என் மலர்
பைக்
- வருடாந்திர விற்பனையில் 131 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது.
- சுமார் 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து டிசம்பர் 21-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 647 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அந்த வகையில் ஒரே ஆண்டிற்குள் 2.5 லட்சம் யூனிட்களை விற்பனை செய்த முதல் எலெக்ட்ரிக் இருசக்கர நிறுவனமாக உருவெடுத்தது.
இதன் மூலம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வருடாந்திர விற்பனையில் 131 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் 1 லட்சத்து 09 ஆயிரத்து 395 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் 18 ஆயிரத்து 353 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், மார்ச் மாதத்தில் 21 ஆயிரத்து 434 யூனிட்களை ஓலா எலெக்ட்ரிக் விற்பனை செய்தது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சம் 29 ஆயிரத்து 898 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் 12 மாதங்கள் வரையிலான காலக்கட்டத்தில் ஓலா எலெக்ட்ரிக் சந்தை மதிப்பு 30.50 சதவீதமாக இருக்கிறது.
ஓலா தவிர்த்து டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 399 யூனிட்களையும், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 1 லட்சத்து 01 ஆயிரத்து 490 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு முறையே 19.60 மற்றும் 12.30 ஆக உள்ளது.
- ஸ்கூட்டர் வாங்குவோருக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.
- மிகக் குறைந்த வட்டியில் கடன் சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப்-இன் எலெக்ட்ரிக் வாகன பிரிவு "விடா" எனும் பெயரில் இயங்கி வருகிறது. மேலும் விடா பிராண்டின் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆண்டு இறுதியை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை இம்மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. இதில் ரொக்க பலன்கள், வாரண்டி மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ரூ. 8 ஆயிரத்து 259 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், ரூ. 7 ஆயிரத்து 500 வரை லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் அல்லது விடா வாடிக்கையாளர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமே லாயல்டி பலன்கள் பொருந்தும். இத்துடன் ரூ. 2 ஆயிரத்து 500 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு 5.99 சதவீதம் எனும் மிகக் குறைந்த வட்டியில் கடன் சலுகைகள் வழங்கப்படுகிறது.
விடா V1 ஸ்கூட்டரை மாத தவணையில் வாங்கும் போது இதர கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மாத தவணையாக மாதம் ரூ. 2 ஆயிரத்து 429-இல் இருந்து வாங்கிட முடியும். நிதி சார்ந்த பலன்களை வழங்குவதற்காக விடா பிராண்டு ஐ.டி.எஃப்.சி., இகோஃபை மற்றும் ஹீரோ ஃபின்கார்ப் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்திய சந்தையில் விடா V1 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் என துவங்குகிறது. விடா V1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
- 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.
- ஏத்தர் நிறுவனம் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ. 24 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகின்றன.
இதில் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 1500 வரை கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரூ. 12 ஆயிரம் வரையிலான சேமிப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுப்படும். "ஏத்தர் ப்ரோடெக்ட் டி.எம்." பெயரில் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் 5 ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களது மாடல்களுக்கு சலுகைகளை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
டிசம்பர் மாத சலுகைகள் தவிர ஏத்தர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய 450X அபெக்ஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது ஏத்தர் இதுவரை அறிமுகம் செய்ததிலேயே விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- ஜாவா, யெஸ்டி மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு.
- டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளன. இந்த சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை நீட்டிக்கப்பட்ட வாரண்டி, மாத தவணை சலுகை, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் ஜாவா 42 சிங்கில் டோன் மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடல்களை வாங்க நினைப்போர் தங்களது பழைய மோட்டார்சைக்கிளை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட ரைடிங் கியர் மற்றும் அக்சஸரீக்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டிசம்பரில் ஜாவா அல்லது யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை வாங்குவோர் நான்கு ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வாங்கிட முடியும். இத்துடன் ஐ.டி.எஃப்.சி. வங்கி மூலம் ஜாவா மற்றும் யெஸ்டி மாடல்களுக்கு மாதம் ரூ. 1888 முதல் மாத தவணை சலுகை வழங்கப்படுகிறது.
ஜாவா பிராண்டு ஜாவா 300, ஜாவா 42, ஜாவா 42 பாபர் மற்றும் ஜாவா பெராக் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. யெஸ்டி பிராண்டின் கீழ் யெஸ்டி ரோட்ஸ்டர், யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மற்றும் யெஸ்டி அட்வென்ச்சர் என மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
- கவாசகி W175 மாடலின் புது வேரியண்ட் W175 ஸ்டிரீட் பெயரில் அறிமுகம்.
- கவாசகி W175 மாடல் புதிய நிறங்களில் கிடைக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய W175 மோட்டார்சைக்கிள் விலை இந்திய சந்தையில் குறைக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் கவாசகி W175 மாடலின் புது வேரியண்ட் W175 ஸ்டிரீட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கவாசகி W175 மாடலின் ஸ்டாண்டர்டு வேரியண்ட் விலை தற்போது ரூ. 25 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது விலை குறைப்பின் படி இந்த மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் என துவங்கி ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் என மாறி இருக்கிறது.

