search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விலை பயமா இருக்கு.. ஸ்பெஷல் டிசைனுடன் Hand Paint செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்..
    X

    விலை பயமா இருக்கு.. ஸ்பெஷல் டிசைனுடன் Hand Paint செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்..

    • ஸ்பெஷல் எடிஷன் மாடல் மொத்தத்தில் 25 யூனிட்களே உருவாக்கப்பட இருக்கின்றன.
    • இதுபோன்ற யூனிட்கள் இதற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட மாட்டாது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிய ஷாட்கன் 650 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. இந்த பைக் அறிமுகம் செய்யப்படும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஷாட்கன் 650 பற்றிய அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புதிய ஷாட்கன் 650 மாடலின் மோட்டோவெர்ஸ் எடிஷன் மொத்தத்தில் 25 யூனிட்களே உருவாக்கப்பட இருக்கின்றன. ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிஷன் விலை ரூ. 4 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலின் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் மோட்டோவெர்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் அதிர்ஷ்டசாலிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஷாட்கன் 650 மாடல் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ப்ரோடக்ஷன் வெர்ஷனின் விலை சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.

    ஷாட்கன் 650 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2021 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்த SG650 கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஷாட்கன் 650 மோட்டாவெர்ஸ் எடிஷன் மாடலில் பிரத்யேக வடிவமைப்பில் கைகளால் பெயிண்ட் செய்யப்பட்ட பாடி பேனல்கள், கிரேடியன்ட் ஸ்டைல் கிராஃபிக்ஸ் மற்றும் நியான் டீ-டெயிலிங் உள்ளிட்டவை சிறப்பம்சமாக உள்ளது.

    தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிஷனின் 25 யூனிட்களும் கடந்த பல மாதங்களாக சிறப்பு கவனமுடன் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதுபோன்ற யூனிட்கள் இதற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட மாட்டாது என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

    புதிய ஷாட்கன் 650 மாடலிலும் சூப்பர் மீடியோர் 650 மாடலில் உள்ளதை போன்ற சேசிஸ் வழங்கப்பட்டு உள்ளது. எனினும், வித்தியாசமான வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாடலிலும் 649சிசி, ஏர்/ஆயில் கூல்டு, பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×