 திட்ட மானியம் குறைக்கப்பட்டு விட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரினை சற்றே சிறிய பேட்டரி மற்றும் குறைந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. தற்போதைய ஐகியூப் மாடலில் 3.04 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்தனை அம்சங்கள் மற்றும் விலை காரணமாகவும், ஐகியூப் மாடல் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது.
அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை தற்போதைய வேரியன்டை விட ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரம் வரை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.
- 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.
- 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் 199.6சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு என்ஜின் உள்ளது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2023 எக்ஸ்டிரீம் 200S 4V மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் மேம்பட்ட என்ஜின் மற்றும் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டரன்-பை-டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கால் மற்றும் எஸ்.எம்.எஸ். அலெர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டில்பார் ஒட்டுமொத்தமாக ஸ்போர்ட் ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது.

புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடல் மூன் எல்லோ, பேந்தர் பிளாக் மெட்டாலிக் மற்றும் ஸ்டெல்த் எடிஷன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 200S 4V மாடலில் 199.6சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு என்ஜின் மற்றும் ஹீரோ எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள என்ஜின் OBD2 மற்றும் E20 ரக எரிபொருளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.9 ஹெச்பி பவர், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய எக்ஸ்டிரீம் 200S 4V மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் 7-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.
- பிஎம்டபிள்யூ G 310 சீரிசில் G 310 R, G 310 RR மற்றும் G 310 GS போன்ற மாடல்கள் அடங்கும்.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது G 310 சீரிஸ் மாடல்களை புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியா சிறப்பான அரையாண்டு, காலாண்டு மற்றும் ஜூன் மாத விற்பனையை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. பிஎம்டபிள்யூ, மினி மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டராட் என மூன்று பிரான்டுகளும் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 4 ஆயிரத்து 667 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகம் ஆகும். பிஎம்டபிள்யூ இருசக்கர வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்தியதில், புதிய என்ட்ரி லெவல் G 310 சீரிஸ் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதில், G 310 R, G 310 RR மற்றும் G 310 GS போன்ற மாடல்கள் அடங்கும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட G 310 சீரிஸ், ஒட்டுமொத்த விற்பனையில் 90 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இவைதவிர பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் S 1000 RR, R 1250 GS/ GSA மற்றும் C400 GT போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
புதிய என்ட்ரி லெவல் மாடல்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் சிறப்பான நிதி சலுகைகளும் விற்பனை அதிகரிக்க காரணம் என்று பிஎம்டபிள்யூ மோட்டராட் தெரிவித்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது G 310 சீரிஸ் மாடல்களை புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், எப்போது வெளியாகும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- புதிய கேடிஎம் 390 டியூக் மாடலில் முற்றிலும் புதிய லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.
- புதிய மாடலில் IMU சார்ந்த லீன்-சென்சிடிவ் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படலாம்.
2024 கேடிஎம் 390 டியூக் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டை ஒட்டி, தொடர் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் அடுத்த தலைமுறை ஹஸ்க்வர்னா ஸ்வாட்பைலென் 401 மாடலுடன் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கேடிஎம் 390 டியூக் மாடல் அதன் இறுதிக்கட்ட டெஸ்டிங்கில் இருப்பதாக தெரிகிறது.
புதிய கேடிஎம் 390 டியூக் மாடலின் சர்வதேச வெளியீடு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA மிலன் மோட்டார் விழாவில் நடைபெற இருக்கிறது. புதிய கேடிஎம் 390 டியூக் மாடலில் முற்றிலும் புதிய லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 399சிசி யூனிட் ஆக இருக்கும் என்று தெரிகிறது. இதன் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Photo Courtesy: Shifting-Gears
இந்த என்ஜின் அதிக பவர் மற்றும் லோ-என்ட் டார்க் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுதவிர, இந்த பிரிவில் பல்வேறு அம்சங்களை புதிய கேடிஎம் 390 டியூக் மாடல் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் எலெக்டிரானிக் ஏய்டுகளும் வழங்கப்படுகிறது.
