உலகம்

ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக ஐ.நாவில் குரல் கொடுத்த இந்தியா.. பாகிஸ்தான் மீது பாய்ச்சல்

Published On 2025-12-11 15:19 IST   |   Update On 2025-12-11 15:19:00 IST
  • குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
  • கடினமான சூழ்நிலைகளில் மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் ஒரு பலவீனமான நாடு.

ஆப்கானிஸ்தான் மீது சமீபத்தில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பாது காப்பு கவுன்சிலில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் தூதர் ஹரிஷ் பேசியதாவது:-

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியதால் அப்பாவி பெண்கள், குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

இந்தத் தாக்குதல்கள் ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். அப் பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முழு மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களுக்காக எல்லை தாண்டிய போக்குவரத்தை நம்பியிருக்கும் ஆப்கானிஸ் தானுக்கான முக்கிய வழிகளை பாகிஸ்தான் மூடியுள்ளது.

இது வர்த்தகம் மற்றும் போக்குவரத்து பயங்கரவாதம் ஆகும். இதுபோன்ற நடவடிக்கைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாகும்.

மேலும் கடினமான சூழ்நிலைகளில் மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் ஒரு பலவீனமான நாட்டிற்கு எதிரான வெளிப்படையான அச்சுறுத்தல்கள் மற்றும் போர்ப்செயல்களுக்கு சமமானவை ஆகும் என்று தெரிவித்தார்.  

Tags:    

Similar News