search icon
என் மலர்tooltip icon

    பைக்

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சூப்பர் திட்டம் அறிவித்த ஏத்தர் எனர்ஜி
    X

    எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சூப்பர் திட்டம் அறிவித்த ஏத்தர் எனர்ஜி

    • நிதி சார்ந்த சலுகைகளை அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய விருப்பம் தெரிவிக்கின்றனர்.
    • ஏத்தர் நிறுவனம் 60 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியை வழங்கி இருக்கிறது.

    பெங்களூருவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர், ஏத்தர் எனர்ஜி 100 சதவீதம் நிதி சலுகை வழங்கும் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஏத்தர் நிறுவனத்தின் வாகன விற்பனை அதிகரிக்கும் என்று ஏத்தர் எனர்ஜி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

    100 சதவீதம் ஆன்-ரோடு நிதி சலுகையை வழங்குவதற்காக, ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், ஆக்சிஸ் வங்கி, ஹீரோ ஃபின்கார்ப் மற்றும் சோலமண்டலம் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    நிதி சார்ந்த சலுகைகளை அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்து வருவதை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உணர்ந்து கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் ஏத்தர் நிறுவனம் 60 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் ஏத்தர் ஸ்கூட்டருக்கான மாத தவணை மாதத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 999 என்று குறைந்துள்ளது.

    "100 சதவீதம் ஆன்-ரோடு நிதி சலுகை, நீண்ட கால தவணை முறை போன்ற திட்டங்களுடன், ஏத்தர் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை மேலும் குறைக்கும் நடவடிக்கையில் முன்னணியில் உள்ளது. இதன் மூலம் நாட்டில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை மேலும் அதிகப்படுத்த முடியும்," என்று ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் மூத்த அலுவலர் ரவ்னீத் பொகெலா தெரிவித்தார்.

    Next Story
    ×