Navratri Special: நவராத்திரி 9-ம் நாள்... வெற்றி தரும் சாமுண்டி
- அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும்.
- சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது.
நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று அன்னை பராசக்தி சாமுண்டியாக வழிபாடு செய்யப்படுகிறாள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். தர்மத்தை நிலைநாட்டுபவள். நம்மை காத்து அருளக்கூடியவள்.
சாமுண்டியை வழிபட கலர் கோலமாவினால் ஆயுதம் கோலம் போட வேண்டும். 77 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். பஞ்சு திரி 56 போட்டு எள் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும். தாமரை மல்லிகை பூக்கள் மற்றும் மரிக்கொழுந்து கொண்டு பூஜிக்க வேண்டும்.
"கௌரி அன்னை மேனியிலே கருவாகி மலர்ந்தவளே! நவராத்திரி ஒன்பதாம் நாள் நலம் கூட்டும் கலைமகளே தாயே நீ அன்பு வைத்தால் பார்முழுதும் எனைப்புகழும் ஏழிசையும் என்பாட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்."
என பாடி துதிக்க வேண்டும்.
சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது. எனவே சாமுண்டியை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நிவர்த்தியாகும். உள்ளுணர்வு மேம்படும், மன தைரியத்துடன் பணிகளை மேற்கொள்ளும் திறன் கிடைக்கும். பேச்சுக்கலை மேம்படும். எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் உறுதியான சக்தி தருவாள். மக்களை கவரும் ஆற்றலைத் தருவாள்.