நவராத்திரி ஸ்பெஷல்

Navratri special: நவராத்திரி 8-ம் நாளில் செய்ய வேண்டிய பிரசாதம்..!

Published On 2025-09-29 10:32 IST   |   Update On 2025-09-29 10:32:00 IST
  • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
  • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

அதன்படி, நவராத்திரியின் 8வது நாளான இன்று நவதானிய சுண்டல், மாங்காய் சாதம், அரிசி கீர் செய்து மகாகௌரி தேவிக்கு படைக்கலாம். முதலில், நவதானிய சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

நவதானிய சுண்டல்

தேவையான பொருட்கள்:

நவதானியங்கள் (கொண்டைக்கடலை, பாசிப்பயறு, துவரம்பருப்பு, எள்ளு, மொச்சை, தட்டைப்பயறு, உளுந்து, கடலைப்பருப்பு, காராமணி போன்ற ஒன்பது தானியங்கள்)

தேங்காய் துருவல்

கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை

சமையல் எண்ணெய்

பெருங்காயத்தூள்

எலுமிச்சை சாறு

உப்பு

 செய்முறை:

* நவதானியங்களை தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ, குறைந்தது 6-8 மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஊறவைத்த தானியங்களை குக்கரில் உப்பு சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.

* வெந்த தானியங்களை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* பின்னர், வேகவைத்த தானியங்களை சேர்த்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

* கடைசியாக, தேங்காய் துருவல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சத்தான நவதானிய சுண்டல் தயார்.

மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம்

பச்சை மாங்காய்

எண்ணெய்

கடுகு

உளுத்தம்பருப்பு

கடலைப்பருப்பு

வேர்க்கடலை

பச்சை மிளகாய்

இஞ்சி

பெருங்காயம்

கறிவேப்பிலை

மஞ்சள் தூள்

உப்பு

கொத்தமல்லி தழை.

 செய்முறை:

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

* கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

* அதனுடன் வேர்க்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

* மாங்காயின் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்க்கவும்.

* மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மாங்காய் மென்மையாகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.

* வடித்த சாதத்தை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து, மாங்காய் கலவையை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

* சாதம் கலவையை நன்றாக கலந்த பிறகு, கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.

அரிசி கீர்

தேவையான பொருட்கள்

சாமா அரிசி (பார்ன்யார்ட் மில்லெட்) - 1/4 கப்

பால் - 2 1/2 கப்

குங்குமப்பூ - சில இழைகள்

சர்க்கரை - 1/4 முதல் 1/2 கப் (உங்கள் இனிப்பு சுவைக்கு ஏற்ப)

நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி - சிறிதளவு

ஏலக்காய் தூள் - 1/4 முதல் 1/2 டீஸ்பூன்

 

செய்முறை

* சாமா அரிசியை நன்றாக கழுவி, போதுமான நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

* ஒரு கனமான பாத்திரத்தில் பாலை மிதமான சூட்டில் வைத்து சூடாக்கவும்.

* பால் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

* குங்குமப்பூ இழைகள், நறுக்கிய பாதாம், மற்றும் முந்திரி சேர்த்து கிளறவும்.

* அரிசி நன்கு வெந்து, பால் கெட்டியாகும் வரை மிதமான தீயில் அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும்.

* அரிசி வெந்ததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.

* கீர் சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறவும். 

Tags:    

Similar News