உலகம்

எப்ஸ்டின் விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி விசாரணைக்கு ஒத்துழைப்பு

Published On 2026-02-04 09:01 IST   |   Update On 2026-02-04 09:01:00 IST
  • ஜெப்ரி எப்ஸ்டின், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
  • விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என பில் கிளிண்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டின், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அவருடன் உலக நாடுகளின் பல முக்கியத் தலைவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகப் புகார்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.

சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெஞ்ஜமின் மேன்டல்சன் (வயது 74) ஒரு சிறுமியுடன் நெருக்கமாக இருக்கும் படம் வெளியானது. இதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் எப்ஸ்டினுக்குச் சொந்தமான ரகசியத் தீவுகளுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் பலமுறை அவரது தனி விமானத்தில் பயணம் செய்ததற்கான ஆவணங்கள் வெளியாகின.

இது தொடர்பாகத் தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் பகிர்ந்து கொள்ளவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் அடுத்தடுத்து பல அதிரடித் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News