நவராத்திரி ஸ்பெஷல்

Navratri Special: நவராத்திரி 8-ம் நாள்... வீரமருளும் நரசிம்மி வழிபாடு

Published On 2025-09-29 14:40 IST   |   Update On 2025-09-29 14:40:00 IST
  • நரசிம்மியை பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
  • நரசிம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ராகு.

நவராத்திரியின் எட்டாம் நாளன்று அன்னை பராசக்தி, நரசிம்மியாக வழிபாடு செய்யப்படுகிறாள். நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள். நரசிம்மி மனித உடலும், சிங்க முகமும் கொண்டவள். சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பவள். எதிரிகளை அழித்து நம்மை காத்து அருளக்கூடியவள்.

நரசிம்மியை வழிபட காசு கொண்டு தாமரை கோலம் போட வேண்டும். 18 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். எள் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும். பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

"நாமகளே சரஸ்வதியே நான்முகனின் நாயகியே!

நாடி வந்தோம் சந்நிதியே நம்பி வந்தோம் அம்பிகையே! அம்புடன் வில் சங்கு சக்கரம் மணிசூலம் உடையவளே சும்பன் வதம் புரிந்தவளே சுடர்விழியே மலர்மகளே."

என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.

நரசிம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ராகு. எனவே நரசிம்மியை வழிபடுவதன் மூலம் ராகு தோஷம் நிவர்த்தியாகும். வெளிநாடு அல்லது வெளிநாட்டுத் துறைகளில் இருந்து தொழில் மற்றும் வியாபார வாய்ப்புகளை வழங்குவாள். மனதில் உற்சாகம் பிறக்கும், அரசு வழியில் ஆதரவு கிடைக்கும், எதிர்பாராத திடீர் செல்வத்தையும், புகழையும் தருவாள்.

Tags:    

Similar News