விலை குறைப்பு மட்டுமின்றி கவாசகி W175 மாடல் புதிய நிறங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், கவாசகி W175 மெட்டாலிக் ஓசன் புளூ மற்றும் மெட்டாலிக் கிராஃபைட் கிரே என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் ஆகும்.
இந்த இரண்டு நிறங்களும், எபோனி மற்றும் கேன்டி பெர்சிமோன் ரெட் நிறங்களுடன் இணைகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் ஆகும். விலை குறைப்பு தவிர இந்த மாடலின் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையிலானது ஆகும்.
- புதிய ஸ்டிரீட் மாடல் விலை சற்றே அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த மாடலில் 177சிசி, ஏர் கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனம் தனது குறைந்த விலை மோட்டார்சைக்கிளின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. W175 ஸ்டிரீட் என அழைக்கப்படும் புதிய கவாசகி பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கவாசகி W175 ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 12 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
புதிய கவாசகி W175 ஸ்டிரீட் மாடலில் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் வயர் ஸ்போக் வீல்கள் மற்றும் டியூப் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு மாடல்களின் வீல்கள் மற்றும் டயர்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய ஸ்டிரீட் மாடலின் சீட் உயரம், கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் வீல்பேஸ் உள்ளிட்டவைகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கவாசகி W175 ஸ்டிரீட் மாடலிலும் 177சிசி, ஏர் கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13 ஹெச்.பி. பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலிலும் ஹாலோஜன் ஹெட்லைட் உள்ளது. புதிய கவாசகி W175 ஸ்டிரீட் மாடலின் தற்போதைய விலை அறிமுக சலுகையாகவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனினும், இந்த விலை எத்தனை யூனிட்களுக்கு பொருந்தும், எவ்வளவு காலத்திற்கு பொருந்தும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இதேபோன்று இந்த மாடலின் முன்பதிவு மற்றும் வினியோகம் எப்போது துவங்கும் என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை.
- ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என தகவல்.
- இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த 400சிசி பைக் ஆகும்.
கவாசகி இந்தியா நிறுவனம் தனது நின்ஜா 400 மோட்டார்சைக்கிளுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி டிசம்பர் மாதம் முழுக்க நின்ஜா 400 மாடலை வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான வவுச்சர் வழங்கப்படுகிறது.
எனினும், இதன் மதிப்பு மோட்டார்சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை மற்றும் ஜி.எஸ்.டி. வரிகள் பொருத்து வேறுப்படும் என்று தெரிகிறது. மேலும் இவை ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கவாசகி நின்ஜா 400 மாடல் நின்ஜா 300 மற்றும் நின்ஜா 650 மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 5 லட்சத்து 24 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த 400சிசி மோட்டார்சைக்கிள் மாடலாக கவாசகி நின்ஜா 400 இருக்கிறது.
நின்ஜா 400 மாடலில் ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லைட், டிரான்ஸ்பேரண்ட் வைசர் இடம்பெற்று இருக்கிறது. இதில் உள்ள 399சிசி டுவின் சிலிண்டர் மோட்டார் 47.5 ஹெச்.பி. பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் கவாசகி நின்ஜா 400 மாடல் கே.டி.எம். ஆர்.சி. 390, டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர். 310 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும்.
- உலகத்தரம் வாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்தும்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 450 அபெக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது. டீசரின் படி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிவேக செயல்திறன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
புதிய ஏத்தர் ஸ்கூட்டரின் பெயர் "அபெக்ஸ்" என்று சூட்டப்பட்டு இருப்பதை ஒட்டி, இந்த மாடல் குறைந்த நேரத்தில் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டிருக்கலாம் என தெரிகிறது. தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஏத்தர் 450X மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும்.

அந்த வகையில் புதிய ஏத்தர் 450 அபெக்ஸ் மாடல் உலகத்தரம் மிக்க செயல்திறனை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.
- ஸ்டாண்டர்டு மாடலுடன் 1390 சூப்பர் டியூக் R இவோ மாடலும் அறிமுகம்.
- சூப்பர் டியூக் மாடலில் 1350சிசி என்ஜின் உள்ளது.
கே.டி.எம். நிறுவனம் தனது 1390 சூப்பர் டியூக் R மாடலை அறிமுகம் செய்தது. புதிய சூப்பர் டியூக் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அதன் ஹெட்லைட் உள்ளது. டியூக் 990 மாடலில் உள்ள புது ஹெட்லைட் இந்த மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலுடன் 1390 சூப்பர் டியூக் R இவோ மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சூப்பர் டியூக் மாடலில் 1350சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 110mm போர் உள்ளது. அந்த வகையில் இந்த என்ஜின் 190 ஹெச்.பி. பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலில் உள்ள என்ஜினை விட 10 ஹெச்.பி. மற்றும் 5 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும்.

