search icon
என் மலர்tooltip icon

    பைக்

    டிசம்பர் ஸ்பெஷல் - நின்ஜா 300-க்கு விசேஷ சலுகை அறிவித்த கவாசகி
    X

    டிசம்பர் ஸ்பெஷல் - நின்ஜா 300-க்கு விசேஷ சலுகை அறிவித்த கவாசகி

    • ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என தகவல்.
    • இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த 400சிசி பைக் ஆகும்.

    கவாசகி இந்தியா நிறுவனம் தனது நின்ஜா 400 மோட்டார்சைக்கிளுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி டிசம்பர் மாதம் முழுக்க நின்ஜா 400 மாடலை வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான வவுச்சர் வழங்கப்படுகிறது.

    எனினும், இதன் மதிப்பு மோட்டார்சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை மற்றும் ஜி.எஸ்.டி. வரிகள் பொருத்து வேறுப்படும் என்று தெரிகிறது. மேலும் இவை ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


    கவாசகி நின்ஜா 400 மாடல் நின்ஜா 300 மற்றும் நின்ஜா 650 மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 5 லட்சத்து 24 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த 400சிசி மோட்டார்சைக்கிள் மாடலாக கவாசகி நின்ஜா 400 இருக்கிறது.

    நின்ஜா 400 மாடலில் ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லைட், டிரான்ஸ்பேரண்ட் வைசர் இடம்பெற்று இருக்கிறது. இதில் உள்ள 399சிசி டுவின் சிலிண்டர் மோட்டார் 47.5 ஹெச்.பி. பவர், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் கவாசகி நின்ஜா 400 மாடல் கே.டி.எம். ஆர்.சி. 390, டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர். 310 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×