Navratri Special: நவராத்திரி 9-ம் நாளில் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடையின் நிறம்...
- வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள்.
- தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.
நவராத்திரி விழாவில் தேவியை ஒன்பதாவது நாளில் நாம் சித்திதாத்ரி என்ற பெயரில் வழிபடுகிறோம். சித்தி என்றால் வெற்றி என்று பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். தாத்ரி என்றால் தருபவள் என்று பொருள். சித்திதாத்ரி என்றால் அனைத்திலும் வெற்றியை தருபவள் என பொருள்.
நவராத்திரியின் 9 ஆம் நாளில் அம்பிகையை மகேஸ்வரி என்ற ரூபத்திலும், நவதுர்க்கை வழிபாட்டில் சித்திதாத்ரி என்ற பெயரிலும் வழிபடுகிறோம். இன்று தாமரை வகை கோலமிட்டு அம்பிகையை வழிபடலாம். தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.
சித்திதாத்ரி தேவியை வழிபடுவதால் வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள். வாழ்க்கையில் எல்லாம் கிடைத்து விட்டது என்றால், அதற்கு பிறகு ஒவ்வொரு மனிதனும் வேண்டுவது மன நிம்மதியை தான். அந்த நிறைவான நிம்மதியை இந்த அம்பிகை நமக்கு அருள்வாள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் பக்தர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் அன்றைய நாளில் நம்பிக்கை, எழுச்சி மற்றும் அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வரையறுக்கிறது. நவராத்திரி கொண்டாட்டத்தின் போது இளஞ்சிவப்பு நிறத்தை அணிவது உங்களை வசீகரமாகவும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. அதே நேரத்தில் உலகளாவிய அன்பின் அருளையும் உங்களுக்கு வழங்குகிறது.