Navratri Special: நவராத்திரி 7-ம் நாள்... தீர்க்காயுசு அருளும் பிராம்மி
- பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள் பிராம்மி.
- தாழம்பூ, தும்பை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொண்டு பூஜிக்க வேண்டும்.
நவராத்திரியின் ஏழாம் நாளன்று அன்னை பராசக்தி, பிராம்மியாக வழிபாடு செய்யப்படுகிறாள். பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள் பிராம்மி. நான்கு கரங்களை கொண்டு அன்னப்பறவையில் வீற்றிருப்பவள். வெண்ணிற ஆடை தரித்தவள். தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்.
பிராம்மியை வழிபட மலர் கொண்டு திட்டாணி கோலம் போட வேண்டும். நல்லெண்ணெய் கொண்டு 19 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். தாழம்பூ, தும்பை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொண்டு பூஜிக்க வேண்டும்.
"பிராம்மி தாயே கலைமகள் நீயே! அருள் நவராத்திரி ஆண்டருள் வாயே ஏழாம் நாள் இன்று உன் திருக்காட்சி இன்னும் இருநாள் உனதருளாட்சியே" என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.
பிராம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சனி.எனவே பிராம்மியை வழிபடுவதன் மூலம் சனி தோஷம் நிவர்த்தியாகும். கர்ம வினைகள் தீரும், நிலையான தொழில் சிறக்கச் செய்வாள். தீர்க்க ஆயுசு வாழ அருள் புரிவாள்.