அடேங்கப்பா... சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்த நபர்

தங்கம் விலை தொடர்ந்து விலை ஏறி வருகிறது. ஒரு சிம் கார்டில் 0.001 கிராம் அளவுக்கு தான் தங்கம் இருக்கும்
அடேங்கப்பா... சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்த நபர்
Published on

தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.

அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2560 உயர்ந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சீனாவில் பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது எப்படி என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சீனாவில் பழைய பொருட்களில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் கியாவோ என்ற நபர், தூக்கி வீசப்பட்ட பழைய சிம் கார்டுகள் உட்பட பல மின்னணு கழிவுகளில் இருந்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்துள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உலகையே மிரள செய்திருக்கிறது. ஒரு சிம் கார்டில் 0.001 கிராம் அளவுக்கு தான் தங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com