அதன்படி புதிய மாடலில் IMU சார்ந்த லீன்-சென்சிடிவ் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ரைடிங் மோட்கள், இருபுறமும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் வழங்கப்படும் என்று தெரிகிறது.
- நிதி சார்ந்த சலுகைகளை அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய விருப்பம் தெரிவிக்கின்றனர்.
- ஏத்தர் நிறுவனம் 60 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியை வழங்கி இருக்கிறது.
பெங்களூருவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர், ஏத்தர் எனர்ஜி 100 சதவீதம் நிதி சலுகை வழங்கும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஏத்தர் நிறுவனத்தின் வாகன விற்பனை அதிகரிக்கும் என்று ஏத்தர் எனர்ஜி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
100 சதவீதம் ஆன்-ரோடு நிதி சலுகையை வழங்குவதற்காக, ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், ஆக்சிஸ் வங்கி, ஹீரோ ஃபின்கார்ப் மற்றும் சோலமண்டலம் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

நிதி சார்ந்த சலுகைகளை அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்து வருவதை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உணர்ந்து கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் ஏத்தர் நிறுவனம் 60 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் ஏத்தர் ஸ்கூட்டருக்கான மாத தவணை மாதத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 999 என்று குறைந்துள்ளது.
"100 சதவீதம் ஆன்-ரோடு நிதி சலுகை, நீண்ட கால தவணை முறை போன்ற திட்டங்களுடன், ஏத்தர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை மேலும் குறைக்கும் நடவடிக்கையில் முன்னணியில் உள்ளது. இதன் மூலம் நாட்டில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை மேலும் அதிகப்படுத்த முடியும்," என்று ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் மூத்த அலுவலர் ரவ்னீத் பொகெலா தெரிவித்தார்.
- புதிய ஹோன்டா டியோ 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் உள்ளது.
- ஹோன்டா டியோ 125 மாடல் ஒட்டுமொத்தமாக ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது.
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியோ 125 சிசி ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியோ 125சிசி மாடல் ஸ்டான்டர்டு மற்றும் ஸ்மார்ட் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் விலை ரூ. 83 ஆயிரத்து 400 முதல் துவங்குகிறது.
புதிய ஹோன்டா டியோ 125 மாடலில் OBD2 விதிகளுக்கு பொருந்தும் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் eSP வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதே என்ஜின் ஹோன்டா கிரேசியா 125 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாடலில் இந்த யூனிட் 8.14 ஹெச்பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இந்த மாடல் தோற்றத்தில் 110சிசி ஹோன்டா டியோ போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலின் அப்ரனில் ஹெட்லைட், முன்புற இன்டிகேட்டர்கள், கூர்மையான டிசைன், ஸ்ப்லிட் ஸ்டைல் கிராப்ரெயில், டூயல் அவுட்லெட் எக்சாஸ்ட் உள்ளது.
இத்துடன் புதிய கிராஃபிக்ஸ், பிரம்மான்ட லோகோ வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஹோன்டா டியோ 125சிசி ஸ்கூட்டர்- பியல் சைரன் புளூ, பியல் டீப் கிரவுன்ட் கிரே, பியல் நைட் ஸ்டார் பிளாக், மேட் மார்வல் புளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் சங்கரியா ரெட் மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய ஹோன்டா டியோ 125சிசி மாடலில் எல்இடி ஹெட்லைட், ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர் மற்றும் என்ஜின் இன்ஹிபிட்டர், இன்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் பீம், பாசிங் ஸ்விட்ச், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் ஸ்மார்ட் கீ வேரியண்டில் H ஸ்மார்ட் தொழில்நுட்பம், ஸ்மார்ட் ஃபைன்ட், கீலெஸ் ஸ்டார்ட் மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனுக்கு- முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சிங்கில் ரியர் ஸ்ப்ரிங் உள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் டிரம் பிரேக்குகள், ஸ்மார்ட் வேரியண்டில் பெட்டல் ரக முன்புற டிஸ்க் பிரேக் உள்ளது.