2024 கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் R மாடலில் 17.5 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளது. இந்த மாடலில் மெயின் ஃபிரேம், சஸ்பென்ஷன் யூனிட்கள் மற்றும் பிரேக்கிங் ஹார்டுவேர் உள்ளிட்டவை முந்தைய 1290 சூப்பர் டியூக் R மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய சூப்பர் டியூக் மாடலில்- ரெயின், ஸ்டிரீட், ஸ்போர்ட், பெர்ஃபார்மன்ஸ் மற்றும் டிராக் என ஐந்து ரைடிங் மோட்கள் உள்ளன. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் கே.டி.எம். கனெக்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வீலி கண்ட்ரோல் அம்சங்கள் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது.

2024 கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் R இவோ மாடலில் செமி ஆக்டிவ் WP சஸ்பென்ஷன் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் புதிதாக ஃபேக்டரி லான்ச் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் இரு மாடல்களிடையே பெரிய வித்தியாசம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இவோ மாடலின் ஃபோர்க்கில் மட்டும் புளூ நிற ஸ்டிரைப் உள்ளது.
- அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த முயற்சி.
- உற்பத்தி மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரிப்பு.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஐ.சி. என்ஜின் மாடல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
எலெக்ட்ரிக் மற்றும் அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் முயற்சியில் டி.வி.எஸ். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் டி.வி.எஸ். நிறுவனம் எதிர்காலத்தில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டி.வி.எஸ். நிறுவனம் 5 கிலோவாட் முதல் 25 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
டி.வி.எஸ். நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டிலேயே டி.வி.எஸ். நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டி.வி.எஸ். எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
- ஸ்பெஷல் எடிஷன் மாடல் மொத்தத்தில் 25 யூனிட்களே உருவாக்கப்பட இருக்கின்றன.
- இதுபோன்ற யூனிட்கள் இதற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட மாட்டாது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிய ஷாட்கன் 650 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. இந்த பைக் அறிமுகம் செய்யப்படும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஷாட்கன் 650 பற்றிய அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதிய ஷாட்கன் 650 மாடலின் மோட்டோவெர்ஸ் எடிஷன் மொத்தத்தில் 25 யூனிட்களே உருவாக்கப்பட இருக்கின்றன. ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிஷன் விலை ரூ. 4 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலின் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் மோட்டோவெர்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் அதிர்ஷ்டசாலிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஷாட்கன் 650 மாடல் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ப்ரோடக்ஷன் வெர்ஷனின் விலை சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.
ஷாட்கன் 650 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2021 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்த SG650 கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஷாட்கன் 650 மோட்டாவெர்ஸ் எடிஷன் மாடலில் பிரத்யேக வடிவமைப்பில் கைகளால் பெயிண்ட் செய்யப்பட்ட பாடி பேனல்கள், கிரேடியன்ட் ஸ்டைல் கிராஃபிக்ஸ் மற்றும் நியான் டீ-டெயிலிங் உள்ளிட்டவை சிறப்பம்சமாக உள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிஷனின் 25 யூனிட்களும் கடந்த பல மாதங்களாக சிறப்பு கவனமுடன் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதுபோன்ற யூனிட்கள் இதற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட மாட்டாது என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.
புதிய ஷாட்கன் 650 மாடலிலும் சூப்பர் மீடியோர் 650 மாடலில் உள்ளதை போன்ற சேசிஸ் வழங்கப்பட்டு உள்ளது. எனினும், வித்தியாசமான வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாடலிலும் 649சிசி, ஏர்/ஆயில் கூல்டு, பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- டி.வி.எஸ். நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்.
- உள்நாட்டு விற்பனையில் டி.வி.எஸ். நிறுவனம் 25.01 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச விற்பனையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக யூனிட்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது.
2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிருவனம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 292 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு விற்பனையான 3 லட்சத்து 43 ஆயிரத்து 614 யூனிட்களை விட அதிகம் ஆகும். இதுதவிர மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடும் போது, 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனையான 3 லட்சத்து 85 ஆயிரத்து 443 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

இதன் மூலம் டி.வி.எஸ்.-இன் உள்நாட்டு விற்பனை 25.01 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் அதிகம் விற்பனையான மாடல்களில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த மாடல் 91 ஆயிரத்து 824 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 19.19 சதவீதம் அதிகம் ஆகும்.






