search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விற்பனையில் 2 லட்சம் யூனிட்களை கடந்த ஹன்டர் 350
    X

    விற்பனையில் 2 லட்சம் யூனிட்களை கடந்த ஹன்டர் 350

    • ராயல் என்பீல்டு ஹன்டர் 350 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடலில் 349சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் உலகளவில் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஹன்டர் 350 இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது.

    பிப்ரவரி 2023 மாதம் முதல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையான நிலையில், அடுத்த ஒரு லட்சம் யூனிட்கள் வெறும் ஐந்து மாதங்களில் விற்பனையாகி இருக்கிறது. இந்திய சந்தையில் 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களில் ஹன்டர் 350 விற்பனை அதிகளவு வளர்ச்சி பெற்று இருப்பதாக ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

    இந்தியா மட்டுமின்றி ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடல் இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அர்ஜென்டினா, கொலம்பியா, மெக்சிகோ, நியூசிலாந்து போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதன் விற்பனை பிரேசில் நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ராயல் என்பீல்டு ஹன்டர் 350 மாடலில் 349சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹன்டர் 350 மாடல் டிவிஎஸ் ரோனின், ஜாவா 42 மற்றும் ஹோன்டா ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×