search icon
என் மலர்tooltip icon

    பைக்

    மிரட்டல் லுக்.. வேற லெவல் பவர்.. 2024 கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் R அறிமுகம்
    X

    மிரட்டல் லுக்.. வேற லெவல் பவர்.. 2024 கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் R அறிமுகம்

    • ஸ்டாண்டர்டு மாடலுடன் 1390 சூப்பர் டியூக் R இவோ மாடலும் அறிமுகம்.
    • சூப்பர் டியூக் மாடலில் 1350சிசி என்ஜின் உள்ளது.

    கே.டி.எம். நிறுவனம் தனது 1390 சூப்பர் டியூக் R மாடலை அறிமுகம் செய்தது. புதிய சூப்பர் டியூக் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அதன் ஹெட்லைட் உள்ளது. டியூக் 990 மாடலில் உள்ள புது ஹெட்லைட் இந்த மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலுடன் 1390 சூப்பர் டியூக் R இவோ மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய சூப்பர் டியூக் மாடலில் 1350சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 110mm போர் உள்ளது. அந்த வகையில் இந்த என்ஜின் 190 ஹெச்.பி. பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலில் உள்ள என்ஜினை விட 10 ஹெச்.பி. மற்றும் 5 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும்.

    2024 கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் R மாடலில் 17.5 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளது. இந்த மாடலில் மெயின் ஃபிரேம், சஸ்பென்ஷன் யூனிட்கள் மற்றும் பிரேக்கிங் ஹார்டுவேர் உள்ளிட்டவை முந்தைய 1290 சூப்பர் டியூக் R மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய சூப்பர் டியூக் மாடலில்- ரெயின், ஸ்டிரீட், ஸ்போர்ட், பெர்ஃபார்மன்ஸ் மற்றும் டிராக் என ஐந்து ரைடிங் மோட்கள் உள்ளன. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் கே.டி.எம். கனெக்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வீலி கண்ட்ரோல் அம்சங்கள் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது.

    2024 கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் R இவோ மாடலில் செமி ஆக்டிவ் WP சஸ்பென்ஷன் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் புதிதாக ஃபேக்டரி லான்ச் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் இரு மாடல்களிடையே பெரிய வித்தியாசம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இவோ மாடலின் ஃபோர்க்கில் மட்டும் புளூ நிற ஸ்டிரைப் உள்ளது.

    Next Story
    